ஆண்டாண்டு காலமாய் அடங்கி முடங்கி
குனிந்த தலையோடு ஐயா...மாத்தையா
போட்டுப் போட்டு
குனிந்த முதுகை முன்னே வளைத்து
நிமிராது வாழ்கிறாய்.
அறிவே வராதா...அருகே பார்
மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட
மழை முடிய முடி தூக்கும்.
வறுமையின் விளிம்பில் விழித்துக் கொண்டிருப்பவனே,
அடுப்பங்கரைக் கூரையால் விழுந்து
அடுப்பை நிரப்பும் மழை நீர் கூட
உன் பொறுமையை எரிச்சலாக்கவில்லையா.
அட்டை உறிஞ்சிய மிச்ச இரத்தத்தை
உறிஞ்சும் முதலாளி வர்க்கத்தை
முன்னுக்கு நிமிர்த்துகின்ற முதுகெலும்பே நீதானே
பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.
பஞ்சத்தில் உன் பருவம் திணற
தேயிலை மரத்திற்கு உரமாய் செரிப்பவனே,
மரத்துவிட்ட உன் இளம்
இனங்களைத் தட்டி எழுப்பு.
உப்புக் காரத்தோடுதானே
ஒரு வேளையாவது உண்கிறாய்,
தூங்காதே தோழனே.
உணர்ச்சி கொந்தளிக்க கொஞ்சம் பொங்கி எழு.
காம்பராவுக்குள் ஓரம் கட்டி உன்னை ஒதுக்கிவிட்டு
உன் ரத்தத்தை சாறாய் கசக்கிப் பிழிந்தே
வழிந்து விழுகிறது தேநீரின் சாயம்-ஆனால் நீ
சக்கைக்குச் சலாம் போட்டு
சத்தமே இல்லாமல் வாங்கிக் கொள்கிறாய்.
கேட்டுத்தான் பாரேன் கொஞ்சம்.
குட்டக் குட்டக் குனிகிறாயே
உனக்குள்ளும் ஓர் உணர்வு
உள்ளதென்று கண்டு கொள்ளட்டும்.
காலத்தின் காதிலும் உன் ஓலம்
ஓர் நாள் விழட்டும்.
உனக்குள் இருக்கும் இரகசியம் உலகமும் அறியட்டும்.
கட்டுண்டு களைக்காதே.
முன்னேறு...முன்னேறு
ஒன்றாக...மூன்றாக...முந்நூறு ஆகு.
மண்டி போடாதே.
இந்த பூமிக்குள்ளேதான் புதைகிறது உன் ஆணி வேரும்.
மனிதா மானத்தின் பொருளை விளங்கிக்கொள்
கண்களைத் திற.
மழைமுகிலின் இருளால் சூரியனைக் காணவில்லை.
மழையாய் அடித்துப் பெய்
இருள் விலகும்.
அடிமைச் சுகமே ஆனந்தம் என்று அடங்காதே
நாளைப் பொழுதை நன்றே கழிக்க
இன்றே எண்ணி விலங்கை விலக்கு
சுதந்திரக் காற்றைச் சுகமாய் சுவாசிப்பாய் !!!
இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக
என் எண்ணத்தில் எழுந்தது.இப்போ கலை இராகலை என் பதிவுகளோடு உலவியபின் தூசு தட்டி எடுத்தது.மாற்றம் செய்யாமல் பதிவில்.
ஹேமா(சுவிஸ்)
எழுந்துட்டோம்
ReplyDeleteவருவோம் ...
அருகே பார்
ReplyDeleteமழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட
மழை முடிய முடி தூக்கும்.\\
ஆஹா! அருமை ஹேமா!
என்ன உணர்வு அடடடா
உணர்ந்தேன் ... இரசித்தேன்
//பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.
ReplyDeleteபஞ்சத்தில் உன் பருவம் திணற
தேயிலை மரத்திற்கு உரமாய் செரிப்பவனே,
மரத்துவிட்ட உன் இளம்
இனங்களைத் தட்டி எழுப்பு.//
வறுமையை வேரறுக்க வைக்கும்
தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் ஹேமா...
//இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக
ReplyDeleteஎன் எண்ணத்தில் எழுந்தது.//
12 வருடத்திற்கு முன்பே உங்களுக்கு
வார்த்தைகள் வசப்பட்டிருக்கின்றன...
வாழ்த்துக்கள் ஹேமா...
Me the 4th...
ReplyDeleteVery nice...
Feels like 'Electric Shock' :-)
12 வருடங்களுக்கு முன்னால் எழுதினாலும் இக்காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்லி சந்தோசப்படுவதா?
ReplyDeleteஇல்லை இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் மாற்றம் வரவில்லை என்று வருத்தப்படுவதா?
வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையடி
அருமை ஹேமா!!! ஆழமான கருத்துக்களை கூறும் வரிகள்/
ReplyDelete//அட்டை உறிஞ்சிய மிச்ச இரத்தத்தை
ReplyDeleteஉறிஞ்சும் முதலாளி வர்க்கத்தை
முன்னுக்கு நிமிர்த்துகின்ற முதுகெலும்பே நீதானே//
நன்று
//குட்டக் குட்டக் குனிகிறாயே
ReplyDeleteஉனக்குள்ளும் ஓர் உணர்வு
உள்ளதென்று கண்டு கொள்ளட்டும்.
காலத்தின் காதிலும் உன் ஓலம்
ஓர் நாள் விழட்டும்.
உனக்குள் இருக்கும் இரகசியம் உலகமும் அறியட்டும்.///
நல்ல கரு,,.. உனக்குள் இருக்கும் தீ வந்தே தீரும்... எழு...
வார்த்தைகள் கோர்வையாய் படிக்கப் படிக்க காட்சிகள் மனதினுள் நிற்கிறது!!
ReplyDelete//அடுப்பை நிரப்பும் மழை நீர் கூட
ReplyDeleteஉன் பொறுமையை எரிச்சலாக்கவில்லையா//
வரும்,.... வரவேண்டும்...
மனதை பிழிந்த வரிகள்
ReplyDeleteஅருமை ஹேமா
ReplyDeleteவரும்,.... வரவேண்டும்...
வந்து விட்டது.
நம்பிக்கை தரும் வரிகள்!
ReplyDeleteவிடியல் வரும் என்று நம்புவோம்!!
Kattundu kalaikaathe,munneru munneru, 12 varusathukku munnalaye ezhutha aarampichiteengalaakkum,athaan ippa intha podu podureenga.
ReplyDeleteஎன்ன நம்ம பேரு அடிப்படுதேனு ஓடோடி வந்த எனக்கு தேனீர்!
ReplyDelete12 வருடத்திற்கு முன் எழுதிய கவிதை. தூசு தட்டி எடுத்த கவியும் மாறவில்லை மலையகமும் இன்னும் மாறவில்லை அக்கா!
ReplyDelete//வழித்து விழுகிறது தேநீரின் சாயம்-ஆனால் நீ
சக்கைக்குச் சலாம் போட்டு
சத்தமே இல்லாமல் வாங்கிக் கொள்கிறாய்.
கேட்டுத்தான் பாரேன் கொஞ்சம்//
யாரிடம் கேட்பது என்று தான் தெரியல அக்கா
//
ReplyDeleteமழைமுகிலின் இருளால் சூரியனைக் காணவில்லை.
மழையாய் அடித்துப் பெய்
இருள் விலகும்.
அடிமைச் சுகமே ஆனந்தம் என்று அடங்காதே
நாளைப் பொழுதை நன்றே கழிக்க
இன்றே எண்ணி விலங்கை விலக்கு
சுதந்திரக் காற்றைச் சுகமாய் சுவாசிப்பாய் !!!//
சூப்பரான வரிகள்.
நன்றிகள் அக்கா!!!
சாட்டை மட்டும் தான் என் கண்களுக்கு தெரியவில்லை ...
ReplyDelete//12 வருடத்திற்கு முன் எழுதிய கவிதை.//
ReplyDeleteநீங்களும் இன்னும் மாறல ... அதே கோபம் இன்னும் இருக்கு.
உணர்ச்சிகரமான கவிதை.. நல்லா இருக்கு தோழி
ReplyDelete"இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக
ReplyDeleteஎன் எண்ணத்தில் எழுந்தது."
ஒ ...
ஷில்லோன் ரேடியோ ல ஒருத்தங்க கவிதை சொல்லுவாங்க ....
ஹேமா அது நீங்க தானா???????
கவிதைக்கு பின்னோட்டம் பிறகு போடுகிறேன் ....
தற்சமயம் வேலை பளு ஜாஸ்தியா இருக்கு .....
//இப்போ கலை இராகலை என் பதிவுகளோடு உலவியபின்
ReplyDeleteதூசு தட்டி எடுத்தது.//
எவ்வளவு கிலோ இருக்கும்..இன்னும் கவுஜையை படிக்கலை. மறுபடி வாரேன்
தேயிலை தொழிலாளியின் வாழ்க்கை போராட்டம் உங்கள் கவிதையில் படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅழகான வார்த்தையில் செதுக்கப்பட்டுள்ளதால் ரசிக்க முடிகிறது. துக்கத்தையும் உணர முடிகிறது.
சுதந்திரகாற்றின் தாகம் கவிதையில் தெரிகிறது. உங்கள் எழுத்து நடையிலும் தெரிகிறது.
me the 25
ReplyDeleteபன்னிரண்டு வருடங்களுக்கு முன்பா? அடேயப்பா... அப்பவே இப்படியா..
ReplyDeleteமாத்தையா? அப்படியென்றால் என்ன?
கவிதை ஒரு எழுச்சி உணர்வோடு எழுதப்பட்டிருக்க வேண்டும். சோர்வின் காதில் சுகமாய் ஓதிய சுறுசுறுப்பு வரிகள்!
காம்பரா?
கவிதையில் ரசித்த சில வரிகள் :
அட்டை உறிஞ்சிய இரத்தம்
புடவையில் நூறு கண்கள்
இரத்தச் சாற்றில் தேநீர் சாயம்
மழை பெய்ய விலகும் இருள்...
(கொஞ்சம் பிஸிங்க சகோதரி!!)
ஒருமுறை ஊட்டிக்குச் சென்ற பொழுது தேயிலைத் தொழிலாளியைச் சந்தித்திருக்கிறேன். நண்பர்கள் உடன் இருந்ததால் எதுவும் பேசமுடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த தேயிலைச் செடியோடு பேசிக் கொண்டிருந்ததை மட்டும் பதிவு செய்துகொண்டு வந்துவிட்டேன்..
ReplyDeleteமீண்டும் அப்பதிவுகள் திறந்தது இக்கவிதையில்
பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.///
ReplyDeleteஉன் ரத்தத்தை சாறாய் கசக்கிப் பிழிந்தே
வழித்து விழுகிறது தேநீரின் சாயம்-ஆனால் நீ
சக்கைக்குச் சலாம் போட்டு
சத்தமே இல்லாமல் வாங்கிக் கொள்கிறாய்.
//
அருமை ஹேமா....அவர்களின் வலி உணர்ந்து எழுதிருக்கீங்க
இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக
ReplyDeleteஎன் எண்ணத்தில் எழுந்தது.
///
ஆத்தி அப்போ ஆரம்பிச்சது இன்னும் நிருத்தலியா...சரித்தேன்
ஆண்டாண்டு காலமாய் அடங்கி முடங்கி
ReplyDeleteகுனிந்த தலையோடு ஐயா...மாத்தையா
போட்டுப் போட்டு
குனிந்த முதுகை முன்னே வளைத்து
நிமிராது வாழ்கிறாய்.
அறிவே வராதா...அருகே பார்
மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட
மழை முடிய முடி தூக்கும்.///
அறிவு இருந்தாலும் அடங்கிப்போகும் அன்பு மக்கள்!!
12 வருடத்துக்கு முன்பே கவிஞரா?
ReplyDeleteஜமால்,புதியவன்,மாதவ்,செய்யது அகமது,அமுதா,ஞானசேகரன்,பூர்ணி,அபு,கார்த்திக் அம்மா,ஜோதிபாரதி,
ReplyDeleteகலை,இரவீ,கார்த்திகப் பாண்டியன்,மேவி,நசரேயன்,கடையம் ஆனந்த்,ஆதவா,நிலா அம்மா,தேவா எல்லோருமே உங்கள் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தீர்கள்.அத்தனை பேருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
ஆதவா,கேட்டிருந்தார் "மாத்தையா" என்றால் சிங்களத்தில்.
முதலாளியை-பெரியவரை அழைப்பது.
நான் சின்ன வயதில் மலையகத்தில் வாழ்ந்திருக்கிறேன்.அவர்களோடு விளையாடி,சாப்பிட்டு,அவர்கள் கஸ்டங்களைப் பார்த்து சங்கடப்பட்டும் இருக்கிறேன்.அவர்களை நினைத்தால் ஒரு பதிவே போடலாம்.எங்கள் நாட்டில் இன்னும் அவர்களுக்கு உண்டான உரிமைகள் எதுவுமே கிடைக்கவில்லை.கலை சொல்கிறார் இன்னும் அதே நிலைமைதான் என்று.அதை நினைத்தால்தான் கவலை.
நான் 2003 ஊருக்குப் போனபோது இரத்தினபுரிபோயிருந்தேன்.அப்பாவின் சிநேகிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.இன்னும் போவேன்.
என் விருப்பமான் இடம் மலையகம்.
ரொம்ப பிஸியோ
ReplyDeleteஒரே கமெண்ட்ல பதிலிட்டீர்கள்
//இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக
ReplyDeleteஎன் எண்ணத்தில் எழுந்தது.
இப்போ கலை இராகலை என் பதிவுகளோடு உலவியபின்
தூசு தட்டி எடுத்தது.
மாற்றம் செய்யாமல் பதிவில்.//
கவிதை உணர்வுக்கு உரமூட்டுகிறது.
வாழ்த்துக்கள்.
//
ReplyDeleteமழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட
மழை முடிய முடி தூக்கும்.
//
கூர்மை :)
//
ReplyDeleteநீ
சக்கைக்குச் சலாம் போட்டு
சத்தமே இல்லாமல் வாங்கிக் கொள்கிறாய்.
கேட்டுத்தான் பாரேன் கொஞ்சம்.
//
கேட்க தூண்டும் வரிகள் . அருமை ஹேமா :)
ஜமால் இந்த வாரம் வருகிற வாரங்களில் வேலை கொஞ்சம் கூடத்தான்.
ReplyDeleteஅதோட...ஒரு வாரத்துக்கு வீட்ல ஆளுங்க...!
அதுதான் எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்றி.பரவால்லதானே.
கவிதை ரொம்ப நல்ல இருக்கு ....
ReplyDeleteஎழுச்சி மிகுந்தத இருக்கு .....
ஆனால் நீங்கள் இந்த கவிதையில் மலையக மக்கள் ஏதோ அடிமை சுகம் கண்பது தவறு என்று சொல்லி இருக்கீங்க ....
நான் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதி ஒருவரின் பேட்டியை படித்தேன் அதில் அவர் மலையக மக்கள் அடிமைப்பட்டு போவது இல்லை ....
வாழ்க்கை தரம் உயர்த்தவே நாங்கள் அரசுடன் சுமுகமாக இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.........
அவர் சொன்னது உண்மையா???????சொல்லுங்க ............
மற்றபடி கவிதைல பாரதியார் எழுச்சி கவிதை சாயல் தெரியுது ......
ஆளவந்தான்...
ReplyDeleteவாசவன்...
உங்க வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மேவி,நீங்க சொன்ன அந்தப் பிதிநிதி யார்?தொண்டைமான் அவரைத் தொடர்ந்து அவரது மகனும் தான் மலையக மக்களுக்காக வாதடியபடி இருக்கிறார்கள்.
ReplyDeleteஎனக்கென்றால் அங்கு சின்னதாய் ஒரு திருத்தம் காண்கிறேனே தவிர
உ+ம் -பொதுக் கழிவறை,
மின்சாரம்,
முன்பு பலகைகளால் காம்பராக்கள்-இப்போ சீமெந்தில்.
மற்றும்படி அவர்களது வாழ்க்கைத்தரம்,கல்வி அப்படியே
தான்.கலை இராகலை அந்தப் பகுதியில் இப்போதும் வாழ்ந்து
கொண்டிருப்பவர்.அவரே சொல்கிறார்.
இன்னும் மாற்றமில்லை என்று.
எனக்குத் தெரிந்த வரைக்கும் இது.முடிந்தால் கலை இன்னும் விளக்கம் சொன்னால் நல்லது.
விரைவில் சரியாகும்
ReplyDeleteநம்பிக்கையுடன் இருப்போம்
//வறுமையின் விளிம்பில் விழித்துக் கொண்டிருப்பவனே,
அடுப்பங்கரைக் கூரையால் விழுந்து
அடுப்பை நிரப்பும் மழை நீர் கூட
உன் பொறுமையை எரிச்சலாக்கவில்லையா.
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டேயிருக்கும்.
\\ஹேமா said...
ReplyDeleteஜமால் இந்த வாரம் வருகிற வாரங்களில் வேலை கொஞ்சம் கூடத்தான்.
அதோட...ஒரு வாரத்துக்கு வீட்ல ஆளுங்க...!
அதுதான் எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்றி.பரவால்லதானே.\\
தப்பேயில்லீங்கோ ...
// MayVee said...
ReplyDeleteகவிதை ரொம்ப நல்ல இருக்கு ....
எழுச்சி மிகுந்தத இருக்கு .....
ஆனால் நீங்கள் இந்த கவிதையில் மலையக மக்கள் ஏதோ அடிமை சுகம் கண்பது தவறு என்று சொல்லி இருக்கீங்க ....
நான் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதி ஒருவரின் பேட்டியை படித்தேன் அதில் அவர் மலையக மக்கள் அடிமைப்பட்டு போவது இல்லை ....
வாழ்க்கை தரம் உயர்த்தவே நாங்கள் அரசுடன் சுமுகமாக இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.........
அவர் சொன்னது உண்மையா???????சொல்லுங்க ............
மற்றபடி கவிதைல பாரதியார் எழுச்சி கவிதை சாயல் தெரியுது ......///
என்ன சார் நீங்க ஒரு அரசியல்வாதியின் பேட்டியை போய் நம்பலாமா? ஹேமாக்கா சொன்னவை 100 வீதம் உண்மையே! இனி தொடர்ந்து வரும் என் பதிவுகளில் இன்னும் பலவற்றை ஆதாரத்துடன் தருகின்றேன்.
///ஹேமா said...
ReplyDeleteமேவி,நீங்க சொன்ன அந்தப் பிதிநிதி யார்?தொண்டைமான் அவரைத் தொடர்ந்து அவரது மகனும் தான் மலையக மக்களுக்காக வாதடியபடி இருக்கிறார்கள்.
எனக்கென்றால் அங்கு சின்னதாய் ஒரு திருத்தம் காண்கிறேனே தவிர
உ+ம் -பொதுக் கழிவறை,
மின்சாரம்,
முன்பு பலகைகளால் காம்பராக்கள்-இப்போ சீமெந்தில்.
மற்றும்படி அவர்களது வாழ்க்கைத்தரம்,கல்வி அப்படியே
தான்.கலை இராகலை அந்தப் பகுதியில் இப்போதும் வாழ்ந்து
கொண்டிருப்பவர்.அவரே சொல்கிறார்.
இன்னும் மாற்றமில்லை என்று.
எனக்குத் தெரிந்த வரைக்கும் இது.முடிந்தால் கலை இன்னும் விளக்கம் சொன்னால் நல்லது./////
===============================================================
எனக்கென்றால் அங்கு சின்னதாய் ஒரு திருத்தம் காண்கிறேனே தவிர
உ+ம் -பொதுக் கழிவறை,
மின்சாரம்,
முன்பு பலகைகளால் காம்பராக்கள்-இப்போ சீமெந்தில்.
================================================================
அக்கா மேற்கூறியவைகூட இன்னும் முழுமை பெறவில்லை.
பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.
ReplyDeleteபஞ்சத்தில் உன் பருவம் திணற
தேயிலை மரத்திற்கு உரமாய் செரிப்பவனே,
மரத்துவிட்ட உன் இளம்
இனங்களைத் தட்டி எழுப்பு.//
ஹேமா பன்னிரண்டு வருடத்திற்கு முன்னும் எழுதிய கவிதையிலும் முதிர்வு தெரிகிறது...நீங்கள் பெரிய ஆள் தான் போங்கோ??
நாங்கள் என்ன சின்னத் தூசுகள்??
கவிதை நன்றாக உள்ளது..
கட்டுண்டு களைக்காதே.
ReplyDeleteமுன்னேறு...முன்னேறு
ஒன்றாக...மூன்றாக...முந்நூறு ஆகு.
மண்டி போடாதே.
இந்த பூமிக்குள்ளேதான் புதைகிறது உன் ஆணி வேரும்.
மனிதா மானத்தின் பொருளை விளங்கிக்கொள்
கண்களைத் திற.//
அவர்கள் முன்னேற யார் தான் வழி விடுகிறார்கள்? எங்கள் வாழ்வு ஓரளவு எல்லோராலும் அடையாளங் காணப்படுகின்றது. ஆனால் மலையகத் தமிழர்களின் வாழ்வு???
கலை நன்றி.திரும்பவும் வந்து மேவிக்கு பதில் சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteஎன்னைவிட உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அதிக.நீங்கள் சொன்னதுபோல உங்கள் பதிவில் அவர்களின் அவஸ்தைகளை நிறைய பதிவில் இடுங்கள்.நன்றி கலை.
//கமல்...ஹேமா பன்னிரண்டு வருடத்திற்கு முன்னும் எழுதிய கவிதையிலும் முதிர்வு தெரிகிறது...நீங்கள் பெரிய ஆள் தான் போங்கோ??
நாங்கள் என்ன சின்னத் தூசுகள்??//
என்ன கமல் நீங்க.என்னை இப்பிடி பெரிய ஆள் ஆக்கிப்போட்டீங்கள்.
சரி...சரி.
கமல்,நான் அவர்களோடு கலந்து வாழ்ந்தபடியால் அப்பவே நான் அவர்களின் உணர்வைப் படித்திருந்தேன்.அவர்களில் எனக்கு அலாதிப் பிரியமும் கூட.கள்ளமில்லா அன்பு நிறைந்த மனிதர்கள்.வெளி உலகம் தெரியாத வெகுளிகள்.
தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.கருத்துக்கும் நன்றி.
ஜமால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு நினைச்சேன்.
ஆனாலும் இண்ணைக்கு உப்புமடச் சந்திக்கு ஒரு புதுப் பதிவு போட்டாச்சு.
12 வருடம் முன்னர் எழுதியதா??
ReplyDeleteநல்லா இருக்கு
me th 50
ReplyDeleteநீங்க ரொம்ப நல்லா எழுதுறிங்க .. .
ReplyDeleteஉங்களுக்கு நேரம் இருந்தான் நான் எழுதி இருக்கும் சாரி கிறுக்கி இருக்கும் பதிவகளை பார்த்து ஒரு கருத்து சொல்லுங்க ... :-)
உங்களுக்கு தமிழ்ச்ல வோட்டும் போட்டாச்சு ... நம்ம பதிவ படிச்சி பிடிச்ச வோட்ட போடுங்க
தொடர்ந்து எழுதுங்கள்!
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html