Wednesday, April 01, 2009

மொழிபெயர்த்த காதல்...

சங்கீதக் காற்றும் சல்லாபமுமாய்
சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
புதைக்கப்பட்டிருந்தது
என் புதிய வீணை ஒன்று.

மீட்டெடுத்து
தூசு தட்டி
பட்டாடை போர்த்தி
பளிங்கு மேடையில் அமர்த்தி
மீண்டும் மெல்ல
மீட்டும் நிலைக்குக்
கொண்டு வந்து
பத்தின் வருடங்கள்.

மௌனத் தெருவில்
துணிவோடு
மறுபடியும் தடம் பதித்து
மொழி மறந்த காதலை
மொழி பெயர்த்து
பதிப்பில் இட்டவன் நீ.

தவழும் காற்றைப் பற்றியும்
அடை மழை பற்றியும்
புல்லரிக்கும் பாடல் பற்றியும்
எம் இனத்தின் அழிவு பற்றியும்
காதோடு இரகசியமாய் பேசிய

நீ.......

நிலவின்
இருப்பிடம் தேடி வரும்
வானமாய் வருகிறாய்.
அழும் குழந்தையை
ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
உன் வரவு.
வா என் அன்பே...
காத்திருக்கிறேன் காதலொடு !!!

ஹேமா(சுவிஸ்)

70 comments:

  1. //தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ.......//

    காதலிலும் இனப்பற்று வரிகள்...இதயம் தொடுகின்றன...

    ReplyDelete
  2. ஒரு வழியா நானும் "ME THE FIRST" போட்டு விட்டேன்...இல்லையா ஹேமா அக்கா...

    ReplyDelete
  3. ராஸா...ராஸா நீங்கதான் முதலாம் பிள்ளை.

    அது என்னா நான் எல்லாருக்கும் அக்காவா ஆயிட்டேன்.

    எல்லாம் கடையம் ஆனந்த் செய்த சதி.இருக்கட்டும் இருக்கட்டும்.

    ReplyDelete
  4. //சங்கீதக் காற்றும் சல்லாபமுமாய்
    சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
    புதைக்கப்பட்டிருந்தது
    என் புதிய வீணை ஒன்று.

    மீட்டெடுத்து
    தூசு தட்டி
    பட்டாடை போர்த்தி
    பளிங்கு மேடையில் அமர்த்தி
    மீண்டும் மெல்ல
    மீட்டும் நிலைக்குக்
    கொண்டு வந்து
    பத்தின் வருடங்கள்//

    ஆரம்ப வரிகள் அருமையாய் இருக்கின்றன. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  5. உங்க வலைப்பூ பெயர் சொல்லும் படமும் மிக அழகாக இருக்கிறது

    ‘வெளித்த’ என்பதற்கான பொருள் என்னவோ?

    ReplyDelete
  6. "சங்கீதக் காற்றும் சல்லாபமுமாய்
    சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
    புதைக்கப்பட்டிருந்தது
    என் புதிய வீணை ஒன்று."

    வீணை அறிவின் அடையாளம் என்று நான் கேள்வி பட்டு இருக்கிறேன் ......
    இந்த வரிகள்யில் அதன் தாக்கம் உண்டா ?????
    அவங்க என்ன வீணை வாசிக்க நேரம் இல்லை என்று கூறுகிறர்கள

    ReplyDelete
  7. "மீட்டெடுத்து
    தூசு தட்டி
    பட்டாடை போர்த்தி
    பளிங்கு மேடையில் அமர்த்தி
    மீண்டும் மெல்ல
    மீட்டும் நிலைக்குக்
    கொண்டு வந்து
    பத்தின் வருடங்கள்."

    இங்கே நீங்கள் சொல்ல்வது வீணையா ?? அல்லது அதனை வாசிக்க அவளின் அர்வதையா???

    ReplyDelete
  8. "மௌனத் தெருவில்
    துணிவோடு
    மறுபடியும் தடம் பதித்து
    மொழி மறந்த காதலை
    மொழி பெயர்த்து
    பதிப்பில் இட்டவன் நீ."

    இசையின் துணை கொண்டு காதலை மொழி பெயர்த்து விட்டால் அதன் சுயத்தை இழந்து விடாதா?????

    ReplyDelete
  9. "தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ......."

    இசை உணர்வுகளின் வெளிப்பாடே .....
    ஒர்வொரு ஆளுக்கும் ஒரு ஒரு மாதிரி தோணும் .....

    இதே மாதிரி byron யின் வரிகள் இருக்கும்....
    எது என்று சரியாக நினைவு இல்லை .....

    ReplyDelete
  10. "நிலவின்
    இருப்பிடம் தேடி வரும்
    வானமாய் வருகிறாய்.
    அழும் குழந்தையை
    ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
    உன் வரவு.
    வா என் அன்பே...
    காத்திருக்கிறேன் காதலொடு !!!"

    கடைசியா.....
    இசை மீது உள்ள தனிப்பட்ட விருப்பதை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறேன் ......
    முதல் முன்று வரிகள் பற்றி நான் confuse ஆகிவிட்டேன் .....
    வானம் கற்பனை தானே .. அதற்கும் இசைக்கும் என்ன தொடர்பு என்று புரியலவில்லை .....
    இன்னொரு விஷயம் ...
    இந்த கவிதை இசை யை பற்றியது தானே

    ReplyDelete
  11. //
    அழும் குழந்தையை
    ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
    உன் வரவு
    //
    தூங்கிட்டா வரவேற்கிறது எப்படி :)))

    ReplyDelete
  12. தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ.......///

    இந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு ஹேமா!

    ReplyDelete
  13. கலக்கல்...... அருமையான கவிதையோட்டம். ஆரம்பம் ஏதோ குறியீட்டுக் கவிதையோ என்றூ நினைத்தேன். நீங்கள் அப்படி ஏதும் எழுதுவதில்லை அல்லது எழுதிப் பார்த்ததில்லை என்பதால் அடுத்தடுத்த வரிகள் தெளிவுபடுத்தியது!!!

    சங்கீத மொழியை காதல் இடம்பெயர்த்து காத்திருக்கச் செய்கிறது. மெளனம் மொழி பெயர்த்திருக்கீறது. தலைப்பே நல்லா இருக்கு!!!

    ஷீ-நிசி சுட்டிய வரிகள்... பிரமாதம்!!!

    ReplyDelete
  14. Mozhi marantha kaathalai mozhi peyarthu,love has no language,u pick up meaningful words Hema.

    ReplyDelete
  15. காலை வேளையில் நல்லதொரு கவிதை.

    நன்றி ஹேமா

    ReplyDelete
  16. //ஹேமா said...
    அது என்னா நான் எல்லாருக்கும் அக்காவா ஆயிட்டேன்.

    எல்லாம் கடையம் ஆனந்த் செய்த சதி.இருக்கட்டும் இருக்கட்டும்.
    //

    ஹை! நானும் அப்படியே மரியாதைய கூப்பிடலாமோ?


    :))

    ReplyDelete
  17. //நிலவின்
    இருப்பிடம் தேடி வரும்
    வானமாய் வருகிறாய்.
    //

    அருமையான கற்பனை அக்கா !

    ReplyDelete
  18. கற்பனை செய்வது சுலபம்.
    அதனை தேர்ந்த சொல்லாடல் கொண்டு கவிதையாக்குவது கடினம் (எனக்கு ரொம்ப...!!). உங்களுக்கு அது இயல்பாகிவிட்டது.

    ReplyDelete
  19. தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ.......


    நல்ல வரிகள்
    கவிதையும் நன்று

    ReplyDelete
  20. \\ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
    உன் வரவு.
    வா என் அன்பே...
    காத்திருக்கிறேன் காதலொடு !!!\\

    அழகு ஹேமா!

    ReplyDelete
  21. கவிதையின் தலைப்பு அழகு ஹேமா...

    ReplyDelete
  22. ////மௌனத் தெருவில்
    துணிவோடு
    மறுபடியும் தடம் பதித்து
    மொழி மறந்த காதலை
    மொழி பெயர்த்து
    பதிப்பில் இட்டவன் நீ.//
    //

    மொழி மறந்த காதலை மொழி பெயர்ப்பதை மெல்லிசையோடு சொன்ன விதம் அழகு...

    ReplyDelete
  23. //தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ.......
    //

    காதலோடு இனப்பற்றையும் காதோடு சொல்லிவிட்டீர்கள்.. நன்றாக உள்ளது. நல்ல கவிநடை...

    ReplyDelete
  24. //நிலவின்
    இருப்பிடம் தேடி வரும்
    வானமாய் வருகிறாய்.//

    இந்த வரிகள் வெகு அழகு...மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  25. சட்டத்திற்குள் இருக்கும் பாவையும் அருமை

    ReplyDelete
  26. //அழும் குழந்தையை
    ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
    உன் வரவு.//

    நன்று!

    ReplyDelete
  27. சங்கீத மொழியில் காதல் கவிதையா. ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு. வர வர ஹேமாக்கா கவிதையில் பட்டைய கிளப்புகிறீர்கள். தொடரட்டும்...தொடரட்டும்.
    //
    ஹேமா said...
    ராஸா...ராஸா நீங்கதான் முதலாம் பிள்ளை.

    அது என்னா நான் எல்லாருக்கும் அக்காவா ஆயிட்டேன்.

    எல்லாம் கடையம் ஆனந்த் செய்த சதி.இருக்கட்டும் இருக்கட்டும்.
    //
    ஹி...ஹி...ஹி.

    ReplyDelete
  28. சங்கீதக் காற்றும் சல்லாபமுமாய்
    சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
    புதைக்கப்பட்டிருந்தது
    என் புதிய வீணை ஒன்று.

    தொடக்கமே தென்றலாய் வருடுகிறது

    ReplyDelete
  29. தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ......

    பொறுப்புள்ள காதல்

    ReplyDelete
  30. மீட்டெடுத்து
    தூசு தட்டி
    பட்டாடை போர்த்தி
    பளிங்கு மேடையில் அமர்த்தி
    மீண்டும் மெல்ல
    மீட்டும் நிலைக்குக்
    கொண்டு வந்து
    பத்தின் வருடங்கள்

    சொல்லாடல் அருமை

    ReplyDelete
  31. //தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ.......//

    தேசம் பற்றிய உங்கள் உள்ளக்கிடக்கை காதல் கவிதையிலும்..

    //நிலவின்
    இருப்பிடம் தேடி வரும்
    வானமாய் வருகிறாய்.//

    நல்ல கற்பனை.. ரசித்தேன் தோழி..

    ReplyDelete
  32. rompa busy appurama varne

    ReplyDelete
  33. டாக்டர் ஹேமாக்காவின் உருவாக்கத்தில் மற்றெhரு இசை முத்து இந்த கவிதை.

    ReplyDelete
  34. அப்பவே பின்னூட்டம் போட்டிருக்கலாமோ! இப்ப 41வதா ஆயிடிச்சே

    ReplyDelete
  35. //தவழும் காற்றைப் பற்றியும்
    அடை மழை பற்றியும்
    புல்லரிக்கும் பாடல் பற்றியும்
    எம் இனத்தின் அழிவு பற்றியும்
    காதோடு இரகசியமாய் பேசிய
    நீ.......///

    :::::::::::::::::::::::
    வழமைபோல தமிழினத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, ஆதரவு, பணிவை இந்த கவிதையிலும் சொல்லிடிங்க. அழகான வரிகள். எங்கிருந்து எப்படி வருது உதெல்லாம்

    ReplyDelete
  36. அருமை ஹேமா.... கவிதையும் கூடவே ரவி வர்மா வரைந்த ஓவியமும்.

    ReplyDelete
  37. ஹேமா முடிந்தால் ராஜா ரவி வர்மா வரைந்த இது போல இன்னும் சிறப்பான பல ஓவியங்கள் தேடிப்பாருங்கள். இன்னும் சிறப்பான பல கவிதைகளுக்கு ஆக்கம் பிறக்கும். உண்மை.

    ReplyDelete
  38. //மௌனத் தெருவில்
    துணிவோடு
    மறுபடியும் தடம் பதித்து
    மொழி மறந்த காதலை
    மொழி பெயர்த்து
    பதிப்பில் இட்டவன் நீ.//

    உண்மை காதலுக்கு மொழி என்றும் ஒரு தடையாக இருந்ததில்லை!!!

    ReplyDelete
  39. //ராஸா...ராஸா நீங்கதான் முதலாம் பிள்ளை.

    அது என்னா நான் எல்லாருக்கும் அக்காவா ஆயிட்டேன்.

    எல்லாம் கடையம் ஆனந்த் செய்த சதி.இருக்கட்டும் இருக்கட்டும்.//

    அப்ப நீங்க பாட்டியா அக்கா ?

    ReplyDelete
  40. கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  41. ////நிலவின்
    இருப்பிடம் தேடி வரும்
    வானமாய் வருகிறாய்.////


    ஆஹா...வானம் இருக்குற இடத்துக்கு தான் நிலா போகும்னு நினச்சேன்...இது புதுசா இருக்கே ..

    ReplyDelete
  42. ஹேமா.....கொஞ்சம் ஆணி கடப்பாரை அதிகமா போச்சு...தாமதமா வந்ததுக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  43. வந்ததும் வந்தேன் ...போட்டு போறேன் ஒரு 50

    ReplyDelete
  44. //சங்கீதக் காற்றும் சல்லாபமுமாய்
    சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
    புதைக்கப்பட்டிருந்தது
    என் புதிய வீணை ஒன்று.

    மீட்டெடுத்து
    தூசு தட்டி
    பட்டாடை போர்த்தி
    பளிங்கு மேடையில் அமர்த்தி
    மீண்டும் மெல்ல
    மீட்டும் நிலைக்குக்
    கொண்டு வந்து
    பத்தின் வருடங்கள்//

    arputham hema mam

    ReplyDelete
  45. ///நிலவின்
    இருப்பிடம் தேடி வரும்
    வானமாய் வருகிறாய்.////

    alagiya karpanai thiran

    ReplyDelete
  46. /ஹேமா said...
    அது என்னா நான் எல்லாருக்கும் அக்காவா ஆயிட்டேன்.

    enna seyyalam vidunga arasiyal la ethu ellam sagajam appu

    ReplyDelete
  47. //அழும் குழந்தையை
    ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
    உன் வரவு.//

    rasithen

    ReplyDelete
  48. alagiya ravivarmavin oviyam anaithilum alagu

    ReplyDelete
  49. இதைத் தான் சொல்லுவதோ வரவேற்புக் கவிதை என்று??


    கவிதை புரிய வேண்டியவருக்குப் புரிந்தால் சரி.

    என்ன அவர் வந்திட்டாரோ??

    ReplyDelete
  50. தோழி..எங்க கொஞ்ச நாளா நம்ம ஏரியா பக்கம் ஆளையே காணோம்? நம்ம நண்பர்களுக்கு பட்டாம்பூச்சி விருது தந்து இருக்கேன்.. நீங்களும் வாழ்த்தினா சந்தோஷப்படுவாங்க..

    ReplyDelete
  51. என் அன்பு தோழி ஹேமா...சில நாள் இடைவெளி கழித்து உங்கள் வலைப்பூ தரிசித்தேன்...மனதை உலுக்கும் கவிதைகள்...எப்படி உங்களால் மட்டும் முடிகிறது ஹேமா??

    "நிலவின்
    இருப்பிடம் தேடி வரும்
    வானமாய் வருகிறாய்.
    அழும் குழந்தையை
    ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
    உன் வரவு.
    வா என் அன்பே...
    காத்திருக்கிறேன் காதலொடு !!!"

    இவ்வரிகளில் உங்களவர் மீது உள்ள உங்களது காதலும் வெளிப்படுகிறது ஹேமா...ஒவ்வொரு கவிதையிலும் உங்கள் உணர்வுகளை வெளிபடுத்தும் அழகு மிக அருமை தோழியே....

    ReplyDelete
  52. எங்க போயிட்டிங்க சீக்கிரம் வாங்கோ அக்கா! ஓய்வு போதும்.

    ReplyDelete
  53. enna achu hema?????

    wy ths long gap???????

    ReplyDelete
  54. also waiting to read ur reply for my comment????

    ReplyDelete
  55. எங்க போயிட்டிங்க அக்கா!

    ReplyDelete
  56. என்ன இன்னும் தூங்கி எழுந்திருக்கலையா!!! ரெம்ப நாள் கடைக்கு விடுமுறை விடக்௬டாது

    ReplyDelete
  57. லீவு முடிஞ்சாச்சு தம்பிகளா.
    வந்திட்டேன்.மனசுதான் சரில்லாம இருக்கு.வெறுமையாய் அழுது களைக்குது.

    குழந்தைநிலாவும் வெறுமையாய் எனக்காகக் காத்துக் கிடக்கிறாள்.
    என்றாலும் அவளை இன்னும் அழகு படுத்தியிருக்கிறேன்.யாருமே கவனிக்கலையா?சொல்லாவே இல்லையே யாரும்.

    எத்தனையோ பேரின் குற்றச்சாட்டு,குழந்தைநிலாவுக்கு வரக் கஸ்டமா இருக்கு என்று.அதற்கு மாதிரியான Temlet இப்போ மாற்றப்பட்டு இருக்கு.
    உதவியவருக்கும் என் நன்றி.

    அன்போடு என்னை விசாரித்துத் தேடிய என் சகோதரர்களுக்கும் என் நன்றி.இனிச் சந்திக்கிறேன் எல்லாரையும்.வாங்கோ இனி வாங்கோ.

    ReplyDelete
  58. "ஹேமா said...
    லீவு முடிஞ்சாச்சு தம்பிகளா.
    வந்திட்டேன்.மனசுதான் சரில்லாம இருக்கு.வெறுமையாய் அழுது களைக்குது."

    ஏன் அப்படி


    "குழந்தைநிலாவும் வெறுமையாய் எனக்காகக் காத்துக் கிடக்கிறாள்."
    அமாங்க ......
    நாங்களும் தான் வெயிட் பண்ணுறோம்

    "என்றாலும் அவளை இன்னும் அழகு படுத்தியிருக்கிறேன்.யாருமே கவனிக்கலையா?சொல்லாவே இல்லையே யாரும்."
    நான் தான் பிரஸ்ட் பார்த்தேன்னுங்க ....
    நல்ல இருக்கு


    "எத்தனையோ பேரின் குற்றச்சாட்டு,குழந்தைநிலாவுக்கு வரக் கஸ்டமா இருக்கு என்று.அதற்கு மாதிரியான Temlet இப்போ மாற்றப்பட்டு இருக்கு.
    உதவியவருக்கும் என் நன்றி."

    யாருங்க அந்த நல்லவரு ..........

    "அன்போடு என்னை விசாரித்துத் தேடிய என் சகோதரர்களுக்கும் என் நன்றி.இனிச் சந்திக்கிறேன் எல்லாரையும்.வாங்கோ இனி வாங்கோ."

    லேட் ஆகி இருந்தால் .....
    சென்னை ல இருந்து சுவிஸ் க்கு ஆட்டோ வந்து இருக்கும்

    ReplyDelete
  59. கவிதை நல்லாயிருக்கு வார்த்தைகளில்.. ஆனால் ஒட்டுமொத்தப் பொருள்தான் புரியவில்லை..ஒவ்வொரு பத்தியும் தனித்தனிப் பொருளைத் தருவதாக எண்ணம்(எனக்கு)..
    ராஜா ரவிவர்மாவின் ஓவியப் பெண் அழகு...
    என்னக்கா டெம்பளேட் மாத்திருக்கீங்க.. உங்க பதிவு திறந்தா, பக்கத்து ஜன்னல்ல ந்துவும் திறக்க மாட்டேங்குது. கணினியே ஸ்தம்பிச்சிப் போயிருது.. கவிதையைப் படிச்சு மிரளுதா என்னன்னு தெரியலை...?!

    ReplyDelete
  60. மேவி,உங்க அன்புக்கு நிறைஞ்ச நன்றி.தூர இருந்தாலும் ஒருவரை ஒருவர் காணாவிட்டாலும் பதிவில் காணவில்லையென்றால் ஒரு தேடல்,அக்கறை.இது தமிழர்களிடம் மட்டுமே உள்ள ஒரு அபூர்வக் குணம்.நன்றி மேவி.

    அதுசரி,நான்தான் ஆட்டோ பிடிச்சு வரலாம்ன்னு இருக்கேன்.மகாகிட்ட பழமொழி-புதுமொழின்னு மாட்டிவிட்டு,இப்போ மகா பாத்திட்டு இருக்காங்க.

    ReplyDelete
  61. தமிழ்ப்பறவை அண்ணா,உங்களுக்குக்கும் நான் அக்கா ஆகிட்டேனா !சரி...சரி.புதுப்பதிவு போட்டிருக்கீங்க.இருங்க வரேன்.என்ன அண்ணா எப்போவோ நீங்களும் சொன்ன ஞாபகம்.டெம்லெட் இழுக்குதுன்னு.இப்போ Firefox ல போட்டுப் பாத்துச் சரின்னுதானே இருக்கு.ஏன் உங்களுக்கு யன்னல் திறக்க மாட்டேங்குது?என்னைக் காணப் பயப்படுதோ !


    கவிதையை எல்லாம் சேர்த்துப் பாருங்க.ஒரு இடத்தில முடியும்.

    ReplyDelete
  62. இதவிட தாமதமா யாரும் வரமுடியாது ...
    வானமே வந்து போய்விட்டது - நான் வரும்முன்.

    ReplyDelete
  63. இரவீ,வானம் எப்பவும் எங்களோடதான்.திரும்பவும் நிலவைத் தேடி வரும்.சந்திப்பீர்கள்.

    ReplyDelete