Monday, March 30, 2009

புரியாத கனவு...

புதிர் போலானது என் வாழ்வு.
கேள்விக்குறியின் முதுகில்
பரந்த பாலைவனங்களில்
என் பயணிப்பு.
விடையே இல்லாத
கேள்விகள் போல
வெறும் கீறிட்ட கோடுகள்
நிறையவே.

எதிர்காலத்தின் முன்னால்...
எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
தொடர்ந்த சிந்தனையை
முடிக்க முடியவில்லை.
கொஞ்சம் தண்ணீர்
குடித்துக் கொள்கிறேன்.

என்றாலும்
எப்போதுமே
வேதனைகள்
வெந்து தணிந்த பிறகு
எல்லையற்ற கற்பனைக்குள்
மனம் சுற்றிப் பறக்கும்.

விடியாத வாழ்வே ஆனாலும்
பசியால் வாடிய போதும்
உலகமே வெறிச்சோடி
தனித்து விடப்பட்ட போதும்
எனதென்று யாருமே
இல்லையென்று ஆனபோதும்
கனக்கின்ற மனம் நிரம்பி
கண்ணீராய் வழிந்தபோதும்
கனவில் வரும்
கற்பனைக்கு மட்டும்
கணக்கேயில்லை.

ஒரே ஒரு கனவு
திரும்பத் திரும்ப
ஒவ்வொரு நாளும் வரும்.
ஒளவைப் பாட்டிக்கு
அடுத்தாற்போல்,
நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,
நானும் ஓர் நாள்
நிலவில் நின்று
கொடி நட்டு...கை தட்டி
காற்றில் மிதப்பதைப் போல.

அப்படிக் கனவிலும்
ஓர் திடுக்காடு.
மனிதர்களைப் போல
நிலவுக்கும் மறுபக்கம்
இருந்துவிட்டால் !!!

ஹேமா(சுவிஸ்)

65 comments:

  1. எதிர்காலத்தின் முன்னால்...
    எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
    தொடர்ந்த சிந்தனையை
    முடிக்க முடியவில்லை.
    கொஞ்சம் தண்ணீர்
    குடித்துக் கொள்கிறேன்.//


    யோ என்ன எழுத்துப் பணிக்கும் இடை வேளையோ???

    ReplyDelete
  2. //புதிர் போலானது என் வாழ்வு.
    கேள்விக்குறியின் முதுகில்
    பரந்த பாலைவனங்களில்
    என் பயணிப்பு.
    விடையே இல்லாத
    பதில்கள் போல
    வெறும் கீறிட்ட கோடுகள்
    நிறையவே.//

    இது போன்ற புரியாத கனவுகள் எல்லோருக்கும் வரக்கூடியது தான் ஹேமா...

    ReplyDelete
  3. \\கண்ணீராய் வழிந்தபோதும்
    கனவில் வரும்
    கற்பனைக்கு மட்டும்
    கணக்கேயில்லை.\\

    உண்மைதான்.

    ReplyDelete
  4. ஒரே ஒரு கனவு
    திரும்பத் திரும்ப
    ஒவ்வொரு நாளும் வரும்.
    ஒளவைப் பாட்டிக்கு
    அடுத்தாற்போல்,
    நீலாம்ஸ்ரோம் போல்,
    நானும் ஓர் நாள்
    நிலவில் நின்று
    கொடி நட்டு...கை தட்டி
    காற்றில் மிதப்பதைப் போல.//


    கனவிகள் மெய்ப் பட்டால் சந்தோசம் தான்??


    நாங்கள் முப்பது வருசமா சொந்த நாடு கிடைக்கும் என்று கனவு காணுறோம் ஏதாவது நடந்திச்சோ????

    ReplyDelete
  5. //ஒளவைப் பாட்டிக்கு
    அடுத்தாற்போல்,
    நீலாம்ஸ்ரோம் போல்,
    நானும் ஓர் நாள்
    நிலவில் நின்று
    கொடி நட்டு...கை தட்டி
    காற்றில் மிதப்பதைப் போல.//

    நல்ல கனவு தானே...

    ReplyDelete
  6. அந்தப் படம் நீங்களோ கீறினது??? நல்லாயிருக்கு.

    ReplyDelete
  7. கமல்,எழுதுப்பணிக்கு இடை வேளைதானே.பாவம் கணணியும் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமே!

    ReplyDelete
  8. கமல்,கனவு மெய்ப்படும் எண்டு எங்கட பழைய ஆக்கள் எல்லாம் சொல்லியிருக்கினம்...அது எப்பிடி?

    இல்லை நான் கீறின படம் இல்லை.நெட்டில சுட்ட படம்.

    ReplyDelete
  9. //அப்படிக் கனவிலும்
    ஓர் திடுக்காடு.
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!//

    இது நியாய மான சந்தேகம் தான்...
    பூமியிலிருந்து நாம் நிலவின் ஒரு பகுதியை மட்டும் தான் பார்க்கமுடியும்...
    நிலவிற்கு மறுபக்கம் நிச்சயம் உண்டு...
    வித்தியாசமான சிந்தனையில் வந்திருக்கிறது
    இந்த அருமையான புரியாத கனவுக் கவிதை...

    ReplyDelete
  10. புதியவன்,நல்லதா தேடி பொறுக்கி ஒரு கனவை மட்டும்தான் சொல்லியிருக்கேன்,அதுதான் பிரசனை.

    கனவு புரியுது புதியவன்.அது ஏன்..எப்பிடி..எதுக்குன்னு தான் புரியல.

    ReplyDelete
  11. ஜமால் வாங்கோ....வாங்கோ.
    பாருங்கோ பின்னூட்டம் கூட இப்போ "சப்" என்று ஆகிப்போச்சு.
    பின்ன உங்களைப்போல ஒரு கவிதை எழுதி,அதுக்கு இப்போவரைல 7429 பின்னூட்டங்கள்.ம்ம்ம்....உங்களப் போல ஆகுமா.கொஞ்சம் வயித்தெரிச்சல்தான் ஜமால்.

    ReplyDelete
  12. நல்ல கனவுதான் தோழி.. கடைசியில் உங்கள் பயத்தையும் சொல்லி உள்ளீர்கள்.. மனிதர்கள் போல் மறுபக்கம் இருந்து விட்டால்? நினைக்கவே முடியவில்லை.. அப்புறம் அந்த படம் ரொம்ப அழகாக இருக்கிறது..

    ReplyDelete
  13. நிலவுக்கு மறுபக்கம் இருக்குமோ என்று பயப்படுவதைவிட மறுபக்கமாவது கரையின்றி இருக்கும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை ஹேமா

    ReplyDelete
  14. //விடையே இல்லாத
    பதில்கள் போல
    வெறும் கீறிட்ட கோடுகள்
    நிறையவே.//

    அக்கா எனக்கொரு சந்தேகம் விடை , பதில் ரெண்டும் என்னோடு முரண்டு பிடிக்கிறது. "விடையே இல்லாத கேள்விகள் போல்" இப்படி வந்திருக்கனுமோ? ரொம்ப குழம்பி போய்ட்டேன், தெளிவுப்படுத்துங்களே! திட்டிடாதிங்க,

    ReplyDelete
  15. //என்றாலும்
    எப்போதுமே
    வேதனைகள்
    வெந்து தணிந்த பிறகு
    எல்லையற்ற கற்பனைக்குள்
    மனம் சுற்றிப் பறக்கும்///

    ம்ம்ம் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைந்தது தானே வாழ்க்கை, பட்ட பின்பும் ஞானம் பிறப்பது அரிது தானே அக்கா. ஆனாலும் கற்பனைகளால் கட்டப்படுகின்ற கோட்டையைவிட யதார்த்தத்தின் குடிசை மேல் தானே புரிந்துக்கொள்ள தான் கஷ்டப்படுகிறோம் எல்லோரும், (ரொம்ப உளருறேனோ?)

    ReplyDelete
  16. விடியாத வாழ்வே ஆனாலும்
    பசியால் வாடிய போதும்
    உலகமே வெறிச்சோடி
    தனித்து விடப்பட்ட போதும்
    எனதென்று யாருமே
    இல்லையென்று ஆனபோதும்
    கனக்கின்ற மனம் நிரம்பி
    கண்ணீராய் வழிந்தபோதும்
    கனவில் வரும்
    கற்பனைக்கு மட்டும்
    கணக்கேயில்லை.//

    valikal thaangiya varikal...

    ReplyDelete
  17. மனதின் வெளிப்பாடு கவிதையாக. நல்லா உருவகப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள் அக்கா.

    ReplyDelete
  18. கொஞ்சம் லேட்டுதான்.... வேலை அதிகம் இருக்குங்க.
    --------------------

    ஆரம்பமும் முடிவும் அசத்தல்... இடையில் சின்னஞ்சிறு தொய்வு. அதிலும் ஆரம்ப வரிகள் ஒரு நல்ல கவிதைக்கான தொடக்கம் (கவுதம் காம்பிர் - சேவக் மாதிரி!!)

    வாழ்க்கை என்பது பல முடிச்சுகளால் ஆன புதிர்.. அதை அவிழ்க்க அவிழ்க்க சுவாரஸ்யங்களும் வலிகளும் ரணங்களில் தோய்ந்து விழுந்த நினைவுகளும் கிடக்கும்... மிக அற்புதமான தொடக்கம்.

    விடையில்லாத பதில்களை கீறிட்ட கோடுகளாக நன்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்!!!

    அப்பறம் என்னங்க திடீர்னு தண்ணீர் குடிக்க???? கவிதையில் நடப்பு நிகழ்வு வந்தால் சட்டென்று ப்ரேக் போடவேண்டியிருக்கிறது பாருங்கள்!! கதைகளில் இப்படியொரு நிறுத்தம் சுவாரசியமாக இருக்கும்.

    கனவுகள் எல்லையற்று பறப்பன. உங்களுக்கு மாத்திரமல்ல எமக்கும் ஏன், எல்லாருக்குமே!! நன்கு அழுது முடிந்த தருணத்தில் மிக சந்தோஷமான கனவு அன்றிரவு வரும்... சிலசமயம் நல்ல மூடில் இருக்கும் பொழுது சோகமான கனவுகள்..

    (  சகோதரி, எனக்குக் கனவு வரும் அனுபவத்தை ஒரு கட்டுரரயாக எழுதியிருக்கிறேன். பின் வரும் நாட்களில் தருகிறேன்..... படிக்க சுவாரஸியமாக இருக்கும்.  )

    நீலாம்ஸ்ரோம்??? நீல் ஆம்ஸ்ட்ராங்??? ஆங்கிலம் ரத்த நாளத்தோடு அறுந்து தொங்குது போங்கள்.... ஹி ஹி

    இறுதி முடிக்கும் விதம் பலே! கனவில் நீங்கள் நிலவுக்குச் சென்று வந்துவிட்டீர்கள் (தண்ணீர் இருக்கிறதா?) எமக்கோ பயணங்களே வேறு!!!

    வாழ்த்துகள் சகோதரி!!

    ReplyDelete
  19. அலுவல் செய்யும் போது வந்த கனவா?

    ReplyDelete
  20. //எதிர்காலத்தின் முன்னால்...
    எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
    தொடர்ந்த சிந்தனையை
    முடிக்க முடியவில்லை.
    கொஞ்சம் தண்ணீர்
    குடித்துக் கொள்கிறேன்.//

    நிறையாவே குடிங்க

    ReplyDelete
  21. //புதிர் போலானது என் வாழ்வு.
    கேள்விக்குறியின் முதுகில்
    பரந்த பாலைவனங்களில்
    என் பயணிப்பு.//
    எங்க பாட்டி வயசோ?

    ReplyDelete
  22. //விடியாத வாழ்வே ஆனாலும்
    பசியால் வாடிய போதும்
    உலகமே வெறிச்சோடி
    தனித்து விடப்பட்ட போதும்
    எனதென்று யாருமே
    இல்லையென்று ஆனபோதும்
    கனக்கின்ற மனம் நிரம்பி
    கண்ணீராய் வழிந்தபோதும்
    கனவில் வரும்
    கற்பனைக்கு மட்டும்
    கணக்கேயில்லை.//

    அம்மாடி எம்புட்டு சோகம்!!!!!, படிக்கிற என்னலே முடியலையே...!!!

    ReplyDelete
  23. //என்றாலும்
    எப்போதுமே
    வேதனைகள்
    வெந்து தணிந்த பிறகு
    எல்லையற்ற கற்பனைக்குள்
    மனம் சுற்றிப் பறக்கும்.//
    அது கவிதைக்கு கரு கொடுக்கும்

    ReplyDelete
  24. //ஒரே ஒரு கனவு
    திரும்பத் திரும்ப
    ஒவ்வொரு நாளும் வரும்.
    ஒளவைப் பாட்டிக்கு
    அடுத்தாற்போல்,
    நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,
    நானும் ஓர் நாள்
    நிலவில் நின்று
    கொடி நட்டு...கை தட்டி
    காற்றில் மிதப்பதைப் போல.//

    நாசாவிலே வேலை காலியாக இருக்காம்.. விசாரிக்க புடாது

    ReplyDelete
  25. //அப்படிக் கனவிலும்
    ஓர் திடுக்காடு.
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!//
    அங்கேயும் கவிதை எழுதலாம்

    ReplyDelete
  26. வாங்க கார்த்தி,பட்ட சூடு பயமா எப்பவும் இருக்கு.அதுதான் வரிகளாய் வந்திடுச்சு.

    படம் ஒரு பொய்யான கற்பனையை எடுத்து காட்டுற மாதிரி இருக்குதானே.

    ReplyDelete
  27. //செய்யது அகமது...
    நிலவுக்கு மறுபக்கம் இருக்குமோ என்று பயப்படுவதைவிட மறுபக்கமாவது கரையின்றி இருக்கும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை ஹேமா//

    நீங்க சொல்றதும் உண்மைதான்.ஆனாலும் பயமாயிருக்கே !

    ReplyDelete
  28. //கலை...ம்ம்ம் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைந்தது தானே வாழ்க்கை, பட்ட பின்பும் ஞானம் பிறப்பது அரிது தானே அக்கா. ஆனாலும் கற்பனைகளால் கட்டப்படுகின்ற கோட்டையைவிட யதார்த்தத்தின் குடிசை மேல் தானே புரிந்துக்கொள்ள தான் கஷ்டப்படுகிறோம் எல்லோரும், (ரொம்ப உளருறேனோ)//

    கலை நீங்க ஒண்டும் உளறேல்ல.சொன்னது சரிதான்.கற்பனை அடிக்கடி வந்தாலும் யதார்த்தம்தான் நிலையான உண்மை.வேண்டுவதும் அதுதான்.

    //அக்கா எனக்கொரு சந்தேகம் விடை , பதில் ரெண்டும் என்னோடு முரண்டு பிடிக்கிறது. "விடையே இல்லாத கேள்விகள் போல்" இப்படி வந்திருக்கனுமோ? ரொம்ப குழம்பி போய்ட்டேன், தெளிவுப்படுத்துங்களே! திட்டிடாதிங்க,//

    நீங்க என்னையும் சேர்த்தே குழப்பிட்டீங்க.2-3 தரம் பாத்திட்டேன்.ஒரு தரம் சரி எண்டும் மற்றத்தரம் பிழைதான் எண்டும் நினைக்குது மனம்.ஆதவாவும் ஒண்டும் சொல்லாமப் போய்ட்டார்...!

    ReplyDelete
  29. நன்றி பூர்ணி.கருத்துக்கும் கூட.

    ReplyDelete
  30. வாங்க வாங்க ஆனந்துத் தாத்தா.வர...வர நான் உங்களுக்கு அக்கா ஆயிட்டேனா...!

    ReplyDelete
  31. ஆதவா,வேலை அதிகம்ன்னா.
    கொஞ்சம் ஓய்வு கண்டிப்பா எடுகணும்.நல்லா தூங்குங்க.அப்புறம் நல்லா இருக்கும்.

    இந்தக் கவிதை மனதில் எழுந்து எழுதிக்கிட்டு இருக்கிறப்போ என்னமோ தடைப்பட்டமாதிரி...அதையே வரிகளாக்கிட்டேன்.தண்ணியும் குடிச்சேன்.

    நீல் ஆம்ஸ்ட்ராங் மாத்திட்டேன்.இது கவலையீனப் பிழை.

    ஓ...உங்களிடமிருந்தும் கனவுப் பதிவு வரப்போகிறதா...ஆவல்தான்.

    ஆதவா,உங்களுக்கு ரொம்ப கிண்டலாப்போச்சு.நானே கனவு கண்டு பயந்துபோய் இருக்கேன்.அட நீங்க வேற.தண்ணி இருக்கான்னு கேக்கிறீங்க

    ReplyDelete
  32. //நசரேயன் ...
    அலுவல் செய்யும் போது வந்த கனவா?//

    அலுவலுக்குள் வந்த கற்பனை.

    //எங்க பாட்டி வயசோ?//

    உங்க பாட்டிதான் நான்.

    //நாசாவிலே வேலை காலியாக இருக்காம்.. விசாரிக்க புடாது//

    கேட்டாங்க.நான் தான் சுவிஸ் நல்லாயிருக்குன்னு வரலன்னு சொல்லிட்டேன்.

    ReplyDelete
  33. //
    விடையே இல்லாத
    பதில்கள் போல
    //

    கொஞ்சம் இடிக்குதே ( தள்ளி உக்கார சொல்லாதீங்க )

    விடையும் பதிலும் ஒன்னு தானே இல்லியா?

    ReplyDelete
  34. //
    ஒரே ஒரு கனவு
    திரும்பத் திரும்ப
    ஒவ்வொரு நாளும் வரும்.
    ஒளவைப் பாட்டிக்கு
    அடுத்தாற்போல்,
    நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,
    நானும் ஓர் நாள்
    நிலவில் நின்று
    கொடி நட்டு...கை தட்டி
    காற்றில் மிதப்பதைப் போல.
    //

    இது சூப்பர் :)

    ReplyDelete
  35. //
    கொஞ்சம் தண்ணீர்
    குடித்துக் கொள்கிறேன்.
    //
    பரவாயில்லை சோடா கூட குடிக்க்லாம்.. சோடா கலந்தும் குடிக்கலாம் :)))

    ReplyDelete
  36. //
    கற்பனைக்கு மட்டும்
    கணக்கேயில்லை.
    //
    கணக்குமில்லை. எல்லையுமில்லை. .பின்ன ஐஸ்வர்யா ராயை நிஜத்தில கல்யாணம் பண்ண முடியுமா சொல்லுங்க :)

    ReplyDelete
  37. //
    திடுக்காடு
    //
    இதுக்கு அர்த்தம் என்னங்க?

    ReplyDelete
  38. அட ஒரு மூனு ரன் அடிச்சா ஒரு ரவுண்ட் போடலாம் போல

    ReplyDelete
  39. //
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!
    //

    பெரிய பொருள் குற்ற்ம் கண்டேன் ஹேமா.. ஹிஹிஹி..

    இருந்துவிட்டால்... ஆச்சர்யமா!!! இல்ல அதிர்ச்சியா?????

    ஹிஹிஹி..

    ReplyDelete
  40. இன்னா நாற்பது, இனியவை நாற்பது போல பின்னூட்டம் நாற்பது

    ReplyDelete
  41. //விடையே இல்லாத கேள்விகள் போல//

    வாங்க ஆளவந்தான்.முதல்ல கலையும் சொன்னார்.நீங்களும் அதே அபிப்பிராயம் சொல்றீங்க.அதனால மாத்திட்டேன்.

    சோடால்லாம் கலந்து குடிச்சிட்டு எப்பிடி கவிதை எழுதுறது.குப்பறப் படுத்து தூங்கத்தான் சரி.

    ஐஸ்வர்யா ராய் வாறாங்களா கனவில.யாருக்கிடயும் சொல்லதீங்க.கவனம்.

    //
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!
    //
    பெரிய பொருள் குற்ற்ம் கண்டேன் ஹேமா.. ஹிஹிஹி..

    இருந்துவிட்டால்... ஆச்சர்யமா!!! இல்ல அதிர்ச்சியா?????//

    ஆச்சர்யம்தான் !!!

    ஏன் உப்புமடச் சந்திக்கு வரல.உங்களுக்கு ஏத்தமாதிரி ஒரு பதிவு.அழகான தமிழ்ப் பதிவு.

    ReplyDelete
  42. Vethanaigal venthu thanintha pirahu,yellaiyattra karpanaikkul manam suttri parakkum-nalla varihal, unmaiyana vazhkkaiyai pola.

    ReplyDelete
  43. /*அப்படிக் கனவிலும்
    ஓர் திடுக்காடு.
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!*/
    அருமை ஹேமா... கனவுகளில் கூட தொடர்கிறது பயம்.. ம்.. கனவென்பதே அடிமனதின் உருவம் தானே?

    ReplyDelete
  44. புரியாத கனவு ........
    தலைப்பே நல்ல இருக்கு .....
    இன்னொரு வாட்டி துங்கி பாருங்க ...
    கனவு புரிந்தாலும் புரியும்

    ReplyDelete
  45. "புதிர் போலானது என் வாழ்வு.
    கேள்விக்குறியின் முதுகில்
    பரந்த பாலைவனங்களில்
    என் பயணிப்பு.
    விடையே இல்லாத
    கேள்விகள் போல
    வெறும் கீறிட்ட கோடுகள்
    நிறையவே."

    ஒரு வேளை ECG ஸ்கேன் யாக இருக்க போகிறது நல்ல பாருங்க .......

    எல்லோர் வாழ்க்கையும் இப்படி தானுங்க ....
    எதை நோக்கி போகிறோம் என்று தெரியாமல் பயணித்து கொண்டு இருபது தானுங்க....
    நான் என்ன செய்ய முடியும் .....
    சுழ்நிலை கைப்பாவை தான் நாம்

    ReplyDelete
  46. "எதிர்காலத்தின் முன்னால்...
    எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
    தொடர்ந்த சிந்தனையை
    முடிக்க முடியவில்லை.
    கொஞ்சம் தண்ணீர்
    குடித்துக் கொள்கிறேன்."

    தண்ணீர் குடித்து
    விட்டாலும்
    தண்ணீர் மேல்
    எழுதியே காலமாய்
    நாமது எதிர்காலம்.........
    அந்த தண்ணீரும்
    ஓடையை நோக்கி .........

    ReplyDelete
  47. "என்றாலும்
    எப்போதுமே
    வேதனைகள்
    வெந்து தணிந்த பிறகு
    எல்லையற்ற கற்பனைக்குள்
    மனம் சுற்றிப் பறக்கும்."

    வைரமுத்து ஒரு பாடலில் " கற்பனை மட்டும் இல்லை என்றால் ; நிஜகள் நாம்மை தின்று விடும்" ........

    ReplyDelete
  48. "விடியாத வாழ்வே ஆனாலும்
    பசியால் வாடிய போதும்
    உலகமே வெறிச்சோடி
    தனித்து விடப்பட்ட போதும்
    எனதென்று யாருமே
    இல்லையென்று ஆனபோதும்
    கனக்கின்ற மனம் நிரம்பி
    கண்ணீராய் வழிந்தபோதும்
    கனவில் வரும்
    கற்பனைக்கு மட்டும்
    கணக்கேயில்லை."

    ஹ்ம்ம் ...
    மனிஷனுக்கு கற்பனை தேவை தான் ......
    இல்லாட்டி அவனுக்கு பைத்தியம் பிடிச்சிரும்

    ReplyDelete
  49. "ஒரே ஒரு கனவு
    திரும்பத் திரும்ப
    ஒவ்வொரு நாளும் வரும்.
    ஒளவைப் பாட்டிக்கு
    அடுத்தாற்போல்,
    நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,
    நானும் ஓர் நாள்
    நிலவில் நின்று
    கொடி நட்டு...கை தட்டி
    காற்றில் மிதப்பதைப் போல."

    நான் கண்ட
    கனவை நிஜமாக்க
    வரம் தரவில்லை
    கடவுள் .....
    வரம் தருகிறேன்
    கடவுளுக்கு
    என் கனவை
    நிஜமாக்க ........
    நானும் ஒரே கடவுளே

    ReplyDelete
  50. "அப்படிக் கனவிலும்
    ஓர் திடுக்காடு.
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!"

    இருந்து விட்டால்
    நிலா கவிதைகள்
    மாற்றி விடலாமா ?????
    சுய வெளிச்சம்
    இல்லாத
    நிலவுக்கு இன்னொரு
    முகமா????
    வைப்பு இல்லை
    அப்படி இருக்க .........

    ReplyDelete
  51. "ஹேமா(சுவிஸ்)"

    இது
    புரிந்த கனவா
    அல்லது புரியாத
    கனவா ??????
    இலங்கை என்று
    சந்தோசமாய்
    போட்டு கொள்ள
    வாய்ப்பு இருக்குமோ
    உங்களுக்கு .......

    ReplyDelete
  52. உங்களிடமிருந்து வித்தியாசமான தொரு கவி!

    ReplyDelete
  53. நன்றி முனியப்பன்.அலங்கரிக்கப்படாத வார்த்தைகள் இயல்ப்போடு என்னோடு

    ReplyDelete
  54. //அமுதா...அருமை ஹேமா... கனவுகளில் கூட தொடர்கிறது பயம்.. ம்.. கனவென்பதே அடிமனதின் உருவம் தானே?//

    வாங்க அமுதா,சிலசமயங்களில் அடிமனதில் நெருடல்கள் கனவுகளாக ஆனாலும் பயமும் சந்தோஷமும் துக்கமுமாய்,தூக்கத்தையே தூர விரட்டுகிறதே.

    ReplyDelete
  55. //மேவி...நான் கண்ட
    கனவை நிஜமாக்க
    வரம் தரவில்லை
    கடவுள் .....
    வரம் தருகிறேன்
    கடவுளுக்கு
    என் கனவை
    நிஜமாக்க ........
    நானும் ஒரே கடவுளே//

    கடவுளே...மேவியாரே நீங்கள் கடவுளாக ஆனால் எனக்கு நீங்கள் நிறைய வரம் தருவீர்கள் லஞ்சம் வாங்காமல்.எனவே எனக்கு நிறையச் சந்தோஷம்.ஆனால் ஒன்று,நான் நிலவுக்குப் போகவில்லை.எனக்குப் பயமாக இருக்கிறது.அது சும்...மா கனவு.அதை விட்டு விடுவோம்.
    எங்கள் நாட்டில் அமைதி தந்து என் மக்கள் சந்தோஷமாக இருக்க முதல் அருள் புரியும் சுவாமி.அதன்பிறகு நீங்கள்...தான் கடவுள் என்றுநான் குழந்தைநிலா மூலமாக டமாரம் அடித்துப் பகிரங்கப் படுத்தி
    விடுகிறேன்.செய்வீர்களா கடவுளே...!

    ReplyDelete
  56. //மேவி...இது
    புரிந்த கனவா
    அல்லது புரியாத
    கனவா ??????
    இலங்கை என்று
    சந்தோசமாய்
    போட்டு கொள்ள
    வாய்ப்பு இருக்குமோ
    உங்களுக்கு .......//

    மேவி நீங்க இன்னும் மறக்கவில்லை இதை.என்னைப்பொறுத்த மட்டில் வேணுமானால் சுவிஸ் என்பதை விட்டு ஹேமா என்று போடலாமே தவிர இலங்கை என்று போட இப்போதைக்குச் சந்தர்ப்பமே இல்லை.

    ReplyDelete
  57. கவின் இவ்வளவு வேலைக் களைப்பிலும் ஓடி வந்து உங்கள் மன எண்ணத்தைச் சொல்கிறீர்கள் நன்றி.

    எண்டாலும் உஙளுக்கு நல்ல உதை குடுக்க வேணும்.பொறுங்கோ...!

    ReplyDelete
  58. //விடியாத வாழ்வே ஆனாலும்
    பசியால் வாடிய போதும்
    உலகமே வெறிச்சோடி
    தனித்து விடப்பட்ட போதும்
    எனதென்று யாருமே
    இல்லையென்று ஆனபோதும்
    கனக்கின்ற மனம் நிரம்பி
    கண்ணீராய் வழிந்தபோதும்
    கனவில் வரும்
    கற்பனைக்கு மட்டும்
    கணக்கேயில்லை///


    ஆகா அருமை

    ReplyDelete
  59. //அப்படிக் கனவிலும்
    ஓர் திடுக்காடு.
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!//

    நிலவுக்கு மறுபக்கம் மனிதகளை போல இருக்காது என்று நினைக்கின்றேன்..

    ReplyDelete
  60. //ஞானசேகரன்...நிலவுக்கு மறுபக்கம் மனிதகளை போல இருக்காது என்று நினைக்கின்றேன்...//

    உண்மையாவா...!நிலாவாவது சுத்தமாய் இருக்குமா?சுயநலம் இல்லாமல்.

    ReplyDelete
  61. தொடர்ந்த சிந்தனையை
    முடிக்க முடியவில்லை.
    கொஞ்சம் தண்ணீர்
    குடித்துக் கொள்கிறேன்./////


    யதார்த்தம்

    ReplyDelete
  62. கனக்கின்ற மனம் நிரம்பி
    கண்ணீராய் வழிந்தபோதும்
    கனவில் வரும்
    கற்பனைக்கு மட்டும்
    கணக்கேயில்லை.///


    அருமை...அழகான உண்மை

    ReplyDelete
  63. நானும் ஓர் நாள்
    நிலவில் நின்று
    கொடி நட்டு...கை தட்டி
    காற்றில் மிதப்பதைப் போல.
    /////

    ஆஹா எக்கோவ் .....வேணாம்க்கா ...... [ ஹி ஹி....எல்லாம் க. ஆனந்த் பண்ண வேலை]

    ReplyDelete
  64. ஹேமா,

    "புதிர் போலானது என் வாழ்வு" என வருந்த வேண்டாம் - வாழ்வே புதிரானவர் வையகத்தில் பலர்.

    //எதிர்காலத்தின் முன்னால்...
    எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
    தொடர்ந்த சிந்தனையை
    முடிக்க முடியவில்லை.//
    இது மட்டும் வேண்டாம் - தண்ணீர் மட்டுமல்ல சிறிது சாப்பிட்டாவது வெளியில் வாருங்கள்.

    //என்றாலும்
    எப்போதுமே
    வேதனைகள்
    வெந்து தணிந்த பிறகு
    எல்லையற்ற கற்பனைக்குள்
    மனம் சுற்றிப் பறக்கும்.//
    மனம் மட்டுமே அறியும் - எதுவுமே நிரந்தரம் இல்லை என்று.


    //விடியாத வாழ்வே ஆனாலும்
    பசியால் வாடிய போதும்
    உலகமே வெறிச்சோடி
    தனித்து விடப்பட்ட போதும்
    எனதென்று யாருமே
    இல்லையென்று ஆனபோதும்//

    உங்க கனவில் வரும்
    கற்பனைய காக்கா தூக்கிகிட்டு போக.

    //அப்படிக் கனவிலும்
    ஓர் திடுக்காடு.
    மனிதர்களைப் போல
    நிலவுக்கும் மறுபக்கம்
    இருந்துவிட்டால் !!!//

    ஒருபக்கத்தில் தங்கிவிடுங்கள்.

    ReplyDelete
  65. இரவீ,நல்ல நாளும் அதுவுமா எதுக்கு காக்கா அது இதுன்னு சாபம்போடறீங்க.பாவம்ல நான் !

    ReplyDelete