Tuesday, February 24, 2009

இசைச் சகாப்தம் ரஹ்மான்...

நாடி நரம்புகள் இசையின் வசமாய்,
பெருவெளிச் சில்வண்டுகள் நடுவே
இசை சுமந்தது உன் உலகம்.
இரவும்...பகலும்
சரிகமபதநி சொல்லியபடி
இசைக்காடுகள் நடுவே
உன் தேசம்.
உன் கிளைகள் முழுதும்
கலையின் குயில்கள்.

மூலையில் கிடக்கும் சிரட்டைகூட
உன் விரல்படச் சேவகம் செய்யும்
இயல்பின் பெருமிதம் இல்லா
உன் விழிகளுக்குள்
இசை அரசியின் இருப்பு.
அவ்வளவு அழகாய்
பூங்குடில் போட்டிருக்கிறாள்.

நிகழ்கால விருதுகளின்
நடுவில் நின்றுகொண்டு
எதிர்காலத்தை
இறைவன் கையில் கொடுத்துவிட்டு
இன்னும்
ஏகப்பட்ட பட்டங்களுக்காய்
உனது காத்திருப்புக்கள்.

என்றாலும்
இறுமாப்பில்லா
புன்னகைத் தென்றலாய்
அகமும் புறமும்
எட்டிய திசை முட்டும்
இசை...இசை...இசை.

உன்னைப் பெற்ற நாடு
பெற்ற தாய்
காதலின் அன்புத்துணை
உன் உயிர்க்குழந்தைகள்
தவம் செய்த
இசைப்பூ நீ அவர்களுக்கு.

உலகத்தின் திசையெங்கும் ரஹ்மான்.
புயலாய் மழையாய் காற்றாய் காதலாய் நீ!

அடித்த பெருமழையில்
வீடு திரும்பா குழந்தையை
எதிர்பார்க்கும்
ஒரு தாயின் தவிப்பாய்
உன் இசை.

தேசத்திற்காய் வந்தே மாதரம்
அமைதிக்காய் வெள்ளைப்பூக்கள்
உணர்வோடு தமிழா தமிழா
எல்லாம் ஒன்றானவனாய் ரஹ்மான்.

இசைத்தங்கம்
மனிதநேயத்தின் மாதிரி
உன் வாய் உதிர்வு
கண் ஒளிர்வு
காலின் பதியங்கள்
தெய்வங்களின் நடைபாதையாய்.

இசையின் சகாப்தமே
சலாம்.
என் இதயத்தின் சலாம்.
எனக்குள்ளும் காதல்
உன் மீதும்
உன் இசையின் மீதும்.

உன்னைப்போல்
ஒருவன் கிடைக்க
எத்தனை ஜென்மத்தின்
தவங்கள் தேவை
இந்தத் தேசத்திற்கு!!!

ஹேமா(சுவிஸ்)

54 comments:

  1. உணவுப்பூர்வமான கலக்கல் வரிகள் ஹேமா

    ReplyDelete
  2. இசைப்புயலுக்கே
    சரம் தொடுக்கும்
    வரிகள் உங்கள் பதிவில்

    அவார்டுகளுக்காக ரகுமானுக்கும்
    அவரை வாழ்த்த தொடுத்த வரிகளுக்காக‌
    உங்களுக்கும்
    என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //உன்னைப்போல்
    ஒருவன் கிடைக்க
    எத்தனை ஜென்மத்தின்
    தவங்கள் தேவை
    இந்தத் தேசத்திற்கு!!!//

    உண்மைதான், இறையருள் பெற்ற மனிதர்.

    ReplyDelete
  4. //மூலையில் கிடக்கும் சிரட்டைகூட
    உன் விரல்படச் சேவகம் செய்யும்
    இயல்பின் பெருமிதம் இல்லா
    உன் விழிகளுக்குள்
    இசை அரசியின் இருப்பு.
    அவ்வளவு அழகாய்
    பூங்குடில் போட்டிருக்கிறாள்.
    //

    எழுத்துக்கள் மிளிர்கின்றன‌

    ReplyDelete
  5. //தேசத்திற்காய் வந்தே மாதரம்
    அமைதிக்காய் வெள்ளைப்பூக்கள்
    உணர்வோடு தமிழா தமிழா
    எல்லாம் ஒன்றானவனாய் ரஹ்மான்.//

    நீங்கள் சொன்ன அந்த மூன்று பாடல்களுமே மெய்சிலிர்க்க வைத்தவை தான்.

    ReplyDelete
  6. //தேசத்திற்காய் வந்தே மாதரம்
    அமைதிக்காய் வெள்ளைப்பூக்கள்
    உணர்வோடு தமிழா தமிழா
    எல்லாம் ஒன்றானவனாய் ரஹ்மான்.
    //

    தேவையன இடத்தில் பிரதிபலிக்கும் வித்தை தெரிந்தவர்

    ReplyDelete
  7. இந்த‌ க‌விதையை ர‌ஹ்மான் என்றாவ‌து ஒருநாள் ப‌டிக்கக்கூடும்..அல்ல‌து எதேச்சையாக‌ யாராவ‌து ர‌ஹ்மானுக்கு உங்க‌ள் க‌விதையைப் ப‌ற்றி சொல்ல‌லாம்.

    இது ந‌ட‌க்கும்.

    ReplyDelete
  8. //
    இறுமாப்பில்லா
    புன்னகைத் தென்றலாய்/

    அதனால் தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார்

    ReplyDelete
  9. //உன்னைப்போல்
    ஒருவன் கிடைக்க
    எத்தனை ஜென்மத்தின்
    தவங்கள் தேவை
    இந்தத் தேசத்திற்கு!!!
    //

    இந்திய தேசத்தின் தவப்புதல்வன்

    ReplyDelete
  10. த‌லையில் கொஞ்ச‌ம்
    நெஞ்சில் அதிக‌ம்
    சுமைக‌ள் சும‌ந்து போகின்றோம்.

    ( பனைமரக்காடே பறவைகள் கூடே )

    கண்களில் நீரை வரவழைத்த இசைக்கு,அன்றே கிடைக்க வேண்டிய விருதுகள்.

    ReplyDelete
  11. //எனக்குள்ளும் காதல்
    உன் மீதும்
    உன் இசையின் மீதும்.
    /

    பாமர மக்களையும் திரும்பிபார்க்க வைத்தாய்

    பிற நாட்டவர் வாழ்த்து சொல்லுகிறார்கள் என்னிடம், இந்த பெருமை ரகுமான் மூலம் எனக்கு, காலரை தூக்கிவிட்டவனாய் வலம் வருகிறேன்.

    ReplyDelete
  12. //
    உன் விழிகளுக்குள்
    இசை அரசியின் இருப்பு.
    அவ்வளவு அழகாய்
    பூங்குடில் போட்டிருக்கிறாள்.
    //

    அழ‌கான உருவ‌க‌ம்..

    ReplyDelete
  13. உப்புமடச்சந்தியை விட குழந்தை நிலா சற்றே தாமதமாக லோட் ஆகிறது.
    ப‌திவுக‌ளையும் பார்ப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌மாக‌ இருக்கிற‌து.

    ஒருவேளை நிறைய‌ விட்ஜெட்டுக‌ள்,பெரிய தலைப்புப்ப‌ட்டை,மார்க்யூ இவைகள் தான் இத‌ற்கு கார‌ண‌மா ?

    மற்றபடி,இரண்டு வலைதளத்தையுமே ( வெகுகாலமாய், பலதரப்பட்ட கணினிகளை பயன்படுத்தியும் ) என்னால் பின் தொடர முடியவில்லை.

    ReplyDelete
  14. முதல் படமான ரோஜாவிலேயே முத்திரை பதித்தவர். எதிர்பார்ப்புகளையும் மீறி உயர்ந்து விட்டார். தமிழுக்கு பெருமை. இந்தியாவிற்கு பெருமை. நம் எல்லாவருக்கும் பெருமை. முடிந்தால் கவிதையை அவருக்கு அனுப்புங்கள்.
    நிச்சயம் அவரும் பெருமைப்படுவார்.

    ReplyDelete
  15. நன்றி மாதவ்,அபுஅப்ஃஸர்,செய்யது,
    வாசவன் உங்கள் வாழ்த்துக்கள் இன்று அவருக்கே.எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே.

    ReplyDelete
  16. // அ.மு.செய்யது said...
    த‌லையில் கொஞ்ச‌ம்
    நெஞ்சில் அதிக‌ம்
    சுமைக‌ள் சும‌ந்து போகின்றோம்.

    ( பனைமரக்காடே பறவைகள் கூடே )

    கண்களில் நீரை வரவழைத்த இசைக்கு,அன்றே கிடைக்க வேண்டிய விருதுகள்.//

    சொல்ல முடியா மனப் பாரங்களோடு அருமையான பாடல் வரிகளும் இசையும்.குரல் கொடுத்திருப்பரில் ரஹ்மானின் சகோதரியும் கூட.

    ReplyDelete
  17. // அ.மு.செய்யது said...
    மற்றபடி,இரண்டு வலைதளத்தையுமே ( வெகுகாலமாய், பலதரப்பட்ட கணினிகளை பயன்படுத்தியும் ) என்னால் பின் தொடர முடியவில்லை.//

    செய்யது கவனத்தில் எடுக்கிறேன்.பலர் சொல்லிவிட்டார்கள்.
    கவலையாய் இருக்கிறது.

    ReplyDelete
  18. //அ.மு.செய்யது said...
    இந்த‌ க‌விதையை ர‌ஹ்மான் என்றாவ‌து ஒருநாள் ப‌டிக்கக்கூடும்..அல்ல‌து எதேச்சையாக‌ யாராவ‌து ர‌ஹ்மானுக்கு உங்க‌ள் க‌விதையைப் ப‌ற்றி சொல்ல‌லாம்.
    இது ந‌ட‌க்கும்.//

    //VASAVAN said...முடிந்தால் கவிதையை அவருக்கு அனுப்புங்கள்.
    நிச்சயம் அவரும் பெருமைப்படுவார்.//

    முடிந்தால் நீங்களே தெரியப்படுத்துங்கள்.இல்லை எனக்கு வழி சொல்லித் தாங்களேன்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. புயலுக்காக ஒரு கவிதையா? கலக்குங்கள்..

    ReplyDelete
  21. Congratulations!

    I am ecstatic that A.R. Rahman has won two Oscars. Its a recognition of this musical genius.

    God bless him and hope that this will be a first step towards achieving more awards.

    ReplyDelete
  22. இங்குள்ள திரை உலகத்தினர் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து படம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது நம்முடைய கதையை வெளிநாட்டில் இருந்து வந்து படமாக்கி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். வருத்தத்தோடு சந்தோசப்பட வேண்டி இருக்கிறது.

    எனினும் எ.ஆர். ரெஹ்மான் படைத்த சாதனை இந்திய திரை உலகை இனிமேலாவது யோசிக்க வைக்குமா?

    ReplyDelete
  23. இசைப்புயலுக்கு அற்புதமான பாராட்டு மழை

    நாமும் கொஞ்சம் நனைவோம்

    ReplyDelete
  24. ஹேமா...மிக மிக மகிழ்ச்சியான செய்தி நம் இசைப்புயல் ரஹ்மானுக்கு கிடைத்த 2 ஆஸ்கார் விருதுகள்...தமிழர்கள் நசுக்கப்படும் இவ்வேளையில் ஒர் தமிழனுக்கு உலகலாவிய அங்கீகாரம்...உலகெங்கும் உள்ள தமிழர் மனம் பெருமையில் விம்முகிறது...மனமார இந்த தமிழச்சியும் வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  25. கலக்கல் வரிகள்.. எல்லா புகழும் அவனுக்கே....

    ReplyDelete
  26. It is a pleasure to greet AR.Rahuman.

    ReplyDelete
  27. //தேசத்திற்காய் வந்தே மாதரம்
    அமைதிக்காய் வெள்ளைப்பூக்கள்
    உணர்வோடு தமிழா தமிழா
    எல்லாம் ஒன்றானவனாய் ரஹ்மான்.//

    இசையின் சகாப்தமே வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்கர் இருந்தால் இதற்க்கு கொடுக்கலாம், இது பாராட்டு

    ReplyDelete
  29. அலுவலகம் சென்றபின்னர் பின்னூட்டமிடுகிறேன்... கவிதை நன்றாக இருக்கிறது.... இப்போ ஓட்டு மட்டும்!!

    ReplyDelete
  30. //அடித்த பெருமழையில்
    வீடு திரும்பா குழந்தையை
    எதிர்பார்க்கும்
    ஒரு தாயின் தவிப்பாய்
    உன் இசை//

    மிக அழகான உவமை ஹேமா...

    ReplyDelete
  31. //உன்னைப்போல்
    ஒருவன் கிடைக்க
    எத்தனை ஜென்மத்தின்
    தவங்கள் தேவை
    இந்தத் தேசத்திற்கு!!!
    //

    இசையில் சாதனை படைத்த ரஹ்மானுக்கு கவிதை மழையில் வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் ரஹ்மான்...உங்களுக்கும் தான் ஹேமா...

    ReplyDelete
  32. அருமைங்க...

    //நசரேயன் said...
    வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்கர் இருந்தால் இதற்க்கு கொடுக்கலாம்,
    //

    நிச்சயம் கொடுக்கலாம் :)

    ReplyDelete
  33. இசைப்புயலுக்குப் பாராட்டுக்கள் தான் இதுவரையிலும் படித்துவந்தேன்.. முதன்முறையாக பாராட்டுக் கவிதை! முதலில் அதற்கு உங்களுக்குப் பாராட்டுக்கள்

    கவிதையில் எனக்குப் பிடித்ததே மயக்கும் சொற்கள்தான்..

    பெருவெளிச் சில்வண்டுகள்,
    இசைக்காடுகள்
    சிரட்டை
    பூங்குடில்

    என்று நெடுகவும் சொற்பூக்களைத் தூவிவிட்டிருக்கிறீர்கள்.

    மூலையில் கிடக்கும் சிரட்டைகூட
    உன் விரல்படச் சேவகம்


    அப்படியும் இருக்குமோ என்று யோசிக்கிறேன். கம்பன் வீட்டுப் பொருட்கள் எல்லாம் கவிதை பாடுவது போல, ரஹ்மானுக்கு இசை நரம்புகள் எல்லாம் பாடலாம்....

    உன்னைப்போல்
    ஒருவன் கிடைக்க
    எத்தனை ஜென்மத்தின்
    தவங்கள் தேவை
    இந்தத் தேசத்திற்கு!!!

    ஓசையில்லாமல் சாதித்துவிட்டார்.... கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என்று ஹாலிவுட்டின் இரு உயரிய விருதுகளை அள்ளியதோடு அல்லாமல், மிகச் சிறந்த படத்தில் பணியாற்றிய பெருமையும், தமிழ்பற்றை நிலைநாட்டிய பெருமையும் ரஹ்மானுக்கே உரியது!!!!

    ரஹ்மான்..... சொல்ல வார்த்தையே இல்லை........ இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து விருதுகளைப் பெறுங்கள்!!!! அப்படியே தமிழையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்!!!!

    ஒரு நல்ல வாழ்த்துக்கவி... சலிப்பில்லாத நடை.. தொடர்ந்து பரவியிருக்கும் புத்துணர்வுச் சொற்கள்...  வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  34. உலகத்தின் திசையெங்கும் ரஹ்மான்.
    புயலாய் மழையாய் காற்றாய் காதலாய் நீ!//


    வணக்கம் பிள்ளை எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?? என்ன ரகுமான் புகழ் கவிதை எல்லாம் வானத்திலை வெளிக்குது??

    ம்...என்னதான் இருந்தாலும் எங்கடை அந்தக் கால எம்.எஸ்.வீ, ஏ.எம்.ராஜா கால இசை மாதிரி வருமோ உங்கடை இந்தக் கால டப்பான், டிப்பாண் மியூசிக்?

    எனக்கும் உவர் ரக்ஸ்மானைப் புடிக்கும்? நல்லாத் தான் மெட்டுப் போடுறார்??
    நேரமிருந்தால் எங்களை மாதிரிப் பழசுகளுக்கும் ஒரு மெட்டுப் போடச் சொல்லுமன்?

    மற்றும் படி கவிதை எல்லாம் அருமை மோனை?? தொடரும்.............

    ReplyDelete
  35. \\இங்குள்ள திரை உலகத்தினர் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து படம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது நம்முடைய கதையை வெளிநாட்டில் இருந்து வந்து படமாக்கி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். வருத்தத்தோடு சந்தோசப்பட வேண்டி இருக்கிறது.\\

    மிக இரசித்தேன் மாப்ள

    ReplyDelete
  36. "நிகழ்கால விருதுகளின்
    நடுவில் நின்றுகொண்டு
    எதிர்காலத்தை
    இறைவன் கையில் கொடுத்துவிட்டு
    இன்னும்
    ஏகப்பட்ட பட்டங்களுக்காய்
    உனது காத்திருப்புக்கள்."

    ஆஹ....
    ஒரு மனிதனை இப்படி புகழ யாராலும் முடியாது.......
    வழக்கமா உங்க கவிதையை ஒரு முன்று தடவை படித்து விட்டு தான்
    பின்னோட்டோம் போட வருவேன்....
    ஆனால்......
    ARR படத்தை பார்த்த பின் ஒரு தடவை தான் கவிதையை படித்தேன்......
    கவிதை நல்ல இருக்கு

    ReplyDelete
  37. "நசரேயன் said...
    வாழ்த்துக்கள், கவிதைக்கு ஒரு ஆஸ்கர் இருந்தால் இதற்க்கு கொடுக்கலாம், இது பாராட்டு"

    repeat u..........

    ReplyDelete
  38. எல்லாப் புகழும் ,வாழ்த்துக்களும் ரஹ்மான் ஒருவருக்கே.நானும் உங்கள் எல்லோரையும் போல அவரை மிக மிக,விழுந்து விழுந்து ரசிப்பவள்.(இங்கே ஒரு ஆளுக்கு சரியான பொறாமை.)

    எனவே பின்னூட்டத்தில் வாழ்த்திய வாழ்த்துக்கள் அனைத்தும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே".

    ReplyDelete
  39. யுத்ஃபுல் விகடன் ல இந்த பதிவு!!!!!

    கலக்குறீங்க!!!!

    வாழ்த்துகள்

    ReplyDelete
  40. சக்கடத்தாரின்ர குசும்பைப் பாருங்கோ.வயசு போன நேரத்தில இந்தக் குளிருக்க பேசாமக் கிடக்காம...சரி சரி அவருக்கும் ரஹ்மான்ல விருப்பம் போல.
    அவரின்ர பாட்டு எண்டா ஆருக்குத்தான் பிடிக்காது.சரி சக்கடத்தார் கேக்கிறார் எண்டு அவருக்காக ஒரு பாட்டு எழுதச் சொல்லுங்கோ தயவு செய்து.நானும் கண்டாச் சொல்றன் அப்பு.

    ReplyDelete
  41. எனவே பின்னூட்டத்தில் வாழ்த்திய வாழ்த்துக்கள் அனைத்தும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" ...

    சரி விடுங்க... ஒண்ணே ஒண்ணு உங்களுக்கு!!!

    வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  42. ஓ....அப்படியா ஆதவா.நிறையச் சந்தோஷமாயிருக்கு.என் அளவுக்கு இது ஒரு ஆஸ்கார் விருது.அத்தனை வாழ்த்துக்களும் ரஹ்மான் அவர்களுக்கே.யூத் விகடனுக்கு மிக்க நன்றி.

    ஆதவா,ஏன் உப்புமடச் சந்திக்கு வரேல்ல இன்னும்.வாங்கோ.

    ReplyDelete
  43. ஹேமா கூறியது...
    //இன்னும் இரண்டு பேரா??? ஏற்கனவே ஹேமாவையும், கார்த்திகைப் பாண்டியரையும் தொடர் எழுதச் சொல்லியிருப்பதால்//

    ஆதவா,கொஞ்சம் நல்ல மனசோட கருணை காட்டிட்டீங்க போல!ஏற்கனவே நான் தொடர் போட்டாச்சு.(இன்னைக்கு காலேல தேவாவும் கேட்டு இப்பிடியே சொல்லி தப்பிக்கிட்டேன்.)புதுசா ஒரு தொடர்ல மாட்டி விட்டிருக்கீங்க.இன்னும் முழிச்சுக் கிட்டே இருக்கேன்.எனக்குப் பிடிச்சவங்க யார்ன்னு இப்போதான் ஒரே குழப்பம்.

    உங்க "தல"கள் கமல்,கவின் தப்பிக்கிட்டே இருக்காங்க.மாட்டி விடலாம்தானே!//

    ஏற்கனவே ஆளாளுக்கு மாட்டி விட்டுச் சந்தோசப்படுறாங்கள்?? அதுக்கை நீங்கள் வேறையா??

    ReplyDelete
  44. கமல் கூறியது...
    ஹேமா கவிதை ரகுமானின் இசையை விட மிஞ்சிவிடும் போல இருக்கு:)))

    ReplyDelete
  45. கமல் கூறியது...
    ரகுமானின் விசிறியா நீங்களும்??? நல்லது தான் தொடருங்கோ...

    கவிதை அவ்வப்போது ஏறி இறங்கியிருக்கிறது.. மற்றும் படி ரகுமானின் இசையைப் போல எல்லோருடனும் ஒத்துப் போகிறது....

    வரிகள் சுவை கலந்தவையாக சிதறி விழுந்துள்ளன,

    ReplyDelete
  46. அருமை.அற்புதம்.அட்டகாசம்

    ReplyDelete
  47. //ஏற்கனவே ஆளாளுக்கு மாட்டி விட்டுச் சந்தோசப்படுறாங்கள்?? அதுக்கை நீங்கள் வேறையா??//

    கமல்,என்ன நடக்குது.என்னோட பங்குக்கு நானும் ஏதாவது உங்களுக்கு நான் செய்ய வேண்டாமோ.அவ்வளவு பாசம் உங்களிட்டயும் கவினோடயும் ஆதவாவோடயும்.

    ரஹ்மான் பாடலகளை வெறுப்பவர்கள் உணர்வற்ற ஜென்மங்கள்.

    ReplyDelete
  48. நன்றி வாங்க நிலாவும் அம்மாவும்.எங்கள் வீட்டிலேயும் ஒரு நிலா இருக்கு.

    ReplyDelete
  49. //தேசத்திற்காய் வந்தே மாதரம்
    அமைதிக்காய் வெள்ளைப்பூக்கள்
    உணர்வோடு தமிழா தமிழா
    எல்லாம் ஒன்றானவனாய் ரஹ்மான்.//

    அனைத்தும் என் மனம் கவர்ந்தவை...

    ReplyDelete
  50. அருமையான கவிதை விருதை வாங்கிய இசை-வித்தகனுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துகிறது.

    சிறப்பான கவிதை வழங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.


    நன்றி

    ReplyDelete
  51. கணணி தேசம், உங்கள் புதிய முதல் வருகை எங்கள் ரஹ்மானோடு.
    சந்தோஷம்.இனி அடிக்கடி வரலாமே!

    ReplyDelete
  52. ரஹ்மான் குறித்து கவிதைகள் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. இது அவருக்குச் செய்யும் கவிதாயணம்.

    அவரைச் சந்தித்து சமீபத்தில் நான் எழுதிய பேட்டிக் கட்டுரையை வாசிக்க: www.kalyanje.blogspot.com

    ReplyDelete