நம்பிக்கைகள் நிலைகுலைந்து
முழி பிதுங்க
சங்கடப்பட்டபடி.
எந்த ஒரு தேவைக்கான
அடிப்படையில்
சத்தியங்களையும்
வாக்குறுதிகளையும்
தன் பெயரில் அள்ளிக் கொடுப்பது.
கொடுக்கப்பட்ட
நம்பிக்கைகள் தீர்க்கப்பட்டதா
இல்லை உதாசீனம் செய்யப்பட்டதா!
நிறைவேறும் என்ற நம்பிக்கையில்
காத்திருப்புக்கள்
நீண்ட வரிசையில் ஏராளம்.
புலம்பும் குரல்கள் கேட்பதற்காகவே
நம்பிக்கை ஒலிவாங்கிகள்
கட்டப்பட்டிருந்தது.
ஏமாற்றங்களால்
எங்களை இடிக்கிறீர்கள்
என்றல்லவா ஓலங்கள்.
யார் எப்படிப் போனாலும்
சுயநலக் கூட்டத்தின்
புத்தி சாதுர்யமும்
பல் இளிப்பும் பசப்பல்களும்
மிகமிக இயல்பாய்.
மாற்றங்களும் மாறுதல்களும்
இயற்கை என்றாலும்
சில மானுடங்கள் தெய்வமாவதும்,
சில மனிதர்கள்
இதயங்களே இல்லா
ரோபோக்கள் ஆவதும் எப்படி?
மனிதநேயம் என்கிற
இரத்த நரம்பே இல்லாமல்.
உயிர் குடிக்கும் அரசியலின்
சத்தியங்களும் நம்பிக்கைகளும்
வாக்குறுதிகளும்
சாக்கடைத் தீர்த்தமாய்
யாருக்குமே உதவாமல்!!!
ஹேமா(சுவிஸ்)
புலம்பும் குரல்கள் கேட்பதற்காகவே
ReplyDeleteநம்பிக்கை ஒலிவாங்கிகள்
கட்டப்பட்டிருந்தது.//
வார்த்தைகள் எழுத்தாணியால் உச்சிப் பொட்டில் அடிப்பது போல் உள்ளது. ம்....எல்லோருமே இந்த உலகத்தில் ரோபோக்கள் தான்.
//கொடுக்கப்பட்ட
ReplyDeleteநம்பிக்கைகள் தீர்க்கப்பட்டதா
இல்லை உதாசீனம் செய்யப்பட்டதா!
நிறைவேறும் என்ற நம்பிக்கையில்
காத்திருப்புக்கள்
நீண்ட வரிசையில் ஏராளம்.//
காலம் காலமாக காத்திருப்புகள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன ஹேமா...
//புலம்பும் குரல்கள் கேட்பதற்காகவே
ReplyDeleteநம்பிக்கை ஒலிவாங்கிகள்
கட்டப்பட்டிருந்தது.
ஏமாற்றங்களால்
எங்களை இடிக்கிறீர்கள்
என்றல்லவா ஓலங்கள்.//
ஓலங்கள் அனைத்தும் சிரிப்பொலியாக மாறும் காலம் நிச்சயம் வரத்தான் போகிறது அது எப்போது என்று தான் சொல்லத் தெரியவில்லை...
//மாற்றங்களும் மாறுதல்களும்
ReplyDeleteஇயற்கை என்றாலும்
சில மானுடங்கள் தெய்வமாவதும்,
சில மனிதர்கள்
இதயங்களே இல்லா
ரோபோக்கள் ஆவதும் எப்படி?
மனிதநேயம் என்கிற
இரத்த நரம்பே இல்லாமல்.//
சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்
மனித நேயம் இல்லா விட்டால் மனிதன் வெறும் நடமாடும் இயந்திரம் தான்...
உணர்வுகள் புரிந்து கொள்ள முடிகிறது ஹேமா...
பதிவை படித்து மனம் கனக்கத் தான் செய்கிறது...இருந்தாலும், ஹேமா சுகமாகி வந்து புதிய பதிவு போட்டதில் எனக்கு மகிழ்ச்சியே...
மாற்றங்களும் மாறுதல்களும்
ReplyDeleteஇயற்கை என்றாலும்
சில மானுடங்கள் தெய்வமாவதும்,
சில மனிதர்கள்
இதயங்களே இல்லா .....
உலகில் அல்லது உலக இயங்கு நிலையில் இது தான் உண்மை.இப்போ ஆவது கொமினிசம் விளங்குகிறதா?மாற்றம் என்பது மாறாத தத்துவும்.?இதனை ஏற்று கொள்வோம்,தமிழீழ விடுதலைக்காக என்றும் போராடுவோம்.எமக்காக குரல் கொடுக்கும் தமிழகத்தின் நண்பர்களுடன் இணைந்து தமிழீழம் படைப்போம்.
தோழமையுடன்
அப்புச்சி
வந்தாச்சா ...
ReplyDeleteஉடல் நலமா.
\\மனிதநேயம் என்கிற
ReplyDeleteஇரத்த நரம்பே இல்லாமல்.\\
இதயம் அற்ற இயந்திரங்களிடம் ஏன் இந்த எதிர்பார்ப்பு
/*உயிர் குடிக்கும் அரசியலின்
ReplyDeleteசத்தியங்களும் நம்பிக்கைகளும்
வாக்குறுதிகளும்
சாக்கடைத் தீர்த்தமாய்
யாருக்குமே உதவாமல்!!! */
:-((
Yematrangalal yengalai idikkireerhal-sathiyamaana vaarthai Hema.
ReplyDelete////நிறைவேறும் என்ற நம்பிக்கையில்
ReplyDeleteகாத்திருப்புக்கள்
நீண்ட வரிசையில் ஏராளம்.//
///நம்பிக்கைகள் நிலைகுலைந்து
முழி பிதுங்க
சங்கடப்பட்டபடி.////
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது ஹேமா...
இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது இத்தனை ஏமாற்றங்கள்,தொடர்ச்சியான அழிவுகள் தாண்டியும் வாழ்க்கைமீதான பிடிப்பு கொஞ்சமும் குறைவடையாமல் இருக்கிறது .ஏதோவோர் புள்ளியில் நல்லது நடந்துவிடுமென்ற நம்பிக்கையோடு.....
"உயிர் குடிக்கும் அரசியலின்
ReplyDeleteசத்தியங்களும் நம்பிக்கைகளும்
வாக்குறுதிகளும்
சாக்கடைத் தீர்த்தமாய்
யாருக்குமே உதவாமல்!!! "
சத்யமான வார்த்தைகள் ஹேமா... கசப்பான உண்மையும் கூட... உடல் நிலை தேறி வந்ததும் அழுத்தமான கருத்தை பதித்து உள்ளீர்கள் ஹேமா..உடல் நலமின்றி ஓய்ந்து இருந்த வேளையில் இக்கவலையும் கொண்டிர்களா?? நீங்கள் உடல் நலம் தேறி வந்தது மிக்க மகிழ்ச்சி ஹேமா..
கமல்.உலகத்தில் எல்லோருமே ரோபோக்கள் என்று சொல்லிவிட முடியாது.உணர்வுள்ள மனிதன் அரசியலில் இல்லாமல் ஏழையாகவும் வலுக்குறைந்தவனாகவும் இருக்கிறான்.அதுதான் சாபக்கேடு.
ReplyDelete//காலம் காலமாக காத்திருப்புகள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன ஹேமா...//
ReplyDeleteபுதியவன்,இத்தனைக்குப் பிறகும் காத்திருப்புகளின் கைகளில்தான் ஈழமக்களின் வாழ்க்கை.
வாங்கோ அப்புச்சி.எந்தக் குரலும்,எந்தக் கேள்விகளும் எத ஓலங்களும் எங்கள் சிங்கள அரசியலுக்கு விழவேயில்லையே என்னசெய்யலாம்!
ReplyDeleteஜமால் உடல் தேறினாலும் மனம் தேற வழியேயில்லையே!
ReplyDelete//இதயம் அற்ற இயந்திரங்களிடம் ஏன் இந்த எதிர்பார்ப்பு.//
உண்மைதான்.எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு எங்கள் வழியில்
விதியே நீயே கதி என்று நடக்கவேண்டியதுதான்.
நன்றி அமுதா.உங்கள் கருத்தின் வரவுக்கும்.இனி வரலாம் அடிக்கடி.
ReplyDelete//இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது இத்தனை ஏமாற்றங்கள்,
ReplyDeleteதொடர்ச்சியான அழிவுகள் தாண்டியும் வாழ்க்கைமீதான பிடிப்பு கொஞ்சமும் குறைவடையாமல் இருக்கிறது .ஏதோவோர் புள்ளியில் நல்லது நடந்துவிடுமென்ற நம்பிக்கையோடு.....//
ஜீவா,உண்மையிலும் உண்மை நீங்க சொன்னது.இன்னும் வலுவான நம்பிக்கை.யாரையும் குறை சொல்ல முடியாத மனம்.முடிந்த அளவுக்கு வாதாடினார்களே என்கிற திருப்தியோடு.என்றாலும் எங்கள் ஊருக்குப் பெயர் மாற்றி எங்கள் கோவில்கள் இடம் பெயர்க்கப்பட்டு...நினைத்தாலே மனம் வெடித்து மாள்கிறது.
மது,எங்கள் அரசியல் வாழ்வு எங்களுக்குப் பிடித்த மாறாத நோய்.மாற்(ற)று மருந்தே இல்லாமல் தவிக்கிறோம்.
ReplyDeleteமது உங்கள் அன்பிற்கு,
என் அன்பு நன்றி.
ஹேமா said...
ReplyDeleteஉடல் தேறினாலும் மனம் தேற வழியேயில்லையே
//
இப்படியொல்லாம் சொல்லக்கூடாது. துன்பம் வரும் போது வாழ்வின் சந்தோஷமான தருணங்களை நினைத்துக்கொண்டால் கவலை மறந்து விடும் ஹேமா.
வணக்கம் ஹேமா அக்கா..சீக்கிரம் உங்கள் நாட்டின் கவலைகள் மாறும்.இதோ இப்போது தமிழர்கள் நிமிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.....ஜெயா
ReplyDeleteநம்பிக்கைகள் நிலைகுலைந்து
ReplyDeleteமுழி பிதுங்க
சங்கடப்பட்டபடி.//
ஆரம்பமே
அவஸ்தையோடு..
உயிர் குடிக்கும் அரசியலின்
ReplyDeleteசத்தியங்களும் நம்பிக்கைகளும்
வாக்குறுதிகளும்
சாக்கடைத் தீர்த்தமாய்
யாருக்குமே உதவாமல்///
இதைவிட நல்லா சொல்லவே முடியாது..
ஆனந்த்,அன்பான சகோதரனாய் உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு நன்றி.சந்தோஷமும்கூட.எங்கே....
ReplyDeleteநினைக்க நினைக்க.கவலையான தருணங்களும் தனிமையும்தானே அதிகம்.
வாங்க ஜெயா,இடைக்கிடை வந்து போகிறீர்கள் என்பதைச் சொல்லிப் போகிறீர்கள்.சந்தோஷம் ஜெயா.
ReplyDeleteஎங்கே ஜெயா, மனம் இன்னும் கவலை அடைகிறதே.தமிழகத்து எம் சகோதரர்கள் எங்களைவிட உணர்ச்சிவசப்பட்டு உயிரை அல்லவா எமக்குத் தர முனைகிறார்கள்.
என்களுக்காக இப்போது அழுதுகொண்டிருக்கிறோம்.இனி....!
தேவா,சங்கடங்கள் இல்லாமல் நானும் உங்களைப்போல தேநீர் தரக் காத்திருக்கிறேன்.காலம் வரும்.இன்னும் நம்பிக்கையோடு!
ReplyDeleteபாசாங்குக்காரர்களைதானே பதவியில் வைக்கிறோம். இலங்கை தமிழனுக்காக உயிர் துறக்க தயார் என வேற்று அறிக்கை விடும் கலைஞர், இலங்கை தமிழருக்கு சம உரிமை குடுப்போம் என நய்யாண்டி செய்யும் ராஜபக்ஷே, இலங்கையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் பிரணாப், இவர்கள் எல்லாம் முத்துகுமரனின் சடலத்தின் சாம்பலை நெற்றியில் பூசி கொண்டாலாவது புத்தி வரட்டும்.
ReplyDeleteவீர த்யாகி முத்துக்குமரனுக்கு அஞ்சலியோடு...
நிலா முகிலன்.
முகிலன் தெரிகிறது புரிகிறது.இருந்தும் மனமில்லாதோர் கையில்தானே அரசியல் நெடுநாளாய் தங்கி நிற்கிறது.எங்களிடம் மனம் இருந்தும் பலனில்லையே!
ReplyDeleteநிஜம் வாசிப்பவர்களையே உலுக்குமெனில்... வசிப்பவர்களை ??
ReplyDeleteஆழமான பதிவு சகோதரி...
சேவியர்.
"தெரிகிறது புரிகிறது.இருந்தும் மனமில்லாதோர் கையில்தானே அரசியல் நெடுநாளாய் தங்கி நிற்கிறது.எங்களிடம் மனம் இருந்தும் பலனில்லையே!"
ReplyDeleteவரிகளின் வேதனை புரிகிறது.
காலம் கனியும் காத்திருப்போம்.
நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவிறக்க்ம் செய்ய முடிந்ததா. தகவல் எதுவும் இல்லையே..?
ReplyDeleteசேவியர் அண்ணா,வந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.வலித்துகொண்டதே எம் வாழ்வாகிறது.
ReplyDeleteவாசவன்,அடிக்கடி வாங்க.வேதனைகள் பங்கு போட்டுக்கொள்ளும்போது இன்னும் நம்பிகைகள் பலமாகிறது.
ReplyDeleteவண்ணத்துப்பூச்சியாரே வாங்க.நன்றி உங்களுக்கும்.
ReplyDeleteவார்த்தைகளில் ஆதங்கங்கள் அப்படியே தெரிகிறது, நம்பிக்கையோடு இருப்போம் நாம் விரும்பும் நாள் நிச்சயம் வரும்!!
ReplyDeleteநன்றி இசக்கிமுத்து.
ReplyDeleteகாத்திருப்புக்கள்கூட அசதியாகிவிடுகின்றன சிலசமயங்களில்!