Tuesday, January 06, 2009

நான் கறுப்பு...

காலக்கிறுக்கனின்
வார்த்தைகளில் தடுமாற்றம்.
குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி
திருப்திகள் அற்ற மரணங்கள்போல
அர்த்தமற்றதாய் அந்தச் சொல்.


கறுப்பு நீ....
அருவருக்கும்
அட்டைக்கறுப்பு...நீ.


கறுப்பின் கை பிடித்து
லாகவகமாய் புல்லாங்குழல் வாசித்து
கறுப்புக் காற்றில் கலந்துவரும்
கறுப்பு இசை.


ஏழைகள் எவருமில்லா
நகரத்தை உருவாக்க
அங்கும்
கடவுளும் கறுப்பாய்.
மழை பிரசவிக்க
கருக்கொள்ளும் மேகம் கறுப்பு.


நான் புதைத்துவிட்ட
கறுப்பு இரகசியம் அது.
தேடிப்பிடித்து
அதைத் தோண்டி எடுத்தாலும்
கறுப்பாய்தான்
கருவைரமாய் அதுவும்.


கறுப்புப் புள்ளியில் வாழ்க்கை
ஆரம்பம் எங்கே
முடிவும் எங்கே.
சுற்றி வரும் சனிப்பார்வை கறுப்பாம்.
கருவறை கறுப்பாம்.
காறித்துப்பும் கயவரின்
எண்ணங்கள் கறுப்பாலேயே
வரையப்பட்டதாய்.


ஒரு சிறு விம்பம்
என் பின்னாலேயே
குரூரமாய்...
சிலசமயம் குழந்தையாய்
கறுப்பு நிழலோடு காத்திருப்பதாய்.
இறப்பிலும்கூட
கறுப்புச் சவக்குழிக்குள்ளும் கூட
வருவதாய் உறுதிமொழியோடு.


திட்டமிட முடியாத
கறுப்பு உலகில்
நேற்றும் நாளையும்
இன்றுபோல
கறுப்பு வண்ணமாய் எனக்கு.
கனவாய் மிதக்கும்
நம்பிக்கைகளும் கறுப்பு.


முடிந்த முடிவுகளோ
முடிக்க முடியாத முடிவுகளோ
எதுவுமற்று
பயங்கரமான
கறுப்பு உலகத்தில்
வாழும்
கறுப்பு மனிதனாய் நான்!!!


ஹேமா(சுவிஸ்)

60 comments:

  1. அத்தனையும் அருமை

    \\முடிந்த முடிவுகளோ
    முடிக்க முடியாத முடிவுகளோ
    எதுவுமற்று
    பயங்கரமான
    கறுப்பு உலகத்தில்
    வாழும்
    கறுப்பு மனிதனாய் நான்!!!\\

    மிக அருமை.

    ReplyDelete
  2. இருளும்
    இன்னலுமற்ற
    வாழ்க்கை எங்கே
    வருத்தம் போய்
    வசந்தம் வரத்தான் செய்யும்
    இது
    இயற்கை சொல்லும் பாடம்

    ReplyDelete
  3. கறுப்பு உண்மையில் எனக்கு பிடித்த நிறங்களில் ஒன்று ஏன் என்றால் நானும் கருப்புதான்.விடியல் வரும் கவலை வேண்டாம் ஹேமா

    ReplyDelete
  4. பிரபஞ்சம் முழுதும் பரவியிருப்பது
    கறுப்பு...
    கறுப்பு இல்லையென்றால் வெளிச்சம்
    தேவையில்லை...

    //அங்கும்
    கடவுளும் கறுப்பாய்.//

    இருக்கலாம்...

    ReplyDelete
  5. கறுப்புக் கவிதை
    கருத்தை நிறைத்து விட்டது...

    //நம்பிக்கைகளும் கறுப்பு//

    கறுப்பாய் இருந்தாலும்
    நம்பிக்கை நம்பிக்கை தான்...

    கவிதை அருமை ஹேமா...

    ReplyDelete
  6. தீலிபன் ...
    கறுப்பு உண்மையில் எனக்கு பிடித்த நிறங்களில் ஒன்று ஏன் என்றால் நானும் கருப்புதான்.
    //
    நான் சொல்ல வந்ததை சொல்லீட்டிங்க. கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. ஹேமா,
    கவிதை மிக அருமை,

    //திருப்திகள் அற்ற மரணங்கள்போல
    அர்த்தமற்றதாய் அந்தச் சொல்//

    திருப்தி அற்றதால் இது அர்த்தமற்றது...
    இது அர்த்தமற்றது என்ற திருப்தியுடன் நான்.

    ReplyDelete
  8. இது சும்மா வம்புக்கு :))
    ///பயங்கரமான
    கறுப்பு உலகத்தில்
    வாழும்
    கறுப்பு மனிதனாய் நான்//(நீங்கள்)

    கறுப்பு உலகத்தில்
    வாழும் பயங்கரமான
    கறுப்பு மனிதனாய் நான்.
    ( கி கி கி - இது ஒரு படத்துல வந்த நகைச்சுவையை தழுவியது )

    ReplyDelete
  9. கறுப்பே அழகு என்பதைக் கவிதையிலும் சொல்லி விட்டீர்கள்...கவிதை கனக்க வைக்கிறது.. யாருக்கோ முள்ளாய் குத்துவது போலவும் உள்ளது. தொடருங்கோ...

    ReplyDelete
  10. ஜமால் கவிதை போட்டு 5 நிமிடங்கள் கூட ஆகவில்லை.உங்கள் பின்னூட்டம் கண்டு சந்தோசப்பட்டேன்.நன்றி.கறுப்பின் தாக்கத்தால் வந்த வரிகள்.

    ReplyDelete
  11. திகழ்,எதிர்பார்ப்பது எப்போதும் வசந்தத்தைத்தான்.ஆனால் மாறி மாறி வருவது...!

    ReplyDelete
  12. திலீபன் வாங்கோ,நிறைய நாட்களுக்குப் பிறகாய் உங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் சந்தோஷம்.எங்கே உங்களைத் தேட என்று நிறையவே யோசித்துவிட்டேன்.
    நன்றி மீண்டும் வந்ததற்கு திலீபன்.

    //விடியல் வரும் கவலை வேண்டாம் ஹேமா//

    விடியல் என்றூ சொல்லிச் சொல்லியே எங்கள் காலங்கள் ஒரு எல்லைக்கே வந்துவிடுகிறதே!விடியல் எங்கே வெளிச்சம் எங்கே!

    ReplyDelete
  13. புதியவன்,உன்கள் எதிர்மறையான கறுப்பின் கருத்தும் உண்மையாய்தான் இருக்கிறது.என்றாலும் இருட்டு மனம் கறுப்பு நம்பிக்கைகளை நம்ப மறுக்கிறதே!

    ReplyDelete
  14. //திருப்தி அற்றதால் இது அர்த்தமற்றது... இது அர்த்தமற்றது என்ற திருப்தியுடன் நான்.//

    குழப்பம்=இரவீ

    ReplyDelete
  15. இரவீ,நான் கறுப்பு ங்கிறது உங்களுக்கு நகைச்சுவையாப் போச்சு.ம்ம்ம்ம்...!

    ReplyDelete
  16. //கவிதை கனக்க வைக்கிறது.. யாருக்கோ முள்ளாய் குத்துவது போலவும் உள்ளது.//

    கமல் அப்படியே என்ர மனசைப் படம் பிடிச்சிருக்கிறீங்கள்.யாருக்கு அளவோ போட்டுக்கொள்ளட்டும் யாரென்றாலும்.என்ன அப்பிடியெல்லோ!

    யார் சொன்னது கறுப்பு அழகு எண்டு.அட போங்கோ கமல்.

    ReplyDelete
  17. ஆனந்த்,அப்போ நீங்களும் கறுப்பா.
    கறுப்பு ங்கிற விஷயம் ஊர்ல இருக்கிறப்ப விட இப்பிடி வேற வெள்ளைக்கார நாடுகளில் இருக்கிறப்போதான் எங்களை நாங்களே,எங்க கலரை அழகா ரசிக்கிற சந்தர்ப்பங்கள் கூடுதலா இருக்குது.

    ReplyDelete
  18. *\\திட்டமிட முடியாத
    கறுப்பு உலகில்
    நேற்றும் நாளையும்
    இன்றுபோல
    கறுப்பு வண்ணமாய் எனக்கு.
    கனவாய் மிதக்கும்
    நம்பிக்கைகளும் கறுப்பு.\\*


    உங்கள் கவியில் கறுப்பு சற்று மனம் சோர்ந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றிற்று.
    உற்சாகமூட்ட என் பார்வையில்

    திராவிடனும் கறுப்பு
    திராவிட கழகமும் கறுப்பு
    எதிரிக்கு காட்டும் கொடி கறுப்பு
    வலிமையின் நிறம் கறுப்பு
    வைர பனை மரம் கறுப்பு
    ஆதவனின் உஷ்ணத்தை உறிஞ்சுவதும் கறுப்பு
    கண் காணாமல் காதலர் இருக்க தேடும் இருள் கறுப்பு
    ஒளி படாத‌ எந்த பொருளும் கறுப்புத்தான்.
    கறுப்புத்தான் இன்றைய வல்லரசின் தலைவன்.

    ReplyDelete
  19. காரூரன்,நீங்கள் கறுப்பை உயர்த்திச் சொன்ன கருத்துக்களும் சரிதான்.
    ஆனால் கறுப்பு என்று சொன்ன
    வுடனேயே அதன் தரத்தைப் பிறகுதானே யோசித்து ஆமாம் கறுப்பும் உய்ர்ந்ததுதான் என்று ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.கறுப்பு என்றாலே அசிங்கம்,இருட்டு,என்றுதானே உடன் கருத்தாகிறது.அதனால்தான் என் வரிகள் இப்படி வெளிப்பட்டன.
    நிறைவான கருத்துக்கு மிக்க நன்றி காரூரன்.

    ReplyDelete
  20. கருப்பு தான் நிஜமோன்னு பல முறை சிந்திப்பதுண்டு.

    வெளிச்சம் என்பது வந்தால் கருப்பு விலகும்.

    வெளிச்சம் போய் விட்டால் கருப்புதான் மீண்டும்.

    ReplyDelete
  21. அப்போ ஜமால் என்ன சொல்ல வாறீங்க.கறுப்பா...வெள்ளையா நிஜம்.என்னையும் சேர்த்துக் குழப்புறீங்களே!

    ReplyDelete
  22. //திருப்தி அற்றதால் இது அர்த்தமற்றது... இது அர்த்தமற்றது என்ற திருப்தியுடன் நான்.//

    ஹேமா - இந்தவரிகளில் உங்களுக்கு என்ன குழப்பம் ???
    இதுவா ??? கருப்பும் உங்க கவலையும்....
    - இன்னும் புரியலையா ?

    சரி ,
    திருப்தி அற்றதால் கருப்பு அர்த்தமற்றது... (திருப்தி இருந்தா கருப்பும் அர்த்தமானது).
    இது(கவலையாக வந்த முதல் வரி) அர்த்தமற்றது என்ற திருப்தியுடன் நான்.

    ReplyDelete
  23. //ஹேமா said...
    இரவீ,நான் கறுப்பு ங்கிறது உங்களுக்கு நகைச்சுவையாப் போச்சு.ம்ம்ம்ம்...!//
    எனக்கு எல்லாமே நகைசுவைதான் ...ரொம்ப கோவம்னா எனக்கு வாலுகட்டி பொட்டுவைங்க :)

    அதுக்குமுன்னாடி - இத படிங்க :
    இரண்டு வருடங்களுக்கு முன்பு பணிவிடையமாக நெதர்லாந்து போயிருந்தேன்...
    ஒரு தேநீர் இடைவெளியின் போது அனைவரும் நத்தார் விழா கொண்டாட்டங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், நத்தார் கொண்டாட்டத்தின் போது கிருஸ்துமஸ் தாத்தாவுடன் கூட இரு கறுப்பர்கள் வருவது வழக்கம், அவர்களை பார்த்து குழந்தைகள் பயப்படும் என பேசிக்கொண்டிருக்கும் போது - அங்கு வேலை செய்யும் எனது நண்பன் "அப்படி எங்க ஊரில் வேஷம் போடுவது நமது மேலதிகாரி தான்" என காட்டிக்கொடுத்தான், எனது மேலதிகாரி நல்ல குசும்பன் - அவன் உடனே என்னை பார்த்து "இந்த வருடம் ரவிய அப்படியே அனுப்சிடுவோம்" என்றான்.
    நிறம் குறித்து உயர்வாகவோ - தாழ்வாகவோ பேசுவது எனக்கு பிடிக்காது என்றாலும், அங்கு கோபத்தை காட்டாமல்(மேலதிகாரில) அவனை பின்வரும் வரியால் அனைவர்க்கும் முன் பழிதீர்த்துக்கொண்டேன். "எங்களுக்கு வேஷம் போட தேவையில்லை - ஏன்னா நாங்க யாரையும் ஏமாத்தவோ, பயமுறுத்தவோ இல்லைன்னு".

    ReplyDelete
  24. //ஹேமா said...
    அப்போ ஜமால் என்ன சொல்ல வாறீங்க.கறுப்பா...வெள்ளையா நிஜம்.என்னையும் சேர்த்துக் குழப்புறீங்களே!
    //

    ஹேமா,
    "கருப்பு + வெள்ளை + எண்ணெய்" சேர்த்து குழப்ப என்ன கலர் வரும் ?

    ReplyDelete
  25. கருப்பு என்பது ஒரு குறையே அல்ல

    கருப்பு எனக்கு மிகவும் பிடித்த கலர்
    சும்மா நான் இதை இங்கு சொல்லவில்லை

    அதற்காக நான் கருப்பு என்று சொல்லவில்லை

    ஐயோ நான் என்ன சொல்ல வந்தேன் என்று மறந்து போச்சே!!!

    ReplyDelete
  26. ஏங்க ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க
    நான் இன்னைக்கு தான் உங்க ப்லாக் பார்த்தேன்

    ப்ளாக்கும் அழகா இருக்கு
    உங்கள் கவிதையும் அழகா இருக்கு
    அழகோ அழகு கொள்ளை அழகு உங்க Template

    கொன்னுட்டீங்க ஸ்க்ரீன் முழுவதும்
    காதல் மனம் வீசிக்கொண்டு இருக்குப்பா
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  27. //
    / ஹேமா said...
    அப்போ ஜமால் என்ன சொல்ல வாறீங்க.கறுப்பா...வெள்ளையா நிஜம்.என்னையும் சேர்த்துக் குழப்புறீங்களே!

    //

    அட ஹேமா உங்களுக்கு தெரியலையா
    ஜமால் மொத்தத்திலே உங்களை குழப்பற மாதிரிதான் தெரியுது பாக்கலாம்

    ReplyDelete
  28. Nalla post Hema,using the word Karuppu.

    ReplyDelete
  29. இரவீ,கறுப்பையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேணும்.
    சரி....சரிதான்.

    எனக்கு கோவமே வராதே.வந்தாலும் வால் மட்டுமா கட்டுவேன்.நீங்க மீசை மழிக்கலன்னு தானே சொன்னீங்க.
    ம்ம்ம்...

    உண்மைதான் இரவீ வெள்ளைத்தோல் போல எங்கள் தோல் நிறம் பச்சோந்தி இல்லையே.வெயிலுக்கு ஒரு நிறம்.
    மழைக்கு,குளிருக்கு,கோவத்துக்கு,காய்ச்சலுக்கு ன்னு மாறாத நிரந்தரமான,
    வேஷம் போடாத நிறம்.

    ReplyDelete
  30. இரவீ Said...
    //ஹேமா,
    "கருப்பு + வெள்ளை + எண்ணெய்" சேர்த்து குழப்ப என்ன கலர் வரும்?//

    இரவீ, என்ன வரும்?வெள்ளைக்கறுப்பெண்ணெய்.சரியா!

    ReplyDelete
  31. வாங்க வாங்க ரம்யா.முதன் முதலா வாறீங்க மறதியையா கொண்டு வந்தீங்க.ஞாபகத்தை எடுத்திட்டு வாங்க முதல்ல.

    ரம்யா நான் சொல்லவே இல்லையே நீங்க கறுப்புன்னு.இங்க யார் சொன்னது ரம்யா கறுப்புன்னு?

    ReplyDelete
  32. ரம்யா ரொம்ப நன்றி என் வீட்டுப் பக்கம் வந்ததுக்கு.இனி அடிக்கடி வாங்க.என்னோட சேர்ந்தே காதல் கொண்டாடிடலாம்.

    பாத்தீங்களா ரம்யா.ஜமால் குழப்பிட்டு அப்புறம் இந்தப் பக்கம் காணல.வரட்டும்... வரட்டும்.

    ReplyDelete
  33. நன்றி முனியப்பன்.கறுப்பு அழகா அழகில்லையா நீங்க சொல்லவே இல்லையே!

    ReplyDelete
  34. ஜமால்,திகழ்,திலீபன்,புதியவன்,
    ஆனந்த்,இரவி,கமல்,காரூரன்,
    ரம்யா,முனியப்பன் எல்லார்
    கிட்டயும் ஒரு கேள்வி இப்போ.
    நான் கறுப்பா ?

    நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!

    ஏன் கேக்குறேன்னா எல்லாரும் எனக்காகக் கவலைப் பட்டமாதிரித் தெரியுது.அதான்.

    கொஞ்சம் சந்தோஷமும்கூட.ஏன்னா
    எனக்காக இனி நான் வாதாடத் தேவையே இல்லையே!

    ReplyDelete
  35. விஞ்ஞான பூர்வமாக நிறங்கள் என்று எதுவும் இல்லை!!!
    தெரியும்தானே ஹேமா!!!
    தேவா..

    ReplyDelete
  36. //
    ஹேமா said...
    ஜமால்,திகழ்,திலீபன்,புதியவன்,
    ஆனந்த்,இரவி,கமல்,காரூரன்,
    ரம்யா,முனியப்பன் எல்லார்
    கிட்டயும் ஒரு கேள்வி இப்போ.
    நான் கறுப்பா ?

    நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!

    ஏன் கேக்குறேன்னா எல்லாரும் எனக்காகக் கவலைப் பட்டமாதிரித் தெரியுது.அதான்.

    கொஞ்சம் சந்தோஷமும்கூட.ஏன்னா
    எனக்காக இனி நான் வாதாடத் தேவையே இல்லையே!

    //

    கண்ணம்மா கருப்புக்கு தான் அழகு
    கருப்புக்கு நகை போட்டு கண் திஷ்டி வழி
    சிகப்புக்கு நகை போட்டு .............................

    (இதை வேறே மாதிரி சொல்லுவாங்க
    உஷாரா நான் எப்படி மாத்திட்டேன் பாத்தீங்களா
    இதுதான் ரம்யா பஞ்ச் )

    ReplyDelete
  37. அன்பு ஹேமா...இங்கே பலரும் சொல்லி உள்ளதை போல நானும் கருப்பு என மிக பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்...
    கருமை நிறமே உலகின் முதல் நிறம்...கருப்பிலிருந்து தோன்றியது தான் இந்த அண்ட சராசரமே...கருமை நிறத்தை இகழ்பவர் ப்ரபஞ்ச உண்மை புரியாத பேதைகள்...இருள் நம் வாழ்வில் சூழ்ந்தால் வெளிச்சம் மிக அருகில் என நினைத்தால் இருள் ஓடிவிடும்...

    ((மெத்தாய் சொல்லிவிட்டேன்...கடைபிடிக்க இயலாமல் தத்தளிக்கிறேன் ஹேமா...))

    ReplyDelete
  38. //எனக்கு கோவமே வராதே//
    என்ன நம்ப சொல்லுறீங்களா?
    ஹேமா, நாங்கெல்லாம் தலைகவசம்(ஹெல்மெட்) போட்டுக்கிட்டு தூங்குவோம் தெரியும்ல...

    ReplyDelete
  39. //வெள்ளைக்கறுப்பெண்ணெய்.சரியா!//
    இப்ப சொல்லுங்க குழப்பம்=ஹேமாவா ரவியா :),
    (தான மாட்டிகிட்டீங்களா) .

    ReplyDelete
  40. //நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!//
    அது சரி - நான் சொன்னேனா நீங்க கறுப்புன்னு???

    //ஏன் கேக்குறேன்னா எல்லாரும் எனக்காகக் கவலைப் பட்டமாதிரித் தெரியுது.அதான்.//
    நான் சொன்னேனா நான் கவலைபட்டேன்னு???

    //கொஞ்சம் சந்தோஷமும்கூட.ஏன்னா
    எனக்காக இனி நான் வாதாடத் தேவையே இல்லையே!//
    நான் சொன்னேனா - நீங்க உங்களுக்கு வாதாட வேண்டாம்னு ???

    குறிப்பு: மேல உள்ள பின்னூட்டம் நான் சொன்னது இல்ல :))

    ReplyDelete
  41. //கறுப்பு உலகத்தில்
    வாழும்
    கறுப்பு மனிதனாய் நான்!!!//

    ஹேமா,
    மேலே உள்ள வரிகளுக்கு விளக்கம் வேணும் இப்போது... உடனே... ?

    ReplyDelete
  42. தேவா வாங்க.கறுப்பைக் கண்டவுடன் விஞ்ஞான பூர்வத்தையா நினைத்துவிட்டா நக்கல் பண்ணுகிறார்கள்.அநேகமாக இனி நக்கல் பண்ணமாட்டார்கள் என்று நம்பலாம்.நன்றி தேவா.

    ReplyDelete
  43. ஹாய் பஞ்சு ரம்யா சொல்லி முடிக்காம!

    என்னதான் சொன்னாலும் கோவம் வந்த உடனே போடி(டா) கறுப்பி(பா)ன்னு தானே சொல்றாங்க.
    வெள்ளைச்சி வெள்ளையான்னு யாராச்சும் சொல்றதில்லையே.கேலி பண்றப்போ விஞ்ஞானத்தையோ பொன்மொழியையோ யார் நினைக்கிறாங்க ரம்யா.

    ReplyDelete
  44. மது வாங்க.நீங்க சொல்றதுபோல சொல்றது சுகம்.அதைச் சமாளிக்க எவ்வளவு கஸ்டப்படணும்.ஒன்று உண்மை மது,என்றும் இருள் என்பது ஒரு மாயை.வெளிச்சம்தான் உண்மை.ஆனால் வெளிச்சத்தின் காலோடு ஒட்டித் திரியும் ஒரு கிராதகன்போல.எப்படா வெளிச்சம் கொஞ்சம் மறைவான் ன்னு பாத்திட்டே இருக்கும்.நாங்கதான் உஷாரா இருக்கணும்.

    ReplyDelete
  45. //"கருப்பு + வெள்ளை + எண்ணெய்" சேர்த்து குழப்ப என்ன கலர் வரும்?//

    இரவீ நான் குழப்பல.நீங்க சொன்னதை எழுதுக்கூட்டிச் சொல்லியிருக்கேன்.

    //திருப்தி அற்றதால் இது அர்த்தமற்றது... இது அர்த்தமற்றது என்ற திருப்தியுடன் நான்.//

    மேல பின்னூட்டத்தில கறுப்பு பரவாயில்லை.திருப்திப்பட்டுக்கோங்க ன்னு சொல்ற மாதிரிதானே இருக்கு.

    ReplyDelete
  46. ////கறுப்பு உலகத்தில் வாழும்
    கறுப்பு மனிதனாய் நான்!!!//

    இரவீ,கவிதைக்குச் சிலசமயம் பொய்யும் அழகு.அதே நேரம் மனதின் உணர்வுகளும்,வலியோ சந்தோஷமோ வரிகளாய் வந்து விழும்.அப்போ...?

    ReplyDelete
  47. //கறுப்பு மனிதனாய் நான்!!!//

    மீ டூ :))))


    பட் அதைப்பத்தியெல்லாம் நாம ஏன் கவலைப்படணும்ங்க! :))

    ReplyDelete
  48. இரவீ,எத்தனை நாளைக்கு ஹெல்மெட் போட்டபடி படுப்பீங்க பாக்கலாம்.

    ReplyDelete
  49. பாருங்க ஆயில்யனும் வந்தாச்சு நான் கறுப்பு ன்னு சொல்ல!

    ReplyDelete
  50. \\ஹேமா said...

    ஜமால்,திகழ்,திலீபன்,புதியவன்,
    ஆனந்த்,இரவி,கமல்,காரூரன்,
    ரம்யா,முனியப்பன் எல்லார்
    கிட்டயும் ஒரு கேள்வி இப்போ.
    நான் கறுப்பா ?

    நான் சொன்னேனா நான் கறுப்புன்னு!

    ஏன் கேக்குறேன்னா எல்லாரும் எனக்காகக் கவலைப் பட்டமாதிரித் தெரியுது.அதான்.\\

    அப்ப கருப்புன்னா கவலைப்படனுமா

    ReplyDelete
  51. ஜமால் 50 ஆவது சதம் அடிச்சிட்டீங்க.நன்றி.

    உங்களுக்கென்ன தெரியும் ஜமால்.
    கறுப்புன்னா கவலை இல்லையா!சாதாரணமா சொல்லிட்டீங்க.
    பட்டாத்தான் தெரியும் உங்களுக்கு.

    ReplyDelete
  52. \\Blogger ஹேமா said...

    ஜமால் 50 ஆவது சதம் அடிச்சிட்டீங்க.நன்றி.

    உங்களுக்கென்ன தெரியும் ஜமால்.
    கறுப்புன்னா கவலை இல்லையா!சாதாரணமா சொல்லிட்டீங்க.
    பட்டாத்தான் தெரியும் உங்களுக்கு.\\

    என்னுடைய பழைய கவி வரிகள் தங்களுக்கு பதில் சொல்லும்

    விரைவில் ...

    ReplyDelete
  53. கருப்பு நீங்கள் விரும்பும் நிறமா? வெறுக்கும் நிறமா?
    நிச்சயம் உங்களை பாதித்துள்ள நிறம்.

    ReplyDelete
  54. வாங்க செல்வகுமார்.முதன் முதலா வரும்பொதே கேள்வியோட வாறீங்க.ஏதோ ஒன்று பாதித்த நிறம் என்பது சரி.ஆனால் எந்த நிறம்ன்னு சொல்லமாட்டேன்.நீங்களே கண்டு பிடிங்க.

    ReplyDelete
  55. இந்தப்பதிவுக்கு நான் பின்னூட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்...:)
    உங்கடை திருப்பதிக்காக கறுப்பு அழகான நிறங்களில் ஒன்று...

    ReplyDelete
  56. //இது என்ன ஹேமா...?!//

    தமிழன் என்ன சொல்றீங்கள்.விளங்கேல்ல!

    ReplyDelete
  57. தமிழன்,நீங்கள் ஒரு நாளுமே சொல்லப் போறதில்ல,கறுப்பு அசிங்கம் எண்டு.பிறகு எதுக்கு!

    ReplyDelete
  58. ஹேமா said...
    \\
    //இது என்ன ஹேமா...?!//

    தமிழன் என்ன சொல்றீங்கள்.விளங்கேல்ல!

    \\
    சின்னப்பிள்ளைத்தனமா எண்டு சொல்ல வந்தேன்- :) கறுப்பாயிருக்கிறவர்கள் அற்புதம் நிறைந்தவர்கள்...!

    ReplyDelete
  59. Black is beautiful Hema,it is a known thing.All of us have really concern for u.

    ReplyDelete