Thursday, July 30, 2009

எல்லாம் சும்மா...

காத்துக் கிடப்பதிலேயே
வாழ்வின் காலம் கழிந்தபடி.

கரு தாண்டி வெளி உலகம் வர
அம்மாவின் முகம் காண
அப்பாவைச் சந்திக்க
இயற்கையை சுவாசிக்க
நடக்கப் பயில
பேசிப் பழக
பாடசாலை போக
பள்ளி படிக்க
காதலி தேட
வானத்தை வில்லாய் வளைக்க
காற்றோடு ஊர்வலம் போக
உத்தியோகம் பார்க்க
கல்யாணம் பண்ணிக்கொள்ள
கனவுகளைத் தூரம் தள்ள
குழந்தை பெற்றுக்கொள்ள
எதிர்காலத்தை எதிர்த்துப் பேச
பணம் சேர்க்க
வீடு கட்ட
உறவுகளுக்காக
உரிமைகளுக்காக என்றபடி
எத்தனை...எத்தனையோ...

இதற்குள்...
இறைவனும் காத்திருக்கிறான்
தந்த உயிரைத்
திரும்பவும் எடுத்துக் கொள்ள.

இதற்கு நடுவில்...
மனிதனின் காத்திருப்புக்கள்
அர்த்தமே இல்லாமல் !!!

ஹேமா(சுவிஸ்)

52 comments:

  1. /*இதற்குள்...
    இறைவனும் காத்திருக்கிறான்
    தந்த உயிரைத்
    திரும்பவும் எடுத்துக் கொள்ள.

    இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல் !!!
    */
    அருமை

    ReplyDelete
  2. நல்லாருக்குங்க

    //எதிகாலத்தை கருத்தாண்டி//

    தட்டச்சு பிழைகள்னு நினைக்கிறேன் கொஞ்சம் பாருங்க..!
    :)

    ReplyDelete
  3. காத்திருப்புகளுக்கு அர்த்தமுண்டு ஹேமா!

    இடம் பொருள் ஏவல் எல்லாவிடத்திலையும் பொறுந்தும்.

    ReplyDelete
  4. ஹேமா...,

    எல்லா வரிகளும் உயிருக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கும் போது எந்த வரியை " நல்லாருக்கு ", என நான் குறிப்பிட்டுச் சொல்வது. ஒரு சில தட்டச்சுப் பிழைகளைத் தவிர.
    ******

    //கருத்தாண்டி என்பது "கரு தாண்டி" என்றிருக்க வேண்டும்.
    ...
    இயற்கையைச் சுவாசிக்க ... இதில் "ச்" ஐ நீக்கி விடுங்கள்

    ReplyDelete
  5. //காத்துக் கிடப்பதிலேயே
    வாழ்வின் காலம் கழிந்தபடி.

    ........................
    '.......................
    ....................
    ......................

    இதற்குள்...
    இறைவனும் காத்திருக்கிறான்
    தந்த உயிரைத்
    திரும்பவும் எடுத்துக் கொள்ள.

    இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல் !!!//

    அருமை.அருமை.

    //கருத்தாண்டி வெளி உலகம் வர
    அம்மாவின் முகம் காண
    அப்பாவைச் சந்திக்க
    இயற்கையைச் சுவாசிக்க
    நடக்கப் பயில
    பேசிப் பழக
    பாடசாலை போக
    பள்ளி படிக்க
    காதலி தேட
    வானத்தை வில்லாய் வளைக்க
    காற்றோடு ஊர்வலம் போக
    உத்தியோகம் பார்க்க
    கல்யாணம் பண்ணிக்கொள்ள
    கனவுகளைத் தூரம் தள்ள
    குழந்தை பெற்றுக்கொள்ள
    எதிர்காலத்தை எதிர்த்துப் பேச
    பணம் சேர்க்க
    வீடு கட்ட
    உறவுகளுக்காக
    உரிமைகளுக்காக என்றபடி
    எத்தனை...எத்தனையோ...//

    எல்லாம் சும்மா.... என கூறி அனைத்து காத்திருப்புகளையும் அழகாக வரிசைப்படுத்திவிட்டீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Manithanin Kaathiruppuhal artham illaamal-Fantastic Hema.

    ReplyDelete
  7. அருமையாக சொல்லி இருக்கீங்க வாழ்வின் தத்துவத்தை.

    ReplyDelete
  8. காத்திருப்பு இல்லாவிடிம் வாழ்வில் சுவராஸ்யம் இருக்காது....

    ReplyDelete
  9. இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல் !!
    அருமை
    இலங்கையில் இருந்து யாதவன்

    ReplyDelete
  10. //இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல் //

    அர்த்தமே இல்லாமல்?

    ஒரு விதத்தில் அர்த்தமே இல்லாதமாதிரத்தான் தெரியுது.ஆனால் சில நேரம் அர்தமுள்ளதாகவும் இருக்கிறது. நல்ல கவிதை

    ReplyDelete
  11. அட ஆமால்ல...
    அதான் இறைவனை வேண்ட சொல்லுறாங்களோ ...


    ------------------------------------------------------------------

    மிக அருமையான பதிவு ஹேமா.
    நன்றி.
    இரவி

    ReplyDelete
  12. இதற்குள்...
    இறைவனும் காத்திருக்கிறான்
    தந்த உயிரைத்
    திரும்பவும் எடுத்துக் கொள்ள.
    இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல் !!!

    நிதர்சனம் ...

    ReplyDelete
  13. ஒரு கவிதையிலையே வாழ்க்கைய அடச்சு வெச்சுட்டீங்களே....!! அழகு....!!

    ReplyDelete
  14. //இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல் !!!//

    அருமை ஹேமா...

    எதார்த்தமான காத்திருப்புக்கள் தானே

    ReplyDelete
  15. நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. கரு தாண்டி வெளி உலகம.....
    என்ற வரியில் தொடங்கி
    எத்தனை எத்தனையோ...
    என்ற கவிதை வரிகளுக்குள்
    வரும் சொற்கள் அத்தனையும்
    தொலைத்து கேள்விக் குறியாய்
    வாழும் மனித உயிர்கள் “அங்கே”
    அத்தனை ஆசைகளும் நிராசைகளாகி
    நீண்ட பெருமூச்சாய்........
    பலர் உள்ளும்...என்னுள்ளும். கனவுகளை
    தொலைந்த.....தொலைத்த நாட்களைத்
    தேடும் கவிதை ஹேமா
    கண்களில்....கண்ணீரும்
    நெஞ்சில் ....வலியும்.

    ReplyDelete
  17. அமுதா முதலான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  18. நேசன் நான் தப்பைக் கண்டு திருத்திக்கொண்டு இருக்கும்போதே உங்கள் பின்னூட்டமும் வருகிறது.நன்றி நேசன்.

    "கருக்கொண்டு"சரிதானே என்றுதான் விட்டுவிட்டேன்.சத்ரியன் மீண்டும் சொன்னதால் திருத்திவிட்டேன்.அந்த இடத்தில் "த்" வரக்கூடாதா?

    ReplyDelete
  19. //நட்புடன் ஜமால் said...
    காத்திருப்புகளுக்கு அர்த்தமுண்டு ஹேமா!

    இடம் பொருள் ஏவல் எல்லாவிடத்திலையும் பொறுந்தும்.//

    ஜமால்,காத்திருப்புக்களுக்கு அர்த்தமுண்டு என்கிறீர்களா?வாழ்வே நம் கையில் இல்லையே! அடுத்த நொடி,அடுத்த நிமிடம்,நாளை என்று காத்திருக்கையில் நடுவில் எம் உயிரைக் கொடுத்தவன் காலக்
    கெடுவோடு காத்திருக்கிறானே!அப்போ காத்திருப்புக்களின் அர்த்தம் எங்கே?

    ReplyDelete
  20. நன்றி ஐந்திணை உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  21. நன்றி சத்ரியன்."கருத்தாண்டி,
    இயற்கையைச்" என்கிற இடங்கள்
    த் ச் வரக்கூடாதா?நேசமித்ரன் சொல்லியும் குழப்பத்தில்தான் விட்டுவிட்டேன்.இருவர் ஒரு தப்பைத் தப்பு என்றால் அங்கு ஒரு தப்பு இருக்கும் என்பதில் ஒத்துக்கொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  22. பின்னூட்டங்களுக்கு காத்திருக்க....

    காத்திருத்தல் ஒரு இனம் புரியா சுகம்....ஒவ்வொரு நிகழ்வுகளை பொறுத்து.....

    ReplyDelete
  23. adikkadi enakku aaRuthal tharum anbu Hema,
    EVEN WITHOUT SEEING YOU I CAN VISUALISE A KIND FACE.
    As usual, your writing are really impressive and touching.
    All the best,
    anbudan
    karthik+amma

    ReplyDelete
  24. உயிரோட்டமான கவிதை. வாழ்வின் சுழற்சியை படம் பிடித்து காட்டியிருக்கும் கவிதை. கொடுப்பதும், எடுப்பதும் இறைவனுடைய வேலை. இடைப்பட்ட காலத்தில் வாழ்வை செம்மையாக்கி கொள்வது தான் மனிதனின் வேலை. சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாகமாகவும் இறைவன் பராபட்சம் காட்டுவது தான் ஏன் என்று தெரியவில்லை. போராட்டம் தானே மனித வாழ்க்கை. போர்களம் மாறலாம். போர்கள் மாறுவதில்லை. வாழ்க்கை போராடத்தில் உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் போராடி தான் வருகிறhன்.

    ReplyDelete
  25. /இதற்குள்...
    இறைவனும் காத்திருக்கிறான்
    தந்த உயிரைத்
    திரும்பவும் எடுத்துக் கொள்ள.

    இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல் !!!/

    சொல்ல வார்த்தை இல்லை

    வாழ்க்கையைப் படம் பிடித்து உள்ளீர்கள்

    நிறைவேறாத கனவுகள்
    நிராசையாய்ப் போனவை எல்லாம்
    காணும்போது
    கவிதையின் வார்த்தை ஒவ்வொன்றும் உண்மை தோழி

    ReplyDelete
  26. நன்றி துபாய் ராஜா.
    நன்றி முனியப்பன்.
    நன்றி நையாண்டி நைனா.
    நன்றி அபுஅப்ஃஸர்.
    நன்றி கவிக்கிழவன்.
    நன்றி கலைவாணி.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி.

    ReplyDelete
  27. நன்றி ரவி.சிலசமயங்களில் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றுமாய்த்தானே இருக்கிறது.அதற்குக் காரணம் யார்...என்ன?


    நன்றி சூரியன்.சுட்டெரிக்கும் பெயரோடு முதல் வருகைக்கு என் நன்றி.

    ReplyDelete
  28. மேடி வாழ்வே ஒரு மாயமாய்த்தானே இருக்கு.எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்.நாங்களே பெரியவர்கள் என்று இறுமாப்போடு வாழ்வைக் கணக்குப் போட்டு நடத்துபவர்களின் வாழ்வுக்கு விடை அவர்கள் நினைத்தபடியா வருகிறது.
    பூஜ்ஜியம்தான்.

    ReplyDelete
  29. ஞானசேகரன்,எதார்த்தமான எதிர்பார்ப்புக்களாக இருந்தாலும்,
    அதற்காகக் காத்திருப்பது நாங்களாக இருந்தாலும் கிடைப்பது மட்டும் எங்கள் கையில் இல்லாமல்தானே இருக்கிறது.

    சந்ரு,உங்கள் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  30. கலா,என்ன...என்னவோ நினைவுகளைக் கிளறி
    விட்டுவிட்டேனா?வாழ்வின் வலிகள் சிலசமயம் ஆறமுடியாதது.
    என்றாலும் ஆறுவதே இயல்பு தோழி.அடுத்த நிகழ்வில் காலடி எடுத்து வையுங்கள்.முன்னைய நிகழ்வு கொஞ்சம் மறக்கும்.

    ReplyDelete
  31. வசந்த்,பின்னூட்டங்கள்கூட சிலசமயம் எதிர்பார்ப்பவர்களிடம் இருந்து கிடைப்பதில்லயே.

    கார்த்திக் அம்மா ,சுகம்தானே.நிறைய நாளுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.
    மன ஆறுதலோடு இருங்கள்.உங்கள் அன்புக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  32. ஆனந்த்,உங்கள் நிறைவான கருத்துக்கு நன்றி.என்னதான் போராடினாலும் எங்களுக்கென்று என்னவோ அதுதானே ஆகிறது.
    இதைத்தான் விதி என்கிறார்களோ!

    ReplyDelete
  33. //திகழ்மிளிர்...நிறைவேறாத கனவுகள்
    நிராசையாய்ப் போனவை எல்லாம்
    காணும்போது கவிதையின்
    வார்த்தை ஒவ்வொன்றும் உண்மை தோழி//

    திகழ் வாழ்வின் ஏமாற்றங்கள் சிலசமயம் வாழ்வு பற்றி ஆழமாக யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  34. மரணத்துக்காக காத்திருப்பவர்களும் உண்டு தானே..
    ****


    அருமையான கவிதை..

    ReplyDelete
  35. காத்திருத்தல் சுகமானது. காதலிக்காக/காதலனுக்காக காத்திருக்கும்போது மட்டும்.

    ReplyDelete
  36. ஹேமா உங்கள் கவிதையை என் தளத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  37. கவிதையாய் நன்றாக இருக்கிறது என்றாலும், முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது ஹேமா.

    ReplyDelete
  38. //லோகு ...
    மரணத்துக்காக காத்திருப்பவர்களும் உண்டு தானே...//

    லோகு முதல் வருகைக்கு நன்றி.எந்தக் காத்திருப்புக்கள் நிறைவேறுவதும் எங்கள் கையில் இல்லைதானே!

    ReplyDelete
  39. //நிலா முகிலன் ...
    காத்திருத்தல் சுகமானது. காதலிக்காக/காதலனுக்காக காத்திருக்கும்போது மட்டும்//

    முகிலன் அனுபவம் பேசுதாக்கும்.
    அது சுகம் இல்லை அவஸ்தை.

    ReplyDelete
  40. //கடையம் ஆனந்த் ...
    ஹேமா உங்கள் கவிதையை என் தளத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றி.//

    ஆனந்த் அப்படியா!பார்க்கிறேன் சந்தோஷமாயிருக்கு.

    ஆனந்த்,இந்த இடத்தில் என் எதிர்பார்ப்பு உங்களிடமிருந்தும்.சில சமயங்களில் நிறைந்த கருத்துக்களை எதிர்பார்ப்பேன்.கிடைப்பதில்லை.
    எதிர்பாராத நேரத்தில் சிலசமயம் கிடைக்கும்.

    ReplyDelete
  41. // S.A. நவாஸுதீன் ...
    கவிதையாய் நன்றாக இருக்கிறது என்றாலும், முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது ஹேமா//

    நவாஸ் ,நீங்கள் இன்னும் ஒரு ஏமாற்றங்களையும் அனுபவிக்கவில்லையோ!அதுதான் இப்படிச் சொல்கிறீர்கள்.இன்னும் நீங்கள் நினைத்தபடி வாழ என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. இதற்குள்...
    இறைவனும் காத்திருக்கிறான்
    தந்த உயிரைத்
    திரும்பவும் எடுத்துக் கொள்ள.//

    கவிதை நச்!
    தேடல் என்று ஏதும் இல்லையெனில்...வாழ்க்கை இனிக்குமா? படைப்புதான் பிறக்குமா?
    வலிக்குள்ளும் இருப்பதுதான் வாழ்க்கை ,அதே நேரம் வலி மட்டுமே வாழ்க்கையாகாதுதான்... இது என் கருத்துதான். சரியா ஹேமா?

    ReplyDelete
  43. //சி. கருணாகரசு...
    கவிதை நச்!
    தேடல் என்று ஏதும் இல்லையெனில்...வாழ்க்கை இனிக்குமா? படைப்புதான் பிறக்குமா?
    வலிக்குள்ளும் இருப்பதுதான் வாழ்க்கை ,அதே நேரம் வலி மட்டுமே வாழ்க்கையாகாதுதான்... இது என் கருத்துதான்.
    சரியா ஹேமா?//

    வாங்க கருணாகரசு.தேடல் தப்பு அல்ல.காலம் நிர்ணயித்துக் காத்திருப்பதுதான் சிலசமயம் தப்பாகப் போய்விடுகிறது.

    ஏன் உங்கள் தளம் வரமுடியாமல் இருக்கிறது?

    ReplyDelete
  44. ஏன் உங்கள் தளம் வரமுடியாமல் இருக்கிறது?

    என்னவென்று தெரியவில்லை... என் பக்கம் எந்த தவறும் டஇருப்பதாக தெரியவில்லை, தற்போது முயற்சி செய்து பாருங்க ஹேமா.

    ReplyDelete
  45. தத்துவார்த்தமான வெளிப்பாடு ஹேமா...நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மக்கா!

    ReplyDelete
  46. அற்புதமான வார்த்தைச் சிதறல்கள்......விரக்தியின் விளிம்பில் நிற்கிறாய் நீயென்று நினைக்கிறேன்.
    அற்புதமான எல்லாக் கவிஞர்களும்.....தாங்க முடியாத ஏதோ ஒன்று துரத்தியதால்தான்
    வார்த்தைகளாக வெடித்து சிதறியிருப்பார்களோ.....தெரியவில்லை.அனுபவித்தவர்கள்
    மட்டுமே உணர முடியும்.ஆற்றிக்கொள் தாயே....ஆற்றிக்கொள்..இது போன்ற கவிதைகள்
    ஏராளம் வேண்டும்.

    ReplyDelete
  47. very nice!
    God is awaiting to take us again .....

    ReplyDelete
  48. //அண்ணாதுரை...ஆற்றிக்கொள் தாயே....ஆற்றிக்கொள்..இது போன்ற கவிதைகள்
    ஏராளம் வேண்டும்.//

    ஐயா,இரண்டாம் முறையாக என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்.உங்கள் ஆசியும் அன்பும் என்றும் வேண்டி நிற்கிறேன்.நன்றி ஐயா.
    திரும்பவும் வாங்கோ.

    ReplyDelete
  49. //
    இதற்குள்...
    இறைவனும் காத்திருக்கிறான்
    தந்த உயிரைத்
    திரும்பவும் எடுத்துக் கொள்ள.////
    இறைவனுக்கு முன்னாள் நாமெல்லாம் எம்மாத்திரம்..???????
    அவனின் காத்திருப்புக்கு முன்னாள் நம் காத்திருப்புகள் ஒன்றுமில்லை தான்...
    அருமை ஹேமா!

    ReplyDelete
  50. your writing are really impressive, superb, best wishes

    ReplyDelete