Thursday, January 08, 2009

நீ...நான்!

நான்
குளிர்ச்சி தரும்
நிலவாக
இருட்டில்
மட்டும் வந்து
போகிறேன்.


நீ.....
உயிர் வாழ
வெப்பம் தரும்
சூரியனாக
இருந்துவிட்டால்.
உன் நிழல்தானே
என் ஒளி!!!


ஹேமா(சுவிஸ்)

31 comments:

  1. \\நான்
    குளிர்ச்சி தரும்
    நிலவாக
    இருட்டில்
    மட்டும் வந்து
    போகிறேன்.\\

    எவ்வளவு வெப்பமென்றாலும் அதை பெற்றுக்கொண்டு, குளிர்ச்சி தருவது நிலவு - ஆஹா மிக அருமை.

    எத்தனை இன்னல்களை ஆணிடமிருந்து பெற்றாலும், சிறு புன்னைகையால உதறிவிட்டு வெப்பம் தந்தவருக்கு குளிர்ச்சி தரும் பெண்ணை இதனால் தான் நிலவு என்றனறோ ...

    ReplyDelete
  2. \\நீ.....
    உயிர் வாழ
    வெப்பம் தரும்
    சூரியனாக
    இருந்துவிட்டால்.
    உன் நிழல்தானே
    என் ஒளி!!! \\

    அருமை ஹேமா ...

    நிழல் என்பது கருப்பானது, ஆனாலும் அதனை ஒளியாகத்தருவது அல்லது ஒளியாக்கி தருவது பெண்ணால் மட்டுமே ஒரு நிலவால் மட்டுமே முடியும், இருப்பினும் உயிர் வாழ வெப்பம் தருவது சூரியன் - ஆண் என நீங்கள் சொல்லியிருப்பது மிக அருமை.

    ReplyDelete
  3. அருமையான கற்பனை....ஹேமாவும் சிலதைப் புரியவைக்க வேணும் என்று முயற்சி செய்கிறா,....ஆனால் அது புரிய வேண்டிய அவருக்குப் புரியாமல் உள்ளது தான் கவிதையின் வேதனையூடாகத் தெரிகிறது.

    ReplyDelete
  4. நன்றி ஜமால்.இத்தனை சீக்கிரமாய் ஒரு பின்னூட்டம்.அதுவும் கவிதையை உணர்ந்து மிகத் தெளிவாய் ரசனையோடு.

    ReplyDelete
  5. ஆண்... சூரியன் தான்.
    சரி..சரி.சிலசமயம் சுடுதே.
    தாங்கவே முடியாம.

    ReplyDelete
  6. கமல்,புரிஞ்சாலும் சில கல்லுளி மங்கர்களை என்ன செய்யலாம்?மரம்,சுவர் இப்படியானதுகளோடக் கூடக் கதைக்கலாம்.சிலசமயம் பதில் கிடைக்கும்.

    ReplyDelete
  7. \\ஹேமா said...

    ஆண்... சூரியன் தான்.
    சரி..சரி.சிலசமயம் சுடுதே.
    தாங்கவே முடியாம.
    \\

    வருத்தமான உண்மையே ஹேமா ...

    ReplyDelete
  8. ஜமால் ஒத்துக்கொண்டால் சரி.நீங்க நல்ல பிள்ளைதான்.

    ReplyDelete
  9. \\Blogger ஹேமா said...

    ஜமால் ஒத்துக்கொண்டால் சரி.நீங்க நல்ல பிள்ளைதான்.\\

    நான் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும் அது உண்மைதானே ...

    நிலவும் சில நேரங்களிலேனும் சுடும் தானே ...

    அதிகமா சூட்டினை சூரியனிடமிருந்து பெறுவதாலா

    ReplyDelete
  10. ஜமால்,நிலவு எப்பிடித்தான் சுட்டாலும்,இரவல் வெப்பத்தில.
    புண் (மனசில)வரும் அளவுக்குச்
    சுடாதுதானே!

    ReplyDelete
  11. \\Blogger ஹேமா said...

    ஜமால்,நிலவு எப்பிடித்தான் சுட்டாலும்,இரவல் வெப்பத்தில.
    புண் (மனசில)வரும் அளவுக்குச்
    சுடாதுதானே!\\

    சரியே

    நிலவாய் இருந்து சுடும வரைக்கும்

    சில நேரங்களில் (சில நேரங்களில்)

    சூரியனாய் மாறிவிடுகின்றது நிலா ...

    (சொந்த அனுபவம் இல்லை - என் நிலா இதுவரை சுட்டது இல்லை - நானும் அதிகமான சூடு பரப்பியதில்லை என்று என் நிலவும் சொல்லும்.)

    ReplyDelete
  12. சிறிய கவிதையாக இருந்தாலும்
    அழகிய கவிதை...

    //உன் நிழல்தானே
    என் ஒளி!!! //

    மிக மிக அருமை...

    ReplyDelete
  13. // ஹேமா said...
    ஆண்... சூரியன் தான்.
    சரி..சரி.சிலசமயம் சுடுதே.
    தாங்கவே முடியாம.//

    குளிர் நிலவும் சில நேரம்
    சுட்டு விடுகிறதே ஹேமா...?

    ReplyDelete
  14. ஹேமா,
    இருக்கின்ற தேசம் குளிர் தான். அது எப்படி இப்படி சிலேடையாக....
    பார்வைக்கு நிலவு தேய்ந்தாலும், பின் முழுவடிவம் பெறுவதில்லையா?
    எண்ணங்களால் உணர்வா?
    உணர்வால் எண்ணங்களா?
    ஆதவன் ஒளி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ஆழமான கருத்துகள் ஹேமா, உங்கள் கவிதைகளை எப்போது தொகுப்பாக வெளியிட போகின்றிர்கள்.

    ReplyDelete
  16. ஜமால் எனக்கும் சொந்த அனுபவம் இல்லை.எல்லாம் கேள்விப்
    பட்டவைகள்தான்.என்றாலும் சூரியனும் நிலாவும் இயற்கையின் அற்புதங்கள்.

    ReplyDelete
  17. நன்றி புதியவன்.சூரியனின் ஒளி கொஞ்ச நேரம் மங்கிவிட்டாலும் நிலவு சோர்ந்துவிடுமே!

    ReplyDelete
  18. //குளிர் நிலவும் சில நேரம்
    சுட்டு விடுகிறதே ஹேமா...?//


    புதியவன் அனுபவம்போல!

    ReplyDelete
  19. //ஆழமான கருத்துகள் ஹேமா, உங்கள் கவிதைகளை எப்போது தொகுப்பாக வெளியிட போகின்றிர்கள்.//
    திலீபன்,உண்மையில் போன வாரம் இதைப்பற்றி ஒரு சின்ன யோசனையோடு கதைத்தோம் இங்கு.என்றாலும் அத்தோடு விட்டாச்சு.சரி....திரும்பவும் யோசிக்கத்தான் வேணும்.

    ReplyDelete
  20. //எண்ணங்களால் உணர்வா?
    உணர்வால் எண்ணங்களா?//

    காரூரன்,அழகாக உண்மையைக் கண்டு பிடித்துச் சொல்றமாதிரி இருக்கு.

    ReplyDelete
  21. //
    நான்
    குளிர்ச்சி தரும்
    நிலவாக
    இருட்டில்
    மட்டும் வந்து
    போகிறேன்.
    //

    அருமையான கவிதை ஹேமா
    ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க

    மனதை வருடிச்செல்லும் உன் எழுத்துக்கு என் அன்பை பரிசாக தருகிறேன் தோழி

    ReplyDelete
  22. ரம்யா உங்கள் அன்பு கண்டு மனம் குதூகலிக்கிறது.அன்பின் தோழியே என்றும் இணைந்திடு காற்றின் அலைகளில் என்னோடு எப்போதும்.நன்றி.

    ReplyDelete
  23. //
    நீ.....
    உயிர் வாழ
    வெப்பம் தரும்
    சூரியனாக
    இருந்துவிட்டால்.
    உன் நிழல்தானே
    என் ஒளி!!!
    //

    இதுவும் நல்லா இருக்கு

    ReplyDelete
  24. //
    ஹேமா said...
    ரம்யா உங்கள் அன்பு கண்டு மனம் குதூகலிக்கிறது.அன்பின் தோழியே என்றும் இணைந்திடு காற்றின் அலைகளில் என்னோடு எப்போதும்.நன்றி.

    //

    எப்போதும் உன்னுடன் நான் இருக்கிறேன்.

    நட்புடன் சேர்த்து கொணடதிற்கு
    மிக்க நன்றி ஹேமா

    ReplyDelete
  25. நட்பு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்

    அரோக்கியமாய் வளர எனது பிரார்த்தனைகள் ...

    ReplyDelete
  26. நன்றி ஜமாலுக்கு.ஜமால் கண் நூறு படாம இருக்க ரம்யா சுத்திப் போட்டுக்கோங்க.நானும் போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  27. Nalla kutty kavithai,using the words Moon & Sun.

    ReplyDelete
  28. கவித நல்லா இருக்கு

    ReplyDelete
  29. அருமை அருமை ஹேமா

    சின்ன வரிகளில் மிக அழகாக பெரிய விஷயத்தை சொல்லி விட்டீர்கள் ..

    வாழ்த்துக்களுடன்
    விஷ்ணு

    ReplyDelete
  30. yes this is a nice poem,,,, ilike it,,,,,, by aswathy

    ReplyDelete
  31. அருமை!

    நன்றாக வந்திருக்கிறது.

    ReplyDelete