நடந்ததெல்லாம் நன்மைக்கே !
நடப்பவையும் நன்மைக்கே !
நமக்கு நாமே மருந்தாகி
கேட்பாரற்றுக் கிடக்க வேண்டியதாயிற்று.
தலை மிதித்து நடந்தவன்
தலையையே எடுக்கத் துணிந்துவிட்டான்.
ஈழத்தமிழன் எடுப்பார் கைப்பிள்ளையாகி
தொங்கு பாலத்தில் நடப்பவனாய் தென்பின்றி.
இரத்த ஆறு உறைந்துவிட்டாலும்
முட்கம்பிகள் இட்ட சர்வாதிகார ஆற்றுக்குள்.
நம்பிக்கை நடைபாதையெங்கும்
முட்கள் நெருடியபடி.
நடை தடுமாறினாலும் நினைவுகள் சீராய்
இருப்பிடம் நோக்கியே.
மௌனமே சுகமாயிருக்கிறது
உலகையே வெறுத்துவிட்ட
இறுமாப்போடு இருக்கிறேன்.
கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.
குற்றம் புரிந்தவளாய்
இனி ஒருபோதும் மன்னிக்க முடியாதவளாய் நானும்.
நட்பும் காதலும் உண்மையற்று
நானும் அசுத்தப்பட்டவளாய்
கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.
ஆசைகள் கொன்று
கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.
அர்த்தமற்ற கனவுகளின் மேல் ஆணி அறைந்து
அரற்றியபடி
தொடராத மைல்கல் மேல்
சுமை இறக்க முயன்றபடி.
தப்புத் தப்பாய் விடைகள்.
எப்படித்தான்
கூட்டிக்
கழித்து
பெருக்கிப்
பிரித்துப் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும்
அதிகமாகவே கழிக்கப்படுவதாய்
தமிழனின் வாழ்வு !!!
ஹேமா(சுவிஸ்)
மனது பாரமாகிப் போனது தோழி.. ஆற்ற முடியாத வலியின் வார்த்தைகளைக் கொண்டு கவிதை.. :-(((((((((((
ReplyDeleteகவிதை வாசிக்குப்பின் என்னுள் நீண்ட மவுனம்
ReplyDeleteபயித்தியங்களுக்கு மத்தியில் இருப்பவன்
ReplyDeleteதன்னை பயித்தியம்
என்றே கூறி கொள்வான்
அவர்கள் உண்மைகளை
ஒற்றுகொள்வதில்லை
உணர்வதில்லை என்பதால் ...\\
மிகவும் பாரமாக உணர்கிறேன் ...
//அர்த்தமற்ற கனவுகளின் மேல் ஆணி அறைந்து
ReplyDeleteஅரற்றியபடி
தொடராத மைல்கல் மேல்
சுமை இறக்க முயன்றபடி.//
மிக அழகாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உங்கள் கவிதை.
என்ன செய்வது? தமிழன் இப்படிக் கேள்விக் குறியாய்ப் போவான் என்று நாம் கனவு கூடக் காண வில்லையே!
கவிதை வாசிக்குப்பின் என்னுள் நீண்ட மவுனம்
ReplyDeleteமௌனமே சுகமாயிருக்கிறது
ReplyDeleteஉலகையே வெறுத்துவிட்ட
இறுமாப்போடு இருக்கிறேன்.
கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.
குற்றம் புரிந்தவளாய்
இனி ஒருபோதும் மன்னிக்க முடியாதவளாய் நானும்.
நானும்
மிகவும் பாரமாக உணர்கிறேன் ...
ReplyDelete:((((((((((((((
ReplyDelete//நட்பும் காதலும் உண்மையற்று
ReplyDeleteநானும் அசுத்தப்பட்டவளாய்
கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.
ஆசைகள் கொன்று
கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.//
பிடித்த வரிகள்....
அழகான் கவிதை வரிகள்....
உணர்வுப் பூர்வமான கவிதை .. கண்ணில் நீரை எட்டச் செய்தது....!!! சொந்தங்களை காப்பாற்ற வழி அறியாது நிற்கின்றோம்....!!!!
ReplyDeleteஹேமா,
ReplyDelete//நம்பிக்கை நடைபாதையெங்கும்
முட்கள் நெருடியபடி.
நடை தடுமாறினாலும் நினைவுகள் சீராய்
இருப்பிடம் நோக்கியே//
நோக்கம் கருத்தில் இருக்க, பாதையில் முட்கள் இருந்தால் என்ன, முதுகெலும்பு உடைந்தால் என்ன - தவழ்ந்து கூட சாதிக்க முடியும்.
சிங்களவனின் சூழ்ச்சியை முறியடிப்போம்...
தவறு செய்திருந்தாலும் நமது மக்களை மன்னித்து ஒன்றிணைப்போம்,
நமது பழைய பெருமை , நேற்றைய தோல்வி ஒன்றும் இப்போது தேவயானதில்லை ...
நாளைய நட்பு, ஒருங்கிணைப்பு மிக முக்கியம்,
பிளவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓநாய்க்கு இரயாகாமல்
ஒன்றுபடுவோம் - இனமக்களை பாகுபாடு இன்றி ஒன்றிணைப்போம்.
பழையது மறப்போம் - ஒற்றுமையை நாமே முன்னெடுப்போம்.
காலம் தவறி செய்வதில் பலன் நாம் அறிந்ததே... இன்றே அனைவரும்
ஒற்றுமை நோக்கி முன்னகர்வோம்.
உள்நாட்டில் கட்டுப்பாடு அதிகம் காரணமாக பதிவுகள் வர தவறினாலும்,
வெளியில் வாழும் நாம் அனைவரும் அதை முன்னெடுப்போம்.
தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இதை வெளிப்படுத்துவோம்.
//கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.
ReplyDeleteகுற்றம் புரிந்தவளாய்
இனி ஒருபோதும் மன்னிக்க முடியாதவளாய் நானும்.//
மனதை ரணமாக்கியது தோழி
//தப்புத் தப்பாய் விடைகள்.
ReplyDeleteஎப்படித்தான்
கூட்டிக்
கழித்து
பெருக்கிப்
பிரித்துப் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும்
அதிகமாகவே கழிக்கப்படுவதாய்
தமிழனின் வாழ்வு !!!//
ம்ம்ம்ம் பதில் சொல்ல தெரியவில்லை
:-((
ReplyDeleteவலியின் தரத்தை பிரித்துக்கூர இயலாது. வேதனை மாற விடியல் தேடும் கனவு நனவாகும்வரை இந்த வலிகள் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
ReplyDeleteThappu thappai vidaihal,ungal valiyai unarthuhirathu Hema.
ReplyDeletedear Hema,
ReplyDeletewords cannot express the heart felt feelings.
I share your sadness honestly.
karthik amma
பின்னூட்டம் தந்த என் அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.என் மனப்பாரங்களை உங்களிடமும் கொஞ்சம் பகிர்ந்துகொள்கிறேன்.
ReplyDeleteஅன்போடு ஹேமா.
எழுத்துக்களால் இறக்கி வைத்துவிடும் துயரமா இது?....போம்மா பாலாய்ப்போன மனுசப் பிறவிக்கு பாசம் எதற்கோ...!?
ReplyDeleteநட்பும் காதலும் உண்மையற்று
ReplyDeleteநானும் அசுத்தப்பட்டவளாய்
கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.
ஆசைகள் கொன்று
கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.//
மனம் வருத்தமா
இருக்குங்க!!
//சத்ரியன்...
ReplyDeleteஎழுத்துக்களால் இறக்கி வைத்துவிடும் துயரமா இது?....போம்மா பாலாய்ப்போன மனுசப் பிறவிக்கு பாசம் எதற்கோ...!?//
நன்றி சத்ரியன்.முதன் முதலா என் தளம் வந்திருக்கீங்க.சத்ரியன்,பாசம் இல்லாவிட்டாலும் மனிதன் மனிதனாக இல்லை.அதே பாசத்தாலேயே மனிதன் மனிதனாய் இல்லை...!இன்னும் சந்திப்போம்.
தேவா ,நிறைய நாளைக்குப்பிறகு சந்திக்கிறேன்.சுகமா?
ReplyDeleteவருத்தங்களும் வேதனைகளுக்கு ஈடாக ஈழத்தமிழன் என்று இனி சொல்லிக்கொள்ளலாம் !
ஈழத்தில் வாழும் ஈழத்தமிழனின் வாழ்வை நினைத்து விட்டால் ஈரக்குலை அறுந்து விழுவது போல ஒரு உணர்வு. என்ன செய்ய இயலும் என்னால்?
ReplyDeleteஉங்கள் கவிதை என் துக்கத்தை ஆழப்படுத்துகிறது.
உங்கள் குற்ற உணர்வு புரிகிறது - கவலைப்பட வேண்டாம் - நீங்கள் கவலைப்பட்டு என்ன நடக்கப்போகிறது. நானும் கேட்டேன் ஏன் தமிழன் கொதிக்கவில்லை... ஏன் தமிழனுக்கு உணர்வு வரவில்லை... அப்பத்தான் இந்த வரிகள் தோன்றியது - சிலர் இதை ஏற்காமல் விடலாம் அதற்கு அவர்கள் அரசியல் நோக்கு காரணமாக இருக்கலாம் ஆனால் இது எந்தக் கலப்படமுமற்ற என் மனத்திரையில் ஒரு நொடியில் உதித்த வரி - “இத்தாலியச் செவிலியினால் தொப்புள் கொடியுறவு அறுக்கப்பட்டு அநாதையாக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் நாம்”
ReplyDeleteஉங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால் மன்னித்துவிடுங்கள் - ஆனாலும் இது எனது ஆழ்மனத்தின் வெளிப்பாடு.
எல்லாத் துயரும் எல்லாச் சாபமும் எங்களுக்கானது ஹேமா.
ReplyDeleteஇப்போது எங்களுக்கு நாங்களே ஆற்றுகையும் அழுகையின் தேற்றுகையும் தோழி....சேர்ந்து அழுவோம் எங்கள் துயரங்கள் ஆறும்வரை.
//என்.கே.அஷோக்பரன்... “இத்தாலியச் செவிலியினால் தொப்புள் கொடியுறவு அறுக்கப்பட்டு அநாதையாக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் நாம்”//
ReplyDeleteஎன்.கே.அஷோக்பரன்,அருமையான பெயர் உங்களுக்கு.முதன் முதலாக வந்திருக்கிறீங்க.நிறைந்த நன்றி.
நீங்கள் சொன்ன வரிகளில் தவ்றி ஏதுமேயில்லை.எங்கள் தமிழ்நாட்டுச் சகோதரர்களும் ஒத்துக்கொண்ட உண்மைதானே இது.
நன்றி சாந்தி,எம் எதிர்காலம்-என் வருங்காலக் குழந்தைகள்- எமக்கான நாடு என்று பெரும் கேள்விகள் மனதுக்குள்.அடுத்து நம் கடமைகள் என்ன என்கிற கேள்வியும்கூட.
ReplyDeleteநன்றி!!!
ReplyDeleteசிந்தித்து... சிந்தித்து.... ரணம் ஆனா மனம் தான் எங்கும்.
ReplyDeleteஆற்றுவாரும் இல்லை.
தீர்ப்பாரும் இல்லை.
// நையாண்டி நைனா ...
ReplyDeleteசிந்தித்து... சிந்தித்து.... ரணம் ஆனா மனம் தான் எங்கும்.
ஆற்றுவாரும் இல்லை.
தீர்ப்பாரும் இல்லை.//
நைனா,உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு அடுத்தது என்ன என்று முகம் கொடுப்போம்.
நம்
ReplyDeleteதாயும் தகப்பனும்
அண்ணனும் அக்காவும்
தம்பியும் தமக்கையும்
மாமனும் மச்சானும்
போலியோ தாக்கா
பிள்ளை வாதத்தில்..!
இங்கே
கிண்டலும் கேளிக்கையும்
காசும் கட்சியும்
உண்டலும் போதலும்
மானம்கெட்ட தமிழா - அவன்
மாற்றான் இல்லையடா..!
என் செய்வேன்,
என்பிதற்றலும் புலம்பலும்
என்னினதிர்க்கு என்செய்யும்
அஞ்சுகிறேன் அடுதென்னவோ..!