Wednesday, February 04, 2009

(சு)தந்திர தினம்...

வார்த்தைகளின் நா பிடுங்கப்பட்டு
வதைக்கப்படும் தேசமொன்றின்
(சு)தந்திர தினம்.
தமிழனின் நகம் பிடுங்கி
நக இடுக்கின் இரத்தம் எடுத்து
எழுதிய(சு)தந்திர தினம்.
எங்களைப் புதைத்த தெருக்களில்
(சு)தந்திர தினம்.
கல்லறை தேசத்து
(சு)தந்திர தினம்.

முன்னும் பின்னுமாய் பல் முளைத்த
மூதேவி ஒன்றின் கையில்
எம் தேசம்
சிதைக்கப்படுவதை
அறியாத பிரித்தானியா,
சுதந்திர பிரகடனம் செய்து கொடுத்த
இலங்கையின் சுதந்திர தினம்.
சிங்கள தேசம் ஒன்றின்
சுதந்திர தினம்.

கண் விழித்து, கை கால் உதைத்து
விழி கூசி, உடை விடுத்து
பால் இனம் பிரிக்கப்படாத பொழுதில்
பெற்றுக்கொண்ட பிசாசு,
சுதந்திரத்தை
தங்கள் குழந்தையாய்
செய்தது அறிமுகம்.
ஒத்தே போயிற்று உலகமும்.
பிசாசின் நகம் வளர்த்து
கூராக்க ஆயுதமும் கொடுத்து
இரத்த வர்ணம் பூசி
அழகும் பார்த்தது உலகு.

கண் பார்க்க உயிர் பறக்கும் எனதில்லை.
பேசித் தீர்க்கும் நா எனதில்லை.
எழுதிக் காட்டலாம் என்றால்
கை விரல்களும் எனதில்லை.
சுதந்திர தினம்
அங்கு...எப்படி...சுதந்திரம்!

இருத்தலின் எல்லை வரைந்து
இருத்திவிட்டு,
எழும்பினாலோ உன்கதி அதோகதி
அச்சுறுத்தலாய் அசுரக் குரல்.
வெற்று ஈரக்காற்று இழுத்துப் போயிற்று
சுதந்திரக் கதகதப்பை.
உரிமை நொருக்கி
யாரோ காயப்படுத்திக்கொண்டே.
திருப்பிக் கல் எறிந்தால்
வன்முறையாம்.
எலும்பு முறித்து
குருதி குடிக்கும் அது.

ஒரு நீளாத இரவில்
காத்திருக்கட்டும் அந்த மூதேவி.
சிவப்புச் சிறகு
நிச்சயம் உதிரும் ஒருநாள்.
கோபுரத்துப் பறவையின்
வளைந்த அலகு முறிந்து போகும்.
அன்றைய செய்தித் தாள்களில்
வரும் ஒரு நல்ல செய்தி.
என் தேசத்தின் சுதந்திர தினம்!!!

ஹேமா(சுவிஸ்)

50 comments:

  1. ஆழமான வார்த்தைகள்.

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    ReplyDelete
  2. //இருத்தலின் எல்லை வரைந்து
    இருத்திவிட்டு,
    எழும்பினாலோ உன்கதி அதோகதி
    அச்சுறுத்தலாய் அசுரக் குரல்.\\
    ???சுதந்திரம்
    உறையவைக்கும் நிஜம் உங்கள் கவிதை.....



    என்னசெய்ய
    வலிமையானவனையே தட்டிக்கொடுக்கிறது இந்த உலகம்

    ReplyDelete
  3. //கோபுரத்துப் பறவையின்
    வளைந்த அலகு முறிந்து போகும்.
    அன்றைய செய்தித் தாள்களில்
    வரும் ஒரு நல்ல செய்தி.
    என் தேசத்தின் சுதந்திர தினம்//

    விரைவில் நடுக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. //கண் பார்க்க உயிர் பறக்கும் எனதில்லை.
    பேசித் தீர்க்கும் நா எனதில்லை.
    எழுதிக் காட்டலாம் என்றால்
    கை விரல்களும் எனதில்லை.
    சுதந்திர தினம்
    அங்கு...எப்படி...சுதந்திரம்!//

    சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை, ஹேமா சொல்வது உண்மை தான் இந்த சுதந்திரம் மனிதனின் தந்திரத்தினால் பிறப்புரிமை மறுக்கப் பட்டிருக்கிறது...

    ReplyDelete
  5. //சிவப்புச் சிறகு
    நிச்சயம் உதிரும் ஒருநாள்.
    கோபுரத்துப் பறவையின்
    வளைந்த அலகு முறிந்து போகும்.
    அன்றைய செய்தித் தாள்களில்
    வரும் ஒரு நல்ல செய்தி.
    என் தேசத்தின் சுதந்திர தினம்!!!//

    அந்த நல்ல செய்திக்காகத் தான் உங்களோடு நாங்களும் காத்திருக்கிறோம் நம்பிக்கையோடு...நம்புவோம் ஹேமா நல்லது நடக்கும்...

    ReplyDelete
  6. வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    உண்மையை
    உரைக்கின்றன

    ஈழ மக்களின்
    மனங்களில்
    மகிழ்ச்சி
    மலரும் நாளே
    சுதந்திர நாள்
    அதை அடையும் நாளே
    ஆனந்த திருநாள்

    ReplyDelete
  7. எங்கேஎ சுதந்திரம்??? ஒரு பக்கம் போர் நடக்கையில் நாடு எப்படி சுதந்திரமாக/ சுதந்திரம் கொண்டாடமுடியும்??

    தங்கள் ஆதங்க வரிகளுடன்
    ஆதங்கப்படும்
    ஆதவன்..

    ReplyDelete
  8. உலக சமூகம் இன்னும் கண்மூடி அமைதியாக இருப்பதன் காரணம் புரியவில்லை. இந்த கறுப்பு தினத்திற்கு மட்டும் அல்ல அனைத்து நாட்டின் சுதந்திர தினமும் கறுப்பு தினமே,ஆம் இனபடுகொலையை கண்டும் காணமால் இருக்கும் இவர்களும் குற்றவாளிகளே.

    ReplyDelete
  9. உடம்பு சரியில்லை

    பிறகு வாரேன்

    (don't publish this)

    ReplyDelete
  10. nalla iruku

    will comment after reading for 2nd time

    ReplyDelete
  11. கண் பார்க்க உயிர் பறக்கும் எனதில்லை.
    பேசித் தீர்க்கும் நா எனதில்லை.
    எழுதிக் காட்டலாம் என்றால்
    கை விரல்களும் எனதில்லை.
    சுதந்திர தினம்
    அங்கு...எப்படி...சுதந்திரம்!//

    பிள்ளை கவிதையிலை மனதிலை உள்ள வலியையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறாய். அது சரி கவனமாக் கதையும்..உம்மடை இடத்தைத் தேடியும் பேயள் வந்திடும்.

    ReplyDelete
  12. இதனைத் தான் சொல்வதோ சம்மட்டியால் தலையிலை அடிப்பது என்று?

    அது சரி ஹேமா! ஒட்டு மொத்தத் தமிழனும் அழிந்தாலும் அவர்களுக்குச் சுதந்திர தினம் தானாம் வரும்??? அதுக்காக எல்லோரும் காத்திருக்கீனமாம்? பக்கத்து நாட்டிலை இருந்து பச்சோந்தி கழுகள் வரைக்குமாம்?? ..

    ReplyDelete
  13. அன்பு ஹேமா...செங்குருதி குடிக்கும் நரிகளுக்கு சுதந்திர தினமாக இருக்கலாம். ஆனால் மிக விரைவில் நம் இனம் வெற்றி கண்டு உண்மையான சுதந்திர தினம் காணுவோம் என உறுதி கொள்வோம்...
    அது வரை உங்களோடு நாங்களும் கண்ணீரோடு காத்திருக்கின்றோம்...

    ReplyDelete
  14. Munnum pinnumai pal mulaitha moothevi onrin kaiyil=your anger is genuine Hema.

    ReplyDelete
  15. சுதந்திரதினம் இல்லை தந்திரதினமேதான்...

    ReplyDelete
  16. //கண் பார்க்க உயிர் பறக்கும் எனதில்லை.
    பேசித் தீர்க்கும் நா எனதில்லை.
    எழுதிக் காட்டலாம் என்றால்
    கை விரல்களும் எனதில்லை.
    சுதந்திர தினம்
    அங்கு...எப்படி...சுதந்திரம்!//
    நிஜம்......

    ReplyDelete
  17. // கமல் said...
    இதனைத் தான் சொல்வதோ சம்மட்டியால் தலையிலை அடிப்பது என்று?

    அது சரி ஹேமா! ஒட்டு மொத்தத் தமிழனும் அழிந்தாலும் அவர்களுக்குச் சுதந்திர தினம் தானாம் வரும்??? அதுக்காக எல்லோரும் காத்திருக்கீனமாம்? பக்கத்து நாட்டிலை இருந்து பச்சோந்தி கழுகள் வரைக்குமாம்?? ..

    February 4, 2009 10:53 AM

    //
    ம்ம்ம்ம்..........

    ReplyDelete
  18. சிவப்புச் சிறகு
    நிச்சயம் உதிரும் ஒருநாள்.
    கோபுரத்துப் பறவையின்
    வளைந்த அலகு முறிந்து போகும்.
    அன்றைய செய்தித் தாள்களில்
    வரும் ஒரு நல்ல செய்தி.
    என் தேசத்தின் சுதந்திர தினம்!!!

    - நாங்களும் காத்திருக்கோம்

    ReplyDelete
  19. வார்த்தைகள் உக்கிரமாக வெளிப்பட்டிருக்கின்றன...

    //எழுதிக் காட்டலாம் என்றால்
    கை விரல்களும் எனதில்லை.//

    எழுதிவிட்டீர்கள்!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. அடிபடாமல் பெற்றதால் இவர்களுக்கு சுதந்திரம் என்ன என்று தெரியவில்லை. நாம் நிறைய விலை கொடுத்துள்ளோம் எமக்கும் சுதந்திரக் காற்று வீசும் காத்திருங்கள் ஹேமா!

    ReplyDelete
  21. நன்றி விஜி கருத்துக்கு.

    ReplyDelete
  22. ஜீவா இப்படியே புலம்பிக்கொண்டு எங்கள் வாழ்வு அசிங்கமாய் போய்க்கொண்டிருக்கிறதே!

    ReplyDelete
  23. நசரேயன்,விரைவில் என்றில்லாவிட்டாலும் நடக்கும்...நடக்கும்.
    காத்திருப்புக்களும் நம்பிக்கைகளும் வீணாய்ப்போவதில்லை.எங்கள் வருங்காலச் சந்ததியினர் வீறு கொண்டு வெளிநாடுகளில் பணபலம்,படிப்புப் பலத்தோடு வளர்கிறார்கள்.

    ReplyDelete
  24. புதியவன் நன்றி.பிறப்பின் உரிமையே பறிக்கபப்ட்ட நாட்டில் அலல்வா பிறந்ததால் அவஸ்தைப்படுகிறோம்.காலம் கிட்டும்.என்றும் கை கோர்த்திருங்கள்.

    ReplyDelete
  25. திகழ் எங்கள் கரிநாளைச் சரி செய்து சுதந்திர நாள் ஆக்குவோம்.விடமாட்டோம்.

    ReplyDelete
  26. ஆதவா,எங்களுக்குள்ளும் ஆதங்கம்தான்...ஆத்திரமாய்.

    ReplyDelete
  27. ஏன் திலீபன்,மற்றவர்களைப் பார்த்துக் கோபப்பட.எங்களைப் பார்க்க அவர்களுக்கு வாழ உரிமை தேடும் மனிதர்களாகத் தெரியவில்லையோ என்னவோ!சுதந்திரம் கேட்டுக் கொடுத்து வாங்கியதாய் சரித்திரங்கள் இல்லைத்தானே,போராடியே வாங்க முயற்சிப்போம்.வாங்குவோம்.

    ReplyDelete
  28. ஜமால் சுகம்தானே! ஓடி வரும் உங்கள் கருத்துக்களைக் காணவில்லையே!

    ReplyDelete
  29. சங்கடத்தார்,உங்களுக்கும் பயம்தான்.பயப்பிட வேண்டாம்.அவையளின்ர பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் இங்க சரிப்பட்டு வராது.அங்க எங்கட சனங்களை..செத்த பாம்புகளை அடிக்கிற போலயோ!

    ReplyDelete
  30. கமல்,நீங்க நினைக்கிறீங்களோ!அடியொட்டத் தமிழனை அழிச்சுப்போட்டு சுதந்திரமாய் இவையள் இருப்பினம் எண்டு.எங்கட இங்க உள்ள பிள்ளைகளின்ர ஆத்திரத்தையும் ஆர்வத்தையும் கவனியுங்கோ.நிலைமை மாறிக்கொண்டிருக்கு.

    ReplyDelete
  31. மது,எங்களுக்காகத் தனிப்பட்ட சோகங்களை விட நாட்டுக்காகவும் அழுகிறோம்.மனதால் உடைகிறோம்.இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேணும்.

    ReplyDelete
  32. முனியப்பன்,எத்தனை காலங்களாகப் பிசாசுகளின் கைகளில் சிக்கிக் கிடக்கிறோம்.கோபம் வராதா?

    ReplyDelete
  33. கவின் தந்திரமாய் பறித்துக்கொண்ட சுதந்திரம் சிங்களவனது.அவனது தந்திரங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நாடுகள் பச்சோந்திகள்தானே.

    எங்கே பார்க்கலாம்...முழுத் தமிழனையும் அழிக்க முடியுமா இந்தப் பிசாசுகளால்!

    ReplyDelete
  34. ஜமால்.(சு)தந்திர தினம் என்று சரியாய்த்தானே சொல்லியிருக்கிறேன்...எங்கள் நாட்டைப் பொறுத்தமட்டில்.

    ReplyDelete
  35. மாதவராஜ்,உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.சந்தோஷமும்கூட.

    தோழரே,வேறு நாட்டில் இருந்தாலும் சுதந்திரம் நிறைந்த நாட்டில் அல்லவா இருக்கிறோம்.முடிந்தளவு எங்கள் ஆத்திரங்களை எழுதியாவது தீர்த்துக்கொள்வோம்.எங்கள் விரல் முறிக்க இங்கு யார்?எங்கள் அவஸ்தைகள் பதிவுகளாகவும் தேவைதானே எங்கள் எழுத்துக்கள்.

    ReplyDelete
  36. காரூரன்,காத்திருங்கள் அல்ல... எல்லோருமே காத்திருப்போம்.பெறுவோம்.
    நிச்சயம் பாரதி பாட்டுப் பாடுவோம்.

    ReplyDelete
  37. ஆனந்தன் மிக்கமிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.உங்கள் ஆதரவோடுதான் காத்திருப்புக்கள்.

    ReplyDelete
  38. விரைவில் அமைதி காற்று வீசட்டும்.

    ReplyDelete
  39. ஆனந்த்,எங்கே உங்கள் புதுப் பதிவுகளையும் உங்களையும் காணவில்லை.தேடினேன்.

    ReplyDelete
  40. அரசியலில் அழிந்து கொண்டிருக்கிறது தமிழினம். உரிமைகளை பறித்து விட்டு சுதந்திர தினம் கொண்டாடுவோர் சுதந்திர காற்றினால் மூச்சு முட்ட போவது நிச்சயம். அந்த மூச்சு காற்றின் வெப்பம் காய்வதற்குள் தமிழ் மக்களின் சுதந்திரம் பிறக்கும். நம்பிக்கை தானே வாழ்க்கை.

    நல்ல கவிதை ஹேமா.

    ReplyDelete
  41. பாரதி பாட்டை கொண்டாடி பாடுவோம்

    ReplyDelete
  42. முகிலன்,நன்றி கருத்துக்கு.அரசியல் லாபம் காண்பவர் எவராவது மரத்துக்குக் கீழும்,மரணத்தின் பிடியிலும்-பசி பட்டினியோடும் வாழ்கிறார்களா.இல்லை அகதி வாழ்வு வாழ்கிறார்களா?இல்லையே!அவதிப்படுபவர்கள் எல்லாம் பொதுமக்கள்தானே!

    முகிலன் இப்போ ஓரளவு அமைதியாகிவிட்டீர்கள் போலிருக்கிறது,புதுப் பதிவும் போட்டிருக்கிறீர்கள்.நன்றி மீண்டும் வருகை தந்தமைக்கு.சந்தோஷமும் கூட.

    ReplyDelete
  43. ஜமால்,சுகமாயிட்டீங்களா?பாருங்களேன் நாங்கள் பாரதி பாட்டுப் பாடும்போது நீங்களும் சேர்ந்து பாடுவீங்க.புளொக்கர் நிறைய பின்னூட்டமும் போடுவீங்க.

    ReplyDelete
  44. \\ஹேமா said...

    ஜமால்,சுகமாயிட்டீங்களா?பாருங்களேன் நாங்கள் பாரதி பாட்டுப் பாடும்போது நீங்களும் சேர்ந்து பாடுவீங்க.புளொக்கர் நிறைய பின்னூட்டமும் போடுவீங்க.\\

    இறையின் ஆசியோடு

    சர்வ நிச்சியமாய்

    ReplyDelete
  45. //சிவப்புச் சிறகு
    நிச்சயம் உதிரும் ஒருநாள்.
    கோபுரத்துப் பறவையின்
    வளைந்த அலகு முறிந்து போகும்.
    அன்றைய செய்தித் தாள்களில்
    வரும் ஒரு நல்ல செய்தி.
    என் தேசத்தின் சுதந்திர தினம்!!!//

    என்றாவது ஒரு நாள் விடிவு பிறக்கும். அது வெகுதொலைவில் இல்லை. தளராத மனதோடு தன்னம்பிக்கையோடு காத்திருப்போம். அநீதி வென்றதாக உலகில் சரித்திரம் இல்லை.

    ReplyDelete
  46. நன்றி வாசவன்.எங்கள் உரிமைக்கான நீதியோடுதான் என் போராட்டம்.
    நிச்சயம் எங்களால் முடிந்ததைச் செய்வோம்.காத்திருப்போம்.

    என் தளம்தேடி வந்ததற்கும் மிக்க நன்றி சந்தோஷம் வாசவன்.

    ReplyDelete
  47. தங்களது வேதனைகள் நெகிழ வைக்கிறது.
    வாசவன் சொன்னதுபோல் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
    நல்லது நடக்கும். விடிவு காலம் பிறக்கும்.
    முடிவில்லாத பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.
    காலம் வரும் காத்திருப்போம். உங்கள்
    வேதனையில் நாங்களும்.

    ReplyDelete
  48. நன்றி சிவப்பு மாதவன்.(வித்தியாசமான பெயர்)உங்கள் முதல் வருகைக்கும் நம்பிக்கையோடு இணைந்த உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.என்றும் இணைந்திருங்கள் மாதவன்.

    ReplyDelete
  49. மூதேவியை புறமுதுகிட்டு ஓட்டிடும் நாளும் வரும்...

    ReplyDelete