Monday, December 15, 2008

என்னடா நீ...!

அவகாசங்கள் தந்திருக்கிறேன் உனக்கு.
தருணங்களைத் தாரை வார்த்துவிட்டு
ஒன்றுமே தெரியாதவன்போல்
அண்ணாந்து வானத்துத் தாரகைகளோடு
கதைபேசியபடி நீ.
பிறகு எதற்கு நான் உனக்கு.
கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
உன்னை நான்.

சொல்...முதலில் சொல்
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்.
ஒரு போதுமே சொன்னதில்லை
இத்தனை காலங்களில் ஒருமுறையாவது.
முத்தத்தின் சத்தத்தால்
என் அறை நிரப்பும் உனக்கு
என் செவிப்பறை புகுந்து
அன்பே என்று சொல்ல மட்டும்
தயக்கம் ஏன்?

அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
முட்டி மோதி...முட்டி மோதி
மீண்டும் மீண்டும் முனையும் அலையாய்
மனதைத் தந்தவன் நீதானே!

கண்ணுக்குள் கண்டதில்லை உன் காதலை.
கடதாசியில் கண்டதில்லை உன் காதலை.
வார்த்தைகளில் பார்த்ததில்லை.
வரும் குறும் செய்திகளிலும் வருவதில்லை.
என்றபோதும்...நீ
என்னை விட்டு விலகியதும் இல்லை.

காதலின் மொழி தெரியாத
மூடனா நீ...முட்டாளா நீ.
அன்பே...
நீ மட்டும்
இதய இருட்டறைக்குள்
தனியாய் பேசிக்கொண்டால்
எட்டுமா என் செவிவரை.

இனியவனே சொல்.
இனியாவது சொல்.
என் செவியோடு ஒரு முறை சொல்.
நீயே என் இதயம் எனச் சொல்.
நீயே என் உயிரடி என்று சொல்.
சொல்லிவிடு என் செல்வமே.

இதயக் கூட்டைவிட்டு
என் பிராணன் பிரியும் முன்
சொல்லிவிடு.
பிரியமானவனே காத்திருக்கிறேன்.
காத்திருப்பின் அவகாசங்களும்
சில சமயம் தூரமாக முன்!!!

(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்.சொல்லுங்கோ...எங்க போய் நான் முட்டிக்கொண்டு அழ!)

ஹேமா(சுவிஸ்)

63 comments:

  1. Fantastic.You have played with words like anything Hema.

    ReplyDelete
  2. கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    :)...

    ReplyDelete
  3. கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான

    ReplyDelete
  4. மெய் சிலிர்த்து போனேன்!!!

    ReplyDelete
  5. அக்கா..


    இந்தப் பக்கம் வரவே பயமாயிருக்கு..

    ReplyDelete
  6. கருப்பு பேக்கிரவுண்டுல ரத்த நிறத்தில வார்த்தைகள்..

    யம்மா................

    ReplyDelete
  7. நீங்க நீலாம்பரி கோஷ்டியா.........

    ReplyDelete
  8. //காதலின் மொழி தெரியாத
    மூடனா நீ...முட்டாளா நீ.
    அன்பே...
    நீ மட்டும்
    இதய இருட்டறைக்குள்
    தனியாய் பேசிக்கொண்டால்
    எட்டுமா என் செவிவரை.//

    விழிகளின் மொழிகள் புரிந்துவிடின் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

    ReplyDelete
  9. //கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.//

    ரொம்ப தீவிர(வாத)மான காதலா இருக்கும் போல இருக்கே...?

    ReplyDelete
  10. //இதயக் கூட்டைவிட்டு
    என் பிராணன் பிரியும் முன்
    சொல்லிவிடு.
    பிரியமானவனே காத்திருக்கிறேன்.
    காத்திருப்பின் அவகாசங்களும்
    சில சமயம் தூரமாக முன்!!!//

    அருமை...கவிதை அழகா இருக்கு ஹேமா...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. //இனியவனே சொல்.
    இனியாவது சொல்.
    என் செவியோடு ஒரு முறை சொல்.
    நீயே என் இதயம் எனச் சொல்.
    நீயே என் உயிரடி என்று சொல்.
    சொல்லிவிடு என் செல்வமே.///

    இந்த வரிகள் அருமை.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  12. \அவகாசங்கள் தந்திருக்கிறேன் உனக்கு.
    தருணங்களைத் தாரை வார்த்துவிட்டு
    ஒன்றுமே தெரியாதவன்போல்
    அண்ணாந்து வானத்துத் தாரகைகளோடு
    கதைபேசியபடி நீ.
    பிறகு எதற்கு நான் உனக்கு.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.\\

    டெரர்ரா இருக்கு

    ReplyDelete
  13. \\சொல்...முதலில் சொல்
    நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்.
    ஒரு போதுமே சொன்னதில்லை
    இத்தனை காலங்களில் ஒருமுறையாவது.
    முத்தத்தின் சத்தத்தால்
    என் அறை நிரப்பும் உனக்கு
    என் செவிப்பறை புகுந்து
    அன்பே என்று சொல்ல மட்டும்
    தயக்கம் ஏன்?\\

    அட்றா அட்றா

    கலக்கல்ஸ் ஹேமா ...

    ReplyDelete
  14. \\காதலின் மொழி தெரியாத
    மூடனா நீ...முட்டாளா நீ.
    அன்பே...
    நீ மட்டும்
    இதய இருட்டறைக்குள்
    தனியாய் பேசிக்கொண்டால்
    எட்டுமா என் செவிவரை.


    இனியவனே சொல்.
    இனியாவது சொல்.
    என் செவியோடு ஒரு முறை சொல்.
    நீயே என் இதயம் எனச் சொல்.
    நீயே என் உயிரடி என்று சொல்.
    சொல்லிவிடு என் செல்வமே.\\

    அருமையான காதல்

    சற்றே மிரட்டும் காதல்

    காதல் அதிகமானதால் வரும் மிரட்டல்

    ReplyDelete
  15. \\இதயக் கூட்டைவிட்டு
    என் பிராணன் பிரியும் முன்
    சொல்லிவிடு.
    பிரியமானவனே காத்திருக்கிறேன்.
    காத்திருப்பின் அவகாசங்களும்
    சில சமயம் தூரமாக முன்!!!\\

    அழுத்தமான காதல்

    ReplyDelete
  16. \\ஹேமா(சுவிஸ்)\\

    இது இன்னா...

    ReplyDelete
  17. வாங்க முனியபன்.இங்க பாருங்க எல்லாரும் என்னைத் திட்டுறாங்களா இல்லாட்டி...

    அது இருக்க இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்.சொல்லுங்க முனியப்பன் எங்க போய் நான் முட்டிக்கிட்டு அழ?

    ReplyDelete
  18. கவின் ஒண்டும் விளங்கேல்ல.என்ன நடந்தது உங்களுக்கு.நல்லாத்தானே இருந்தீங்க போன கிழமை.என்ன...
    கொலை வெறியா இப்பிடி...!

    ReplyDelete
  19. இரவீ வாங்க.கொஞ்சம் அன்பா ஒரு கவிதைதானே பதிவில் போட்டேன்.
    நீங்க என்னடான்னா மெய் சிலிர்க்குதுன்னு சொல்றீங்க.சுரேஷ் பயமாயிருக்குன்னு சொல்றார்.ஒண்ணுமே புரிலயே.

    ReplyDelete
  20. வாங்க வாங்க SUREஷ்.யாருங்க அந்த நீலாம்பரி?ஏன் கறுப்புப் பிடிக்கலயா?எனக்குப் பிடிக்குமே.என்ன செய்ய நான்!அது சிவப்பு இல்லங்க சுரேஷ்.கொஞ்சம் வேற கலர்.

    அடிக்கடி வந்து போங்க பயமில்லாம.
    நான் ஒண்ணுமே பண்ணமாட்டேன்.
    கலர்தான் அப்பிடி இப்பிடி.
    கவிதைகளுக்காவது கருத்துச் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  21. புதியவன் வாங்க.ரொம்ப...
    ரொம்ம்ம்ம்ப தீவிரமான காதல்தான்.ஆனாலும் மிரட்டலுக்கும் அசராத காதலாய் இருக்கே.புதியவன்
    "கண்ணுக்குள் கண்டதில்லை உன் காதலை."சொல்லியிருக்கிறேனே.
    பிறகெப்படி விழிகள் மொழிகள் பேசும்.கொஞ்சம் கஷ்டம்தான் என்ன?

    ReplyDelete
  22. என்னுயிர் தோழி என் தமிழ் தோழி வாங்க.சொல்லவே ஆசையாய் இருக்கு தோழின்னு சொல்ல.முதல் வருகைக்கு சந்தோஷம்.திட்டாம நல்ல கருத்துக்கு நன்றி.அடிக்கடி வந்திட்டு போங்க.

    ReplyDelete
  23. ஹா..ஹா. அருமை.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. ஜாமால் ஜமாய்க்கிறீங்க நீங்களும்.
    அசத்தலான காதல்தான்.
    மிரட்டலான் காதல்தான்.
    அழுத்தமான காதல்தான்.
    ஆனா எதுக்கும் அசையாத காதலாய் இருக்கே.இப்பிடி மிரட்டியும் ஒரு பிரயோசனமும் இல்லையே.
    என்னதான் செய்ய நான்!

    ReplyDelete
  25. வண்ணத்துப்பூச்சியாரே வந்தாலும் வந்தீங்க முதன் முதலா.எதுக்கு இப்பிடி அட்டகாசமான சிரிப்பு ஒண்ணுமே சொல்லாம!

    ReplyDelete
  26. //காதலின் மொழி தெரியாத
    மூடனா நீ...முட்டாளா நீ.
    அன்பே...
    நீ மட்டும்
    இதய இருட்டறைக்குள்
    தனியாய் பேசிக்கொண்டால்
    எட்டுமா என் செவிவரை//

    :)))))))))) எல்லாரும் இப்படித் தான் போல :))))))
    என்னத்த சொல்லி...
    :)))))))))

    பளார்ன்னு ஒரு அறை விடலாமான்னு தோணும்... :)))))))

    ஆனால் கொலை ...? :shaking: வேணாம் பாவம் :D

    ரொம்ப ரசிச்சேன் உங்கள் பதிவை :)

    ReplyDelete
  27. //இனியவனே சொல்.
    இனியாவது சொல்.
    என் செவியோடு ஒரு முறை சொல்.
    நீயே என் இதயம் எனச் சொல்.
    நீயே என் உயிரடி என்று சொல்.
    சொல்லிவிடு என் செல்வமே.
    ///


    கண்டிப்பா சொல்லுவாரு!



    ஆனால் கொலை ...? வேணாம் பாவம் ப்ளீஸ்....!
    :)

    ReplyDelete
  28. முத்தத்தின் சத்தத்தால்
    என் அறை நிரப்பும் உனக்கு
    என் செவிப்பறை புகுந்து
    அன்பே என்று சொல்ல மட்டும்
    தயக்கம் ஏன்?//


    ஒரு பெண்ணின் மனதினுள் இத்தனை பூகம்பப் பேரதிர்வா?? ம்.....கவிதை அனலாய் மனதைச் சுடுகிறது. ஏன் அதன் பொருள் புரிய வேண்டியவருக்கு மட்டும் புரியவில்லையோ தெரியாது.... தொடருங்கள் ஹேமா

    ReplyDelete
  29. //கொஞ்சம் அன்பா ஒரு கவிதைதானே பதிவில் போட்டேன்.
    நீங்க என்னடான்னா மெய் சிலிர்க்குதுன்னு சொல்றீங்க.சுரேஷ் பயமாயிருக்குன்னு சொல்றார்.ஒண்ணுமே புரிலயே.//

    மிக அழுத்தமான வரிகள், வலி(ளி)மையான வார்த்தைகள் , ஆழ்ந்த கருத்துக்கள் - வெளிப்படையாக முகமருகில் முகரும்போது - மெய் சிலிர்ப்பது இயல்பென நினைக்கின்றேன்.

    ReplyDelete
  30. ஆனந்த்,என்னா..... உங்களுக்கும் கிண்டலா?

    ReplyDelete
  31. இதயத்தின் வலிகள் வார்த்தைகளாக... கொட்டும் அருவியாக கவிதையாக தந்து இருக்கிறீர்கள். என்ன சொல்ல இந்த கவிதைக்கு ஒண்ணுமே புரியல.

    //
    அவகாசங்கள் தந்திருக்கிறேன் உனக்கு.
    தருணங்களைத் தாரை வார்த்துவிட்டு
    ஒன்றுமே தெரியாதவன்போல்
    அண்ணாந்து வானத்துத் தாரகைகளோடு
    கதைபேசியபடி நீ.
    பிறகு எதற்கு நான் உனக்கு.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    //

    ஏன் இப்படி ஹேமா?

    //
    சொல்...முதலில் சொல்
    நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்.
    ஒரு போதுமே சொன்னதில்லை
    இத்தனை காலங்களில் ஒருமுறையாவது.
    முத்தத்தின் சத்தத்தால்
    என் அறை நிரப்பும் உனக்கு
    என் செவிப்பறை புகுந்து
    அன்பே என்று சொல்ல மட்டும்
    தயக்கம் ஏன்?
    //
    உங்கள் காதலர் மவன மொழியில் காதலை சொல்கிறhர் என்று நினைக்கிறேன். பாவம் அவர். பயம் காட்டாதீர்கள்.
    //

    கண்ணுக்குள் கண்டதில்லை உன் காதலை.
    கடதாசியில் கண்டதில்லை உன் காதலை.
    வார்த்தைகளில் பார்த்ததில்லை.
    வரும் குறும் செய்திகளிலும் வருவதில்லை.
    என்றபோதும்...நீ
    என்னை விட்டு விலகியதும் இல்லை.
    //
    இது போதுமே... உங்களின் காதலை இதயத்தில் கோவிலாக கட்டி வைத்திருக்கிறhர் என்று.
    //

    காதலின் மொழி தெரியாத
    மூடனா நீ...முட்டாளா நீ.
    அன்பே...
    நீ மட்டும்
    இதய இருட்டறைக்குள்
    தனியாய் பேசிக்கொண்டால்
    எட்டுமா என் செவிவரை.
    //
    இதயத்துக்கு எட்டுமே என்று நினைத்திருப்பார்.
    //

    இதயக் கூட்டைவிட்டு
    என் பிராணன் பிரியும் முன்
    சொல்லிவிடு.
    //
    அது எப்படி பிரியும் ஹேமா. உங்கள் இதயம் உங்கள் அவரிடம் சென்று விட்டதே.
    இப்படியெல்லாம் கவிதை எழுதி எல்லோரையும் பயமுறுத்ததீங்க சகோதிரி.

    ReplyDelete
  32. Hi kuzhanthainila,

    Congrats!

    Your story titled 'என்னடா நீ...! ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th December 2008 07:27:21 PM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/18949

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  33. ஆனந்த்,சும்மா..சும்மா.எல்லாம் வெருட்டுத்தான்.ஆனாலும் பாருங்க சொல்ல வெட்கமாயிருக்காம்.என்ன செய்ய நான்.மனசுக்குள்ள பேசினா எனக்கு புரியுமா?ஆனந்த்,இதயம் என்னிடம் இல்லை என்கிற நம்பிக்கையில்தான் அடம் பிடிக்கிறார்.
    அவருக்குத் தெரியும் அவரைக் கேட்காமல் என் உயிர் போகாது என்று.என்றாலும் சொல்லாட்டிக் கொலைதான் விழும்.(ஆனந்த் சும்மா...சும்மா)

    ReplyDelete
  34. வாங்க சக்திபிரபா.முதன்முதலா வரும்போதே வழக்கோடுதான்.எல்லா இடமும் இதே பிரச்சனைதானா! நான் என்வீட்டில் மட்டும்தான் என்று நினைத்தேன்.சரி...பயமுறுத்தியாவது பார்ப்போம்.

    ReplyDelete
  35. ஆயில்யன்,எங்க சொல்றார் அவர்?நானே வெட்கமில்லாமல் தொலைபேசி அட்டை 3-4 மணித்தியாலங்கள் செலவழித்துக் கேட்டாச்சு.ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்...
    ம்ம்ம்.இவ்வளவும்தான்.
    வெட்கமாயிருக்காம்.அப்போ?

    என் பெயர் சொல்லி நான் கேட்டதில்லை.எப்படி என்னைக் கூப்பிடுவார் எனக்கும் தெரியவில்லை.

    ReplyDelete
  36. திரும்பவும் வாங்க இரவீ.இங்க பாருங்க.வீட்லயும் பின்னூட்டத்திலயும் ஒரே சலசலப்பு.அவர் என்னமோ அப்பிடியேதான்.ம்ம்ம்...

    ReplyDelete
  37. கமல்,விடமாட்டேன்.போராட்டம்தான்.கொஞ்சம் கை குடுங்கோ.
    மசியமாட்டாராம்.மிஞ்சி மிஞ்சி போடி லூசு என்கிறார்.இது சரியா?

    ReplyDelete
  38. கடலை சுழற்றி காற்று வாங்க ஆசை,
    புறப்பட்டது புயலெனில்... அமைதி அதன் அறிவிப்பு.

    ReplyDelete
  39. இரவீ,நீங்களும் அவர் பக்கம்தான்.
    இங்க வந்த ஒரு சிலரைத் தவிர எல்லோருமே ஆண்கள்தானே.
    எல்லாருமே அவருக்குத்தான் பாவம்ன்னு சொல்லிட்டு போயிருக்கீங்க.என் கவலையை யாரும் புரிஞ்சுக்கவே இல்ல.

    ReplyDelete
  40. //ஹேமா(சுவிஸ்)//

    //இது இன்னா...//

    ஜமால் நீங்க என்ன கேட்டிருக்கீங்கன்னு புரியல!

    ReplyDelete
  41. புடிச்ச முயலுக்கு நாலு காலுன்னு அடம் புடிக்கறீங்க...

    ReplyDelete
  42. இரவீ,முயலுக்கு நாலு கால்தானா.
    மூணு கால் இல்லியா?

    ReplyDelete
  43. ஹேமா, இப்பதான் தெளிவா இருக்கீங்க.

    ReplyDelete
  44. இரவீவீவீவீவீவீ....

    ReplyDelete
  45. Everyone is in prize for u Hema.pl visit my post Kaathal postmortem. Your person will speak to you soon.

    ReplyDelete
  46. முரட்டுக் காதல் ஈடேறும், கவலை வேண்டாம் ஹேமா!

    ReplyDelete
  47. ஹேமா,
    "கொண்ணிட்டீங்க போங்க" என்று வாழ்த்துவது இதனாலோ. காத்தலும் சுகமே அது கிடைக்குமாயின்.
    *//இதயக் கூட்டைவிட்டு
    என் பிராணன் பிரியும் முன்
    சொல்லிவிடு//*
    அவன் காதலிக்கின்றேன் சொல்லியிருந்தால் இந்தக் கவிதை மெளனித்திருக்கும். உங்கள் கவியை இரசிக்கின்றார் போலும்.

    ReplyDelete
  48. ஈழவன் வாங்கோ.வாழ்த்துப் பலிக்கட்டும்.அதென்ன முரட்டுக் காதல்.விள்ங்கேல்ல.ம்ம்ம்....

    ReplyDelete
  49. காரூரன்,"கொண்ணீட்டீங்க போங்க"அபார கற்பனைதான் போங்க.அவரின் மௌனத்தில்தானே இந்தக் கவிதை பிறந்திருக்கிறது.
    அவருக்கும் நன்றி.கருத்துச் சொன்ன உங்களுக்கும் கூட.

    ReplyDelete
  50. //பிறகு எதற்கு நான் உனக்கு.
    கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    உன்னை நான்.
    //

    ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் :)

    ReplyDelete
  51. //(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்.சொல்லுங்கோ,எங்க போய் நான் முட்டிக்கொண்டு அழ!//

    அவக நெஞ்சில தான் !!

    ReplyDelete
  52. கவிதை ரொம்ப அழகா இருக்கு.. இந்த மாதிரி இன்னும் நிறைய எழுதுங்க :)

    ReplyDelete
  53. \\கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
    இனியவனே சொல்.
    இனியாவது சொல்\\

    உணர்வுகளின் உண்மை நிலவரம்

    நல்லா இருக்கு

    ReplyDelete
  54. பூர்ணி,வாங்கோ வாங்கோ.
    பூர்ணி,கேட்டுப் புரியாத அவரும் சுவரும் ஒன்றுதான்.முட்டி அழச் சுவர்தான்.வேற வழி...?

    ReplyDelete
  55. பூச்சிபாண்டி,உண்மைகள் உணர்வோடுதான் எப்போதும்.நன்றி.

    ReplyDelete
  56. (இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்)

    ippadi patta kathalanai koalai seiya thyangave vendam

    ReplyDelete
  57. அச்சோ...காயத்திரி.முதல் வருகையிலே மேடரா.வேண்டாம் பாவம் விட்டிடுவோம்.கொஞ்ச நாளைக்குப் பொறுமையோட பார்ப்போம்.என்ன செய்றார் என்று.நன்றி.

    ReplyDelete
  58. //ஹேமா said...
    பூர்ணி,கேட்டுப் புரியாத அவரும் சுவரும் ஒன்றுதான்.முட்டி அழச் சுவர்தான்.வேற வழி...?
    //

    ஹேமா,
    “சுவரை வைத்து தான் சித்திரம் வரைய முடியும்” என்பது நமது முன்னோர்களின் அனுபவ மொழி ... இப்ப நீங்க கவிதை வரையறீங்க...

    பூர்ணி, என்ன கூட்டணியா? ஓர் அப்பாவிய - கொலை - கொள்ளைனு மிரட்டிக்கிட்டு இருக்காங்க - கேக்க மாட்டீங்களா ...

    ReplyDelete
  59. இரவீ,என்னைக் கவுக்கிறதுக்குன்னே இருக்கீங்க.இதில வேற துணைக்கு மத்தவங்களையும் கூப்பிடுறீங்க.
    ஐயோ...ஓ...கவிதை எழுதுற சுவரே அவர்தானோ!

    ReplyDelete
  60. நீங்க நிஜமாகவே ரெம்ப தான் மிரட்டி விட்டீர்கள்!! பாவம்!! பிறகு எப்படி அன்பாய் பேசுவார்!! அன்பாய் சொல்லி பாருங்கள் அனுசரைனையான பதில் வரலாம்!!

    ReplyDelete
  61. வாங்க இசக்கிமுத்து.உங்ககூடவும் நான் டூ.நீங்களும் அவர் பக்கம்தானே!

    ReplyDelete