Friday, February 27, 2009

நித்திரை மேகங்கள்...

நாள் முழுதும்
உழைத்துக் களைத்து
குடிசை திரும்பும் ஏழையாய்
பகல் ஒளிந்து கொள்ள,
இருள் மெல்ல மெல்ல
தன் கடமைக்காய்.

தலையணையின் பஞ்சுக்குள்
ஓய்வெடுத்த
உன் உணர்வுகள்
உறக்கம் கலைத்து,
விழித்துக் கொள்ள வைக்கிறது
உன் ஞாபகங்களை.

ஓர் ஏழைத்தாயின் கண்களில்
காத்திருக்கும் ஏக்க இருளாய்
உருளும் உலகை
இருள் ஆக்கிரமிக்க,
என் விழியும் மனமும் மட்டும்
தேடுதல் வேட்கையோடு.

தவறு செய்த குழந்தை
தந்தை தரும் தண்டனைக்காய்
காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,
பசியோடு இரை தேடும்
பறவையின் கவனத்தோடு
வெறித்த என் பார்வை.

உனக்கென்ன
குளிர் காலம் வர
வெப்பம் தேடி ஓடும்
பறவையாய்
உன் பாட்டில்
நீ...
வருகிறாய் போகிறாய்.

நான் இங்கு
ஒவ்வொரு விநாடியும்
உன் நினைவு மதில்களில்
முட்டி மோதி
காயப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன்.

என் தேசத்து
அமைதிப் பேச்சு வார்த்தையாய்
நீ....ண்டு
இன்னும் நீ....ண்டு
தூரமாகிப் போகிறவனே,
விழியோடு
மனதையும் சேர்த்தே
திறந்து வைத்துக்
காத்திருப்பேன்.

என்றோ ஒரு நாள்
நீ....
விழியோடும் மனதோடும்
நிஜமாய் நிறைந்து கொள்வாய்
என்கிற நம்பிக்கையோடு
ஸ்தம்பித்தபடி நான்.

ஓய்வெடுத்துக் கொள்
நீ....
நித்திரை மேகங்களாய் !!!
*************************************************
மேகங்கள் தூங்கினால்....
இயற்கை-இயக்கங்கள் ஸ்தம்பிக்கும்.
இங்கு ஒரு பெண்ணின் மனம்
ஆசைகளோடு ஸ்தம்பித்து நிற்பதாய்!

எதையோ எழுதிவிட்டு
தலைப்பைக் கொடுக்கலாம்.
சுலபம்.
தலைப்புக்குக் கவிதை !!!
கொஞ்சம் குழப்பம்தான்.
மாதவ் க்கு ஏனோ ஒரு விபரீத ஆசை.
(ஆசைக்கு அளவே இல்லையாம்!)
மாதவ் தந்த
"நித்திரை மேகங்கள்"
தூங்காமல் குழந்தைநிலாவில்.

ஹேமா(சுவிஸ்)

95 comments:

  1. \\நாள் முழுதும்
    உழைத்துக் களைத்து
    குடிசை திரும்பும் ஏழையாய்
    பகல் ஒளிந்து கொள்ள,
    இருள் மெல்ல மெல்ல
    தன் கடமைக்காய்.\\

    நல்லா இருக்கு

    ReplyDelete
  2. இதையே ...

    காலை ஷிப்ட் முடிந்து
    நிலவுக்கு வழிவிட்டு
    மெல்ல மறைந்தது சூரியன் என நான் நினைத்து இருந்தேன் ...

    ReplyDelete
  3. \\தவறு செய்த குழந்தை
    தந்தை தரும் தண்டனைக்காய்
    காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,
    பசியோடு இரை தேடும்
    பறவையின் கவனத்தோடு
    வெறித்த என் பார்வை.\\

    மிக அழகு ...

    ReplyDelete
  4. //நாள் முழுதும்
    உழைத்துக் களைத்து
    குடிசை திரும்பும் ஏழையாய்
    பகல் ஒளிந்து கொள்ள,
    இருள் மெல்ல மெல்ல
    தன் கடமைக்காய்.
    //

    வர்ணனை அழகு...

    ReplyDelete
  5. //நான் இங்கு
    ஒவ்வொரு விநாடியும்
    உன் நினைவு மதில்களில்
    முட்டி மோதி
    காயப்பட்டுக்கொண்டே
    இருக்கிறேன்.//

    நினைவு மதில்கள்...வித்தியாசமான வார்த்தைப் பிரயோகம்...

    ReplyDelete
  6. //விழியோடு
    மனதையும் சேர்த்தே
    திறந்து வைத்துக்
    காத்திருப்பேன்.//

    ம்ம்ம்...மிகவும் ரசிச்தேன்...

    //தலைப்புக்குக் கவிதை !!!
    கொஞ்சம் குழப்பம்தான்.//

    தலைப்புக்குக் கவிதையா...?

    ரொம்ப நல்லா இருக்கு ஹேமா...

    ReplyDelete
  7. ஓடிவாங்க...ஓடி வாங்க.
    ஜமால்,புதியவன்.
    மாதவ்,"நித்திரை மேகங்கங்கள்"ன்னு தலைப்பைத் தந்து என்னைக் குழப்பிட்டார்.என்ன கரு எடுத்து கவிதை சமைக்கிறதுன்னு....சரியா ஆக்கிட்டேனா?

    ReplyDelete
  8. இல்ல ஜமால்,இப்பிடியும் கருத்து எடுத்துக்கலாம்.அது அவங்க அவங்களைப் பொறுத்தது.வேலை முடிஞ்சு நீங்க என்ன நிலைமைல வீட்டுக்குப் போறீங்களோ அதை வச்சு மாத்திக்கலாம்.

    ReplyDelete
  9. //ஹேமா said...
    ஓடிவாங்க...ஓடி வாங்க.
    ஜமால்,புதியவன்.
    மாதவ்,"நித்திரை மேகங்கங்கள்"ன்னு தலைப்பைத் தந்து என்னைக் குழப்பிட்டார்.என்ன கரு எடுத்து கவிதை சமைக்கிறதுன்னு....சரியா ஆக்கிட்டேனா?//

    மிகவும் சரியாக சுவையாகவே சமைத்திருக்கிறீர்கள் ஹேமா...

    ReplyDelete
  10. \\ஹேமா said...

    ஓடிவாங்க...ஓடி வாங்க.
    ஜமால்,புதியவன்.
    மாதவ்,"நித்திரை மேகங்கங்கள்"ன்னு தலைப்பைத் தந்து என்னைக் குழப்பிட்டார்.என்ன கரு எடுத்து கவிதை சமைக்கிறதுன்னு....சரியா ஆக்கிட்டேனா?\\

    நல்ல சமையல்

    ReplyDelete
  11. ஜமால்,புதியவன்,நன்றி....நன்றி.
    சந்தோஷமாயிருக்கு.

    ReplyDelete
  12. \\உனக்கென்ன
    குளிர் காலம் வர
    வெப்பம் தேடி ஓடும்
    பறவையாய்
    உன் பாட்டில்
    நீ...
    வருகிறாய் போகிறாய்.

    நான் இங்கு
    ஒவ்வொரு விநாடியும்
    உன் நினைவு மதில்களில்
    முட்டி மோதி
    காயப்பட்டுக்கொண்டே
    இருக்கிறேன்.\\

    நல்லாயிருக்கு ...

    ReplyDelete
  13. \\என் தேசத்து
    அமைதிப் பேச்சு வார்த்தையாய்
    நீ....ண்டு
    இன்னும் நீ....ண்டு
    தூரமாகிப் போகிறவனே,\\

    வார்த்தை அழகு

    அர்த்தம் ஆழம்.

    ReplyDelete
  14. நடக்கட்டும், நடக்கட்டும்...:)

    ReplyDelete
  15. தமிழன்,என்ன நடக்கட்டும் நடக்கட்டும்.ஏதாவது சொல்லிட்டுப் போனா என்னவாம்.இருங்கோ இருக்கு உங்களுக்கு.

    ReplyDelete
  16. \\ஓய்வெடுத்துக் கொள்
    நீ....
    நித்திரை மேகங்களாய் !!!
    *************************************************
    மேகங்கள் தூங்கினால்....
    இயற்கை-இயக்கங்கள் ஸ்தம்பிக்கும்.
    இங்கு ஒரு பெண்ணின் மனம்
    ஆசைகளோடு ஸ்தம்பித்து நிற்பதாய்!\\

    இது ரொம்ப பிடித்தது ...

    ReplyDelete
  17. ஹேமா said...
    \\
    தமிழன்,என்ன நடக்கட்டும் நடக்கட்டும்.ஏதாவது சொல்லிட்டுப் போனா என்னவாம்.இருங்கோ இருக்கு உங்களுக்கு.
    \\

    :)
    அடுத்த பின்னூட்டம் எழுதுறக்கிடையிலை இந்த பிள்ளைக்கு அவசரத்தைப்பார்...

    ReplyDelete
  18. ரொம்ப நல்ல கவிதை.. அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்..

    ReplyDelete
  19. தமிழன் நான் அவசரமா ஒருக்கா கறுப்பியைப் பாக்க வேணும்.ஒருவேளை அவதான் ஒரு சொல்லிலதான் பதில் சொல்லோணும் எண்டு சொல்லியிருக்கிறாவோ!

    ReplyDelete
  20. நான் சொல்ல நினைத்ததை எல்லாம் எல்லோரும் எனக்கு முன்னாடியே வந்து சொல்லிட்டாங்க...

    ReplyDelete
  21. இருந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்....

    ReplyDelete
  22. நன்றி கார்த்திகைப் பாண்டியன்.என் உப்புமடச் சந்திக்கும் உங்களை வாங்கன்னு கேட்டுக்கிறேன்.

    ReplyDelete
  23. தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு....

    ReplyDelete
  24. வார்த்தை பிரயோகங்கள் ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  25. அட...எல்லாரும் ஒழுங்கா ஓட்டுப் போட்டிட்டு போயிடுங்க.அப்பிடியே தமிழ்மணத்துக்கும் போட்டிட்டுப் போயிடுங்க.சொல்லிட்டேன்.ஆமா...!

    ReplyDelete
  26. /தலையணையின் பஞ்சுக்குள்
    ஓய்வெடுத்த
    உன் உணர்வுகள்
    உறக்கம் கலைத்து,
    விழித்துக் கொள்ள வைக்கிறது
    உன் ஞாபகங்களை./


    சூப்பர்!

    ReplyDelete
  27. /ஹேமா said...

    அட...எல்லாரும் ஒழுங்கா ஓட்டுப் போட்டிட்டு போயிடுங்க.அப்பிடியே தமிழ்மணத்துக்கும் போட்டிட்டுப் போயிடுங்க.சொல்லிட்டேன்.ஆமா...!/


    அட...இதென்ன மிரட்டலா....சரி வோட் போட்டுடுறேன்...:)

    ReplyDelete
  28. தலைப்புத் தந்தது ரெட் மாதவ்.

    நல்லவன்.நன்றி.நீங்க என்னோட உப்புமடச் சந்திக்கு இன்னும் ஏன் வரல?வாங்க.

    ReplyDelete
  29. /தமிழன்-கறுப்பி... said...

    கலக்குறியள்...!/

    தம்பி நீங்க எங்க இருக்கீக...?

    ReplyDelete
  30. நல்லவன்,பாத்தீங்களா மிரட்டினாத்தான் கை மேல பலன்.இது நம்ம நாட்டில சில பேரு சொல்லித் தந்த பாடம்.

    ReplyDelete
  31. /ஹேமா said...

    தலைப்புத் தந்தது ரெட் மாதவ்.

    நல்லவன்.நன்றி.நீங்க என்னோட உப்புமடச் சந்திக்கு இன்னும் ஏன் வரல?வாங்க./


    வந்துட்டா போச்சு....:)

    ReplyDelete
  32. /ஹேமா said...

    நல்லவன்,பாத்தீங்களா மிரட்டினாத்தான் கை மேல பலன்.இது நம்ம நாட்டில சில பேரு சொல்லித் தந்த பாடம்./

    அது சரி...:)

    ReplyDelete
  33. உப்புமட சந்தி ல இருக்கேன்....இங்க இல்லை...:)

    ReplyDelete
  34. படித்தேன்.... விமர்சனம் பிறகு!!!

    ReplyDelete
  35. நான் இங்கு
    ஒவ்வொரு விநாடியும்
    உன் நினைவு மதில்களில்
    முட்டி மோதி
    காயப்பட்டுக்கொண்டே
    இருக்கிறேன்.//

    ஏன் இன்னும் அவர் கண் திறக்கவில்லையோ???

    ReplyDelete
  36. என் தேசத்து
    அமைதிப் பேச்சு வார்த்தையாய்
    நீ....ண்டு
    இன்னும் நீ....ண்டு
    தூரமாகிப் போகிறவனே,
    விழியோடு
    மனதையும் சேர்த்தே
    திறந்து வைத்துக்
    காத்திருப்பேன்.//

    என்ன தூரமா போய் விட்டார்?? கூப்பிடு தூரம் தானே?? லண்டனுக்கு கூப்பிட்டால் கேட்காதோ? சும்மா பகிடி??????? கோபப்படுறேல்லை???

    ReplyDelete
  37. என்றோ ஒரு நாள்
    நீ....
    விழியோடும் மனதோடும்
    நிஜமாய் நிறைந்து கொள்வாய்
    என்கிற நம்பிக்கையோடு
    ஸ்தம்பித்தபடி நான்.

    ஓய்வெடுத்துக் கொள்
    நீ....
    நித்திரை மேகங்களாய் !!!//

    ஹேமா இந்த நம்பிக்கை என்கிற அஸ்திரத்தைத் தானே நாளாந்தம் நாம் எல்லாவற்றிற்கும் பயன்படுத்துறோம்??

    அப்படியென்றால் நம்பிக்கைக்கு நம்பிக்கை இருக்கா??

    ReplyDelete
  38. அவாவுடன் கதைத்துக் கொண்டிருந்ததால் உடனே வர முடியாமல் போய் விட்டது...

    கவிதை தலைப்புக்குள்ளும் தவிப்பைத் தேடுவதாய் அமைந்துள்ளது..

    விழியின் ஓரப் பார்வைகளுக்குள் ஆயிரம் அர்த்தம் கண்டு பிடிக்கும் இமையைப் போல கவிதையும் எங்கோ தொடங்கி...எவரிடமோ எதையோ விண்ப்பமாய் விண்ணப்பிக்கிறது..

    கொஞ்சம் முயன்றிருந்தால் கவிதையின் தூக்கம் இன்னும் புத்தூக்கமாய் மாறியிருந்திருக்கும்,

    கொஞ்சம் முயன்றிருந்தால் கவிதை...மனதை வார்த்தைகளுக்குள் தூங்க வைத்திருக்கும்.

    ReplyDelete
  39. நாள் முழுதும்
    உழைத்துக் களைத்து
    குடிசை திரும்பும் ஏழையாய்
    பகல் ஒளிந்து கொள்ள,
    இருள் மெல்ல மெல்ல
    தன் கடமைக்காய்.


    பகலை விவரித்த விதம் அருமை...  இருள் பிறக்கும் விதமும் அழகு!!! ஒரு சமூக சிந்தனையோடு!!

    தலையணையின் பஞ்சுக்குள்
    ஓய்வெடுத்த
    உன் உணர்வுகள்
    உறக்கம் கலைத்து,
    விழித்துக் கொள்ள வைக்கிறது
    உன் ஞாபகங்களை.



    ஓய்வெடுக்கும் உணர்வுகள் என்பதே வித்தியாசமான கற்பனை! உணர்வுகள் எழுந்து ஞாபகத்தைக் கிளறினால்???? அழகான அறிமுகமாக கவிதை செல்லுகிறது!!

    ஓர் ஏழைத்தாயின் கண்களில்
    காத்திருக்கும் ஏக்க இருளாய்
    உருளும் உலகை
    இருள் ஆக்கிரமிக்க,
    என் விழியும் மனமும் மட்டும்
    தேடுதல் வேட்கையோடு.


    உருளும் உலகம்.... ஏழையின் கண் இருளாய்.... அடடே!!!  ஒப்பிய ஒப்புமைகள் அனைத்தும் ஒரு சமூக சிந்தனையோடு செல்கிறது!!!

    தவறு செய்த குழந்தை
    தந்தை தரும் தண்டனைக்காய்
    காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,
    பசியோடு இரை தேடும்
    பறவையின் கவனத்தோடு
    வெறித்த என் பார்வை.


    பார்வையும் நன்றாக ஒப்புமை செய்யப்படுகிறது. குழந்தையின் மெல்லிய அச்சமாக, இரைதேடும் பறவையின் பார்வையாக.... அனைத்தும் அருமை!!!! எப்படிங்க இப்படி???

    உனக்கென்ன
    குளிர் காலம் வர
    வெப்பம் தேடி ஓடும்
    பறவையாய்
    உன் பாட்டில்
    நீ...
    வருகிறாய் போகிறாய்.


    அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு சறுக்கிட்டீங்க.. போகிறாய் ஓகே!! வருகிறாய் என்பதற்கு சரியாக உதாரணம் பொருந்தவில்லை!! எனினும் அழகாக இருக்கிறது..
    நான் இங்கு
    ஒவ்வொரு விநாடியும்
    உன் நினைவு மதில்களில்
    முட்டி மோதி
    காயப்பட்டுக்கொண்டே
    இருக்கிறேன்.


    நினைவு மதில்கள்>...... அழகான சொல்.

    நினைவை மதிலாக்கி மோதி காயப்பட்டு.... இந்த இடம் மிக அருமை!! கற்பனையின் உச்சம்.

    என் தேசத்து
    அமைதிப் பேச்சு வார்த்தையாய்
    நீ....ண்டு
    இன்னும் நீ....ண்டு
    தூரமாகிப் போகிறவனே,
    விழியோடு
    மனதையும் சேர்த்தே
    திறந்து வைத்துக்
    காத்திருப்பேன்.


    காத்திருங்கள் !! காத்திருங்கள்!!!  நம் தேசத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை எங்கே நடக்கிறது இப்போ??? ம்ஹூம்.....

    என்றோ ஒரு நாள்
    நீ....
    விழியோடும் மனதோடும்
    நிஜமாய் நிறைந்து கொள்வாய்
    என்கிற நம்பிக்கையோடு
    ஸ்தம்பித்தபடி நான்.


    திரும்பவும் சறுக்கல்...  கவிதை போய் வருகிற மாதிரி... போய் போய் வருகிறது!!!

    ஓய்வெடுத்துக் கொள்
    நீ....
    நித்திரை மேகங்களாய் !!!


    அப்படி இப்படியுமாய் கவிதை முடிந்ததைப் போன்றூ இருக்கிறது சகோதரி..கவிதை சற்று நீளம்... கவிதையில் உபயோகப்படுத்தியிருக்கும் சொற்களும், உவமைகளும் அட்சரம்......  உங்களின் தனிச்சிறப்பே அவ்வகை சொற்கட்டுகள் தாம்!!

    தொடர்ந்து எழுதுங்கள்!!! சகோதரி!!!

    ReplyDelete
  40. அதவா.. ஒரு கவிதை வகுப்பே எடுத்திட்டாய்... கவிதையில் வார்தை பிரயோகம் நல்லா இருக்கு

    ReplyDelete
  41. Ulagai irul aakiramikka,en vizhium manamum mattum theduthal vetkaiodu,Nalla varihal Hema.

    ReplyDelete
  42. ****/தவறு செய்த குழந்தை
    தந்தை தரும் தண்டனைக்காய்
    காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,../****


    தண்டனை வேண்டாம் என்றாலும் என்ன நடக்கப் போகிறதோ என்கிற எதிர்பார்ப்பை அழகா சொல்லிருக்குறீங்க

    எப்டிங்க இப்டி கலக்குறீங்க

    ReplyDelete
  43. //தலையணையின் பஞ்சுக்குள்
    ஓய்வெடுத்த
    உன் உணர்வுகள்
    உறக்கம் கலைத்து,
    விழித்துக் கொள்ள வைக்கிறது
    உன் ஞாபகங்களை.
    //
    சரி தலையணை வச்சி உறங்க வேண்டாம்

    ReplyDelete
  44. //ஓர் ஏழைத்தாயின் கண்களில்
    காத்திருக்கும் ஏக்க இருளாய்
    உருளும் உலகை
    இருள் ஆக்கிரமிக்க,
    என் விழியும் மனமும் மட்டும்
    தேடுதல் வேட்கையோடு//
    வீட்டிலே மின்சாரம் இல்லையோ, லைட் போட்டு தேடுங்க

    ReplyDelete
  45. //பசியோடு இரை தேடும்
    பறவையின் கவனத்தோடு
    வெறித்த என் பார்வை//

    அப்புறம் கண் வலி வரும், கண் மருத்துவரிடம் போகணும்,தேவையா இது?

    ReplyDelete
  46. //தவறு செய்த குழந்தை
    தந்தை தரும் தண்டனைக்காய்
    காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,//

    யாரு அந்த அதிச குழந்தை

    ReplyDelete
  47. //உனக்கென்ன
    குளிர் காலம் வர
    வெப்பம் தேடி ஓடும்
    பறவையாய்
    உன் பாட்டில்
    நீ...
    வருகிறாய் போகிறாய்.
    //
    வீட்டுல சுடு தண்ணி வச்சி கொடுங்க

    ReplyDelete
  48. //நான் இங்கு
    ஒவ்வொரு விநாடியும்
    உன் நினைவு மதில்களில்
    முட்டி மோதி
    காயப்பட்டுக்கொண்டே
    இருக்கிறேன்.
    //
    பாத்து கை,கால் உடைஞ்சுக்க போகுது, அப்புறம் அதுக்கு ஒரு கவிதை எழுதனும்.

    உன்
    நினைவுகளால் மட்டமல்ல
    நிஜத்திலும்
    காயப்பட்டேன்

    அப்படின்னு சொல்லுவீங்க, பார்ரா உங்க கடை பக்கம் வந்தா எனக்கு ௬ட கவுஜை வருது

    ReplyDelete
  49. //என் தேசத்து
    அமைதிப் பேச்சு வார்த்தையாய்
    நீ....ண்டு
    இன்னும் நீ....ண்டு
    தூரமாகிப் போகிறவனே,//

    பாவம் விடுங்க, எவ்வளவு நாள் தான் கஷ்டப்பாடுவாரு கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கட்டும். அப்புரம்மா தூரம் தன்னாலே குறையும்

    ReplyDelete
  50. //விழியோடு
    மனதையும் சேர்த்தே
    திறந்து வைத்துக்
    காத்திருப்பேன்.//

    அப்ப நீங்க தூங்குறதே இல்ல???

    ReplyDelete
  51. //என்றோ ஒரு நாள்
    நீ....
    விழியோடும் மனதோடும்
    நிஜமாய் நிறைந்து கொள்வாய்
    என்கிற நம்பிக்கையோடு
    ஸ்தம்பித்தபடி நான்//
    முடிவு சுபம் தான், அதிலே என்ன சந்தேகம்

    ReplyDelete
  52. //ஓய்வெடுத்துக் கொள்
    நீ....
    நித்திரை மேகங்களாய் !!!
    //

    ஓய்வு முடிஞ்ச உடனே பெட்டிய கட்டிக்கிட்டு சுவிஸ்க்கு போங்கோ

    ReplyDelete
  53. //மேகங்கள் தூங்கினால்....
    இயற்கை-இயக்கங்கள் ஸ்தம்பிக்கும்.
    இங்கு ஒரு பெண்ணின் மனம்
    ஆசைகளோடு ஸ்தம்பித்து நிற்பதாய்!
    //

    பதில் சொல்லி எனக்கு விரல் ஸ்தம்பித்து போச்சு

    ReplyDelete
  54. நசரேயன்...
    //
    தவறு செய்த குழந்தை
    தந்தை தரும் தண்டனைக்காய்
    காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,,

    யாரு அந்த அதிச குழந்தை
    //

    ஹி...ஹி...ஹி. நீங்க தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  55. நசரேயன் said...
    //மேகங்கள் தூங்கினால்....
    இயற்கை-இயக்கங்கள் ஸ்தம்பிக்கும்.
    இங்கு ஒரு பெண்ணின் மனம்
    ஆசைகளோடு ஸ்தம்பித்து நிற்பதாய்!
    //

    பதில் சொல்லி எனக்கு விரல் ஸ்தம்பித்து போச்சு
    //
    சும்மா நொட்டு நொட்டுன்னு கம்யூட்டரை அடித்தால் அப்படிதான் இருக்கும்.

    ReplyDelete
  56. நசரேயன் said...
    //ஓய்வெடுத்துக் கொள்
    நீ....
    நித்திரை மேகங்களாய் !!!
    //

    ஓய்வு முடிஞ்ச உடனே பெட்டிய கட்டிக்கிட்டு போங்கோ
    //ஆமா நண்பா புளியங்குடிக்கு எப்போம் போக போறீங்க. சொல்லீட்டு போங்க. சொல்லாமா போனா 234 தொகுதியில தேடி வந்து திட்டிட்டு போவேன்.

    ReplyDelete
  57. நசரேயன் ...
    //
    பசியோடு இரை தேடும்
    பறவையின் கவனத்தோடு
    வெறித்த என் பார்வை
    //

    அப்புறம் கண் வலி வரும். கண் மருத்துவரிடம் போகணும். தேவையா இது
    //
    நண்பா டாக்டர் விஜய் கிட்ட போங்க.

    ReplyDelete
  58. //நாள் முழுதும்
    உழைத்துக் களைத்து
    குடிசை திரும்பும் ஏழையாய்
    பகல் ஒளிந்து கொள்ள,
    இருள் மெல்ல மெல்ல
    தன் கடமைக்காய்//

    ஆஹா சரியான வருணனை தொடக்கம்

    ReplyDelete
  59. //தலையணையின் பஞ்சுக்குள்
    ஓய்வெடுத்த
    உன் உணர்வுகள்
    உறக்கம் கலைத்து,
    விழித்துக் கொள்ள வைக்கிறது
    உன் ஞாபகங்களை.
    //

    உறக்கத்திலிருக்கும்போது தலயனை பஞ்சுக்குள்ளும் யாபகங்கள், அருமைங்க‌

    ReplyDelete
  60. //உனக்கென்ன
    குளிர் காலம் வர
    வெப்பம் தேடி ஓடும்
    பறவையாய்
    உன் பாட்டில்
    நீ...
    வருகிறாய் போகிறாய்.
    //

    வாஸ்துவமான் கேள்வி, அவர் என்ன பதில் சொன்னார் என்பதை அடுத்த பதிவில் போடுவீற்களா

    ReplyDelete
  61. //மேகங்கள் தூங்கினால்....
    இயற்கை-இயக்கங்கள் ஸ்தம்பிக்கும்.
    இங்கு ஒரு பெண்ணின் மனம்
    ஆசைகளோடு ஸ்தம்பித்து நிற்பதாய்!//

    என்னா ஒரு உதாரணம், ஒரு பெண்ணின் ஏக்கம்....

    நல்ல வரிகள் ஹேமா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. கமல்,அவவோட கதைச்சிட்டு குஷியான மனநிலையோட கவிதையை வாசிச்சிருக்கிறீங்க.அதுதனோ ஒரு வேளை கவிதையை இன்னும் கனமாகத் தேடியிருக்கிறீர்கள்.என்றாலும் நன்றி.நானும் யோசிக்கிறேன்.

    ReplyDelete
  63. //கமல் said...அப்படியென்றால் நம்பிக்கைக்கு நம்பிக்கை இருக்கா??//

    நம்பிக்கையில் நம்பிக்கை வைப்போம்.தவிர வழியில்லை.

    ReplyDelete
  64. ஆதவா,முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டு.அருமையான் விமர்சனம் தருகிறீர்கள்.எப்படி நேரம் எடுத்து,சரி ஒரு பின்னூட்டம் என்று இல்லாமல் உணர்வோடு விமர்சிக்கிறீர்கள்.சந்தோஷமாயிருக்கு.ஊக்கம் நந்து அதோடு திருத்திக்கொள்ளவும் வழி தருகிறீர்கள்.நன்றி ஆதவா.

    கவிதையின் இறுதியில் சறுக்கிவிட்டேனா!

    //உனக்கென்ன
    குளிர் காலம் வர
    வெப்பம் தேடி ஓடும்
    பறவையாய்
    உன் பாட்டில்
    நீ...
    வருகிறாய் போகிறாய்.//

    நெருக்கம் குறைவு.தேடுதல்-அக்கறை குறைவு என்பதைச் சொல்ல முன்றேன்

    ReplyDelete
  65. கவின்,நானும் உங்களோடு சேர்ந்து ஆதவாவைப் பாராட்டிக் கொள்கிறேன்.உங்களுக்கும் நன்றி.சந்தோஷமாயிருங்க கவின்.

    ReplyDelete
  66. வாங்க முனியப்பன்.தேடல் மனதை ஆக்கிரமிக்கும்போது இருள் ஒரு பொருட்டில்லைதானே.

    ReplyDelete
  67. ஓ....நசரேயன்.கடி....கடி....கடி.

    நல்ல வேளை என் தூக்க நேரத்தில கடி விழுந்திருக்கு.அதால நான் கவனிக்கல.இரத்தம் வரல.ஆனா ஆனந்த் நல்லா பதில் குடுத்திருக்கிறார்.உங்களுக்கு இரத்தம் வந்திருக்குமே!

    ReplyDelete
  68. ஆனந்த்,கவிதைக்குக் கருத்து எங்கே?தேடிப்பாத்திட்டேன் காணல.

    என்றாலும் நசரேயனுக்கு என் சார்பில் நகைச்சுவையாய் பதில் சொல்லியிருக்கீங்க.நானும் ரசித்தேன்.எனக்கு இவ்வளவு நகைச்சுவை வந்திருக்காது.

    ReplyDelete
  69. //அபுஅஃப்ஸர் சைட்... வாஸ்துவமான் கேள்வி, அவர் என்ன பதில் சொன்னார் என்பதை அடுத்த பதிவில் போடுவீற்களா!//

    அபுஅஃப்ஸர் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன் அவரின் அலட்சியங்களை.அலட்சியமா அது?அன்பு இருக்கிறது.ஆரவாரம் இல்லை.அவ்வளவுதான்.இதற்கும் பதில் கிடைக்காது.கிடைத்தால் சொல்லுவேன் நிச்சயம்.

    கவிதையை ரசித்திருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  70. நிலாவும் அம்மாவும்,மிக்க நன்றி.நிலாக்குட்டி சுகம்தானே.உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.பின்னூட்டம் தரவில்லை.நிறைய நேரம் எடுத்து வருகிறேன்.அதுதான் சிக்கல்.நேரம்.

    ReplyDelete
  71. ஹேமா said...
    கவிதைக்குக் கருத்து எங்கே?தேடிப்பாத்திட்டேன் காணல.
    //
    கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. கடையம் ஆனந்த் said...
    ஆதவா உங்கள் அசத்தல் விமர்சனம் வெகு அருமை. இங்கு வந்த மறுமொழிகளில் அழமான விமர்சனம் உங்களுடையது தான். ரொம்ப ரொம்ப ரசித்து விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். ரசிப்பு தன்மை அதிகமாக இருப்பர்களுக்கு தான் இப்படி தோன்றும்.

    என் பதிவில் நீங்கள் கூறியவற்றை ரசித்தேன். ஊக்கமும் கிடைத்து போல் இருக்கிறது. நன்றி ஆதவா.

    ReplyDelete
  74. 75-வதும் என்னுடைய வாழ்த்து தான்.

    ReplyDelete
  75. The ladie's picture in the post is visible btwn the trees.nice.

    ReplyDelete
  76. "நாள் முழுதும்
    உழைத்துக் களைத்து
    குடிசை திரும்பும் ஏழையாய்
    பகல் ஒளிந்து கொள்ள,
    இருள் மெல்ல மெல்ல
    தன் கடமைக்காய்."

    ஏழைக்கும் பாழாய்
    போன கோழைக்கும்
    எவ்வேளைக்கும்
    மனதிலும் மாலையிலும்
    இருபது
    இருளே......

    ReplyDelete
  77. "தலையணையின் பஞ்சுக்குள்
    ஓய்வெடுத்த
    உன் உணர்வுகள்
    உறக்கம் கலைத்து,
    விழித்துக் கொள்ள வைக்கிறது
    உன் ஞாபகங்களை."

    அருமை

    ReplyDelete
  78. "தவறு செய்த குழந்தை
    தந்தை தரும் தண்டனைக்காய்
    காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,
    பசியோடு இரை தேடும்
    பறவையின் கவனத்தோடு
    வெறித்த என் பார்வை."

    குழந்தையின் பார்வைக்கும் பறவையின் பார்வைக்கும் difference நிறையே இருக்கே....
    நீங்கள் எந்த விதத்தில் compare பண்ணிருக்கிங்கன்னு புரியல......

    குழந்தையின் பயம் கலந்த பார்வையும் ,
    பறவையின் பசி, வெறி கலந்த பார்வையும் .....
    இரண்டும் different தானே.....
    எந்த சுழ்நிலையில் இந்த மாதிரி பார்வை வருது ????

    ReplyDelete
  79. "உனக்கென்ன
    குளிர் காலம் வர
    வெப்பம் தேடி ஓடும்
    பறவையாய்
    உன் பாட்டில்
    நீ...
    வருகிறாய் போகிறாய்."

    அழகு

    ReplyDelete
  80. "நான் இங்கு
    ஒவ்வொரு விநாடியும்
    உன் நினைவு மதில்களில்
    முட்டி மோதி
    காயப்பட்டுக்கொண்டே
    இருக்கிறேன்."

    அந்த
    காயத்துக்கும்
    உன் நினைவுகளே
    மருந்து ஆகிறது....

    ReplyDelete
  81. somewhaT ROCKED MY thinking process...
    but i was not able to undertand whats the poem is about....

    anyways
    வார்த்தைகள் ,
    வரிகள்.....
    நீங்கள் அமைத்த விதம் அருமை

    ReplyDelete
  82. பின்னால் இருந்து
    பின்னூட்டங்களை தொடர்ந்து
    கண்டு கொண்டிருந்தேன்

    அருமை ஹேமா....
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தலைப்பு என்ற மரக் கட்டையை கையில் கொடுத்தேன்.
    உணர்வு எனும்
    உளியில் செதுக்கி எடுத்து
    உயிருள்ள சிற்பமாக்கி விட்டீர்கள். பின்னூட்ட மழையே
    மலர்களாய் மாறி வாழ்த்துக்களால் பூஜை செய்துவிட்டது.

    //என் தேசத்து
    அமைதிப் பேச்சு வார்த்தையாய்
    நீ....ண்டு
    இன்னும் நீ....ண்டு
    தூரமாகிப் போகிறவனே,//

    வார்த்தைகள் கனக்கிறது.

    மதிப்பு பட்டியலில் உங்களுக்கு முழு மதிப்பெண்களும் சொந்தம்.

    மீண்டும் சொல்கிறேன்.
    நீங்கள் ஒரு சேலை கட்டிய கண்ணதாசன்

    ReplyDelete
  83. ஆனந்த் மிக்க நன்றி.

    ReplyDelete
  84. //மேவி...குழந்தையின் பயம் கலந்த பார்வையும் ,
    பறவையின் பசி, வெறி கலந்த பார்வையும் .....
    இரண்டும் different தானே.....
    எந்த சுழ்நிலையில் இந்த மாதிரி பார்வை வருது ????//

    மேவி.இங்கே கண் பற்றிச் சொல்லவில்லயே.மனநிலை -பதற்றம் பற்றித்தான்.

    ReplyDelete
  85. //தலைப்பு என்ற மரக் கட்டையை கையில் கொடுத்தேன்.
    உணர்வு எனும்
    உளியில் செதுக்கி எடுத்து
    உயிருள்ள சிற்பமாக்கி விட்டீர்கள். பின்னூட்ட மழையே
    மலர்களாய் மாறி வாழ்த்துக்களால் பூஜை செய்துவிட்டது.

    மதிப்பு பட்டியலில் உங்களுக்கு முழு மதிப்பெண்களும் சொந்தம்.

    மீண்டும் சொல்கிறேன்.
    நீங்கள் ஒரு சேலை கட்டிய கண்ணதாசன்.//

    மாதவ்,என்னமோ ஒரு சோதனை போட்டுப் பாத்தீங்க என்னை வச்சு.பின்னூட்டங்களின் படி நான் பாஸா....பெயிலா?இரண்டும் தெரியுது.மாதவ் உங்களுக்கும் நன்றி.சந்தோஷம்.

    ReplyDelete
  86. //ஹேமா said...

    ஓடிவாங்க...ஓடி வாங்க.
    ஜமால்,புதியவன்.
    மாதவ்,"நித்திரை மேகங்கங்கள்"ன்னு தலைப்பைத் தந்து என்னைக் குழப்பிட்டார்.என்ன கரு எடுத்து கவிதை சமைக்கிறதுன்னு....சரியா ஆக்கிட்டேனா?//

    ஆஹா.... நல்ல வாசம் மூக்கைத் துளைக்கிறது. ஹேமாவின் கவிதை சமையலோ? நன்றாக இருக்கிறது, அருமை.

    ReplyDelete
  87. //மாதவ்,என்னமோ ஒரு சோதனை போட்டுப் பாத்தீங்க என்னை வச்சு.பின்னூட்டங்களின் படி நான் பாஸா....பெயிலா?இரண்டும் தெரியுது.//
    சந்தேகம் என்ன, பாஸ்தான்.

    ReplyDelete
  88. நன்றி வாசவன்.என் கவிதைப் பொங்கல் சாபிட்டதுக்கு.சாப்பிட்ட களைப்பில் நீங்களும் மேகங்கள் போல நித்திரை கொள்ள வேணாம்.

    ReplyDelete
  89. "ஹேமா said...
    //மேவி...குழந்தையின் பயம் கலந்த பார்வையும் ,
    பறவையின் பசி, வெறி கலந்த பார்வையும் .....
    இரண்டும் different தானே.....
    எந்த சுழ்நிலையில் இந்த மாதிரி பார்வை வருது ????//

    மேவி.இங்கே கண் பற்றிச் சொல்லவில்லயே.மனநிலை -பதற்றம் பற்றித்தான்."

    appadiya....
    sari ithe meaning odu miindum oru murai padikkiren

    ReplyDelete
  90. ஓவியம் அருமை.

    கவிதை நன்று

    ReplyDelete
  91. மஞ்சூர் ராசா அவர்களே புதுசாய் வந்திருக்கீங்க.சந்தோஷம்.உங்களை இதற்கு முன் நான் கண்டதேயில்லையே!இனிக் காண்லாம் என்று நினைக்கிறேன்.வாங்க.

    ReplyDelete
  92. பழைய பதிவர்கள் பல பேர் அப்படித்தான் இருக்கோமுங்கோ.

    www.manjoorraja.blogspot.com

    http://groups.google.com/group/muththamiz

    ReplyDelete
  93. ஏன் மஞ்சூர் ராசா.உங்களை நீங்களே பழைய பதிவாளர்கள் என்று சொல்ல வேணும்.புதியவர்களுக்கு என்றும் வழிகாட்டிக்கொண்டு இன்னும் இன்னும் புதிய படைப்புக்களைத் தந்து எப்பவுமே புதியவர்களாகவே இருக்கலாமே!

    ReplyDelete
  94. எழுதுவோம் இனி

    ReplyDelete