Saturday, July 26, 2008

இனியவன் நீ...


தென்றலாய் தொட்டாய்
புயலாய் தாக்கினாய்.
மறக்க நினைக்கிறேன்
மூச்சுக் காற்றுக்குள்ளும்
சுவாசமாய் நீ....தானே!

தன் உடம்பின்
பாரத்தை விடக்
கூடிய பாரத்தைச்
சுமக்குமாம் எறும்பு.

கையளவு இதயத்துள்
உன்னைச்
சுமக்கிறேனே நான்.

மறக்க நினைக்கும்
போதுதானே தெரிகிறது
உன்னை நான்
நேசிப்பதின் ஆழம்.

உறங்க மனமில்லை
நினைவில் நீ...

உறங்கினால்
விழிக்க மனமில்லை
கனவில் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. ///மறக்க நினக்கும்
    போதுதானே தெரிகிறது
    உன்னை நான்
    நேசிப்பதின் ஆழம்.///

    ம்ம்ம்...

    ReplyDelete
  2. \\\
    உறங்க மனமில்லை
    நினைவில் நீ...
    உறங்கினால்
    விழிக்க மனமில்லை
    கனவில் நீ!!!
    ///

    இருக்கலாம் இருக்கலாம்...

    ReplyDelete
  3. ///
    உறங்க மனமில்லை
    நினைவில் நீ...
    உறங்கினால்
    விழிக்க மனமில்லை
    கனவில் நீ!!!
    ///

    அழகு வரிகள் ஹேமா...

    ReplyDelete
  4. ///"இனியவன் நீ..."///

    அது சரி யாரது...:)

    ReplyDelete
  5. வணக்கம் தமிழன்.நிறைய நாளுக்குப் பிறகு இந்தப் பக்கம்.என்றாலும் நிறையவே கவனித்துக் கருத்துத் தெரிவித்து இருக்கிறீர்கள்.
    நன்றி.அடிக்கடி வாங்கோ...

    //அது சரி யாரது...//
    சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.இப்போதைக்குச் சொல்லமாட்டேன்!!!

    ReplyDelete
  6. Hi kuzhanthainila,

    Congrats!

    Your story titled 'வானம் வெளித்த பின்னும்.......: இனியவன் நீ...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th July 2008
    01:40:55 AM GMT

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  7. மறக்க நினைக்கும்
    போதுதானே தெரிகிறது
    உன்னை நான்
    நேசிப்பதின் ஆழம்.

    ReplyDelete