Friday, December 12, 2008

ஏன்...

சுமந்து சுமந்து
முதுகுதான் கூனியதே
தவிர....
காவுதலும்... இறக்குதலும்
குறைந்தபாடாயில்லை
களைத்துவிட்டேன்.
இனியும் முடியாது.
ஓடுதலும்... ஒளிதலும்
எத்தனை காலங்கள்தான்
இப்படி?

யார் கலைக்கிறார்கள்
ஏன் ஓடுகிறோம்
என்று தெரியாமலேயே
ஓடுதல் மட்டும்
சிலசமயம்
ஆமையாகவும்...
சிலசமயம்
முயலாகவும்...

சம்பந்தமேயில்லை
எனக்கும் அரசியலுக்கும்.
விடிந்தால்
வேலை.....கூலி
அன்றைய வயிற்றுப்பசி
என் பிழைப்பு.

குண்டும் குழியுமான
எங்கள் தெருக்கள்
போல
நீண்டு கொண்டே
நகர்கின்றன
வருடங்கள்.
தவிர...
எம் அரசியல் மட்டும்
பேச்சோடும்
வார்த்தையோடும்
மட்டும்தான்
எப்போதும்.

எப்போது....
காவுதலும்... இறக்குதலும்
ஓடுதலும்... ஒளிதலும்
இல்லாமல் போகும்.
களைப்பாயிருக்கிறது.
இன்னும் நான்
புரியாமலேயே
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)21.01.2007

24 comments:

  1. \\எப்போது....
    காவுதலும்... இறக்குதலும்
    ஓடுதலும்... ஒளிதலும்
    இல்லாமல் போகும்.
    களைப்பாயிருக்கிறது.
    இன்னும் நான்
    புரியாமலேயே
    ஓடிக்கொண்டேயிருக்கிறேன்!!!\\

    அருமையான வெளிப்பாடு.

    ReplyDelete
  2. நெஞ்சை கனக்கும் வரிகள்... இலங்கையில் நெஞ்சுடைந்து மனதலவில் இறந்துவிட்ட நம் முதியவர்கள் படுபாட்டை உங்கள் கவிதை கண்ணீர் சிந்தி வெளிபடுத்துகிறது... விடிவு காலம் பிறக்கட்டும்...

    ReplyDelete
  3. இவ்வுலக வாழ்க்கை நமக்கு அளித்து எது என்று இன்னும் புரியாமல் இருக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் . நீ சிந்திக்க தொடங்கிவிட்டாய் .

    ReplyDelete
  4. ஒரு பொருளினூடாக இரு கருத்தைப் பூடகமாகச் சொல்லியுள்ளீர்கள். ம்,,,,பூத்த கொடி பூங்குருவி தவிக்கின்றது......

    ReplyDelete
  5. யதார்த்தமான வரிகள், நமக்கு கீழேயுள்ளவர்களை பார்த்தால் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.

    ReplyDelete
  6. வார்த்தைகளில் வலிகள் தெரிகின்றன

    ReplyDelete
  7. ஜமால் நன்றி உடனடி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  8. வாங்க விக்கி.விடியலுக்காய் காத்திருக்கிறோம்.இருண்ட மனம் கொண்டவர்களால் ஈழத்தமிழர் வாழ்வு இருண்டே கிடக்கிறது.
    விடியும்...விடியும்.

    ReplyDelete
  9. வணக்கம் வாங்க பூச்சிபாண்டி.முதல் கருத்தே சிந்தனைத் தூண்டலாய் இருக்கிறது.மனிதன் சரிவரச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இல்லாமல் போய்விடுமே!

    ReplyDelete
  10. நன்றி முனியப்பன்."ஏன்"என்கிற கேள்விக்குள் எத்தனையோ எங்கள் விடையில்லா வேதனைகள்.

    ReplyDelete
  11. பிரபா,வலியில்லா ஈழத்தமிழன் யார் சொல்லுங்கள்.ஒருசிலரைத் தவிர!

    ReplyDelete
  12. காரூரன்,எங்கள் ஊரைப்பற்றி யதார்த்தமாய் சிந்தித்தால் வாழ்க்கையே வெறுப்பாயிருக்கிறது.

    ReplyDelete
  13. நண்பரே!
    சுவிஸ் நாட்டில்
    இருந்தாலும்
    சுயவிபரத்தில்
    சொந்த ஊரைப்
    போட்டிருக்கிறீர்கள்!!!
    பாராட்டுகிறேன்!

    ReplyDelete
  14. ஏன்?
    கேள்விகளுக்கு விடையாய் மேலும் கேள்விகள்...
    //யார் கலைக்கிறார்கள்
    ஏன் ஓடுகிறோம்
    என்று தெரியாமலேயே
    ஓடுதல் மட்டும்
    சிலசமயம்
    ஆமையாகவும்...
    சிலசமயம்
    முயலாகவும்...
    //
    சில சமயம் முயலாமையும் கூட....
    //எம் அரசியல் மட்டும்
    பேச்சோடும்
    வார்த்தையோடும்
    மட்டும்தான்
    எப்போதும்//
    அதைக்கூட நிறுத்திவிட யோசிக்க வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்..

    'காவுதல்' என்றால் என்ன ஹேமா?
    ஓடுதலும், ஒளிதலும் மட்டுமே வாழ்க்கையாய்...ஒவ்வொருவருக்கும் வித விதமான ஓடுதல்கள், ஒளிதல்கள்....
    நான் பல சமயம் பொய்களுக்குப் பயந்து ஓடுகிறேன்...
    சில சமயம் பொய்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன்...
    மன்னிக்க தங்கள் கவிதையை இன்னும் பொதுப் படுத்திய்தற்கு....

    ReplyDelete
  15. நன்றி தேவா.அடிக்கடி வாங்கோ.

    ReplyDelete
  16. இது தான் எம்மவரின் யதார்த்த நிலை ஹேமா, ஆனால் இம் ஏழைகள் வாழ்வை எதற்காகவோ அரசியலாக்கிப் பார்க்கின்றார்கள்!

    //சம்பந்தமேயில்லை
    எனக்கும் அரசியலுக்கும்!
    விடிந்தால் வேலை.....
    கூலி அன்றைய வயிற்றுப்பசி
    என் பிழைப்பு.//

    ReplyDelete
  17. கவிதை மிக அருமை ஹேமா

    ..ஏன் என தெரியாத நிலையை மிக அருமையாக படம் பிடித்து விட்டீர்கள் கவிதையில் ..

    ஒவ்வொரு வரிகளும் உணர்வுகளை சொல்லி செல்கிறது ..

    களைப்பு தோன்றியும்
    ஓடும் வாழ்கை
    எதற்கு ஓடுகிறோம் என தெரியாமல் ..

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  18. பேச்சு வராமல் திகைப்பதை அனுபவித்திருக்கிறேன்...
    இன்று வடிக்க வார்த்தை வரவில்லை.

    ReplyDelete
  19. வாங்கோ தமிழ்பறவை அண்ணா.
    எங்கள் இயலாமையை முயலாமை என்று சொல்லிக் காட்டியிருக்கிறீர்கள்.
    உண்மைதான்.

    காவுதல் என்றால் கொண்டு போதல், சுமத்தல் என்று பொருள் படும்.

    //நான் பல சமயம் பொய்களுக்குப் பயந்து ஓடுகிறேன்...
    சில சமயம் பொய்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன்...//
    நீங்கள் சொல்வதும் சரிதானே!

    ReplyDelete
  20. ஈழவன் வாங்கோ.எங்கள் நாட்டைப் பொறுத்தமட்டில் கஷ்டமும் துன்பமும்,ஓடுதலுக்கும் ஒளிதலுக்கும் அகப்படுபவர்கள் பொதுமக்கள்தானே.
    அரசியல்வாதிகள்...!

    ReplyDelete
  21. விஷ்ணு வாழ்வே
    வலியாகிப்போய் கிடக்கிறோமே.
    வரிகளுக்கா பஞ்சம்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  22. வணக்கம் வாங்க இரவீ.நன்றி கருத்துக்கும் கூட,அடிக்கடி வாங்க.திகைக்காமல் கருத்தும் சொல்லுங்க.

    ReplyDelete