Thursday, July 24, 2008
மாற்று உலகம்...
மனமாயை விட்டு அகல
மோன நிலை குடிகொள்ள
ஆனந்த சிருங்காரம்
அள்ளிப் பரவிக் கொட்டி நிரவி.
துயரங்கள் தூர்ந்து விட
துர்க்குணங்கள் தொலைந்துபோக
சந்தங்கள் சேர்த்து
சங்கீதம் கோர்த்து
சொர்க்கத்துள் நுழைவதாய்.
தேவர்கள் பன்னீர் தெளித்து
தேவதைகள் பூத்தூவி
தரிசனம் கணச் சொடுக்கில்.
தாயின் கருவில்
மீண்டும் உருப் பெற்று
பன்னீர்க்குடம் உடைத்து
ஜனனித்த நிமிடத்தைக்
கண் முன் வானவில்லாய்.
வானுக்கும் மண்ணுக்கும்
நூல் தொடுத்ததாய்
ஊஞ்சலின் வண்ணம்.
நதிகள் நகர்ந்து வந்து
காந்தர்வ மணம் புரிந்து கொள்ள
கடல் மீன்கள்
கல்யாணியின் ஸ்வரங்களுக்குள்.
மழை கூடத் தாழ்வாரம் ஒதுங்க
தூவானம் தாலாட்ட
நிலத்தாமரை நிர்வாணமாய்.
உலகம் புதிதாய் பிறப்பதாயும்
மனிதன் மிக மிக
அழகாய் தெரிவதாயும்.
பூக்கள் தலை ஆட்டுகிறது இசைவாய்.
எப்படி...எப்படி...எப்படி
இத்தனை சந்தோஷ உலகமா!
எங்கு... எப்படி...
இசை என்னும் உலகம்
பெரும் கடல்.
நுழைந்துவிட்டால்
இத்தனையும் கிடைக்கும் இலவசமாய்.
வா என் கூட நீயும்
ஓர் இசையாய்!!!
ஹேமா(சுவிஸ்
//தேவர்கள் பன்னீர் தெளித்து
ReplyDeleteதேவதைகள் பூத்தூவி
தரிசனம் கணச் சொடுக்கில்.
தாயின் கருவில்
மீண்டும் உருப் பெற்று
பன்னீர்க்குடம் உடைத்து
ஜனனித்த நிமிடத்தைக்
கண் முன் வானவில்லாய்.//
இனிமை...மனதின் மாய உலகத்தைப் படம் பிடிக்கும் முயற்சி திருவினையானதில் திருப்தி... இசை இல்லையேல் இம்சைதான்...
25 Jul 08, 19:54
ReplyDeleteAnbu Hema...Ungal Kavidhaigal Menmaiyagavum Ulladhu ... Aazhamanadhagavum Ulladhu...Ungal Valaipoo Manam Kavarhirathu...Vaazhthukkal.
Madhu
செவிக்கு உணவு கொடுத்துவிட்டால் வயிற்றுக்குக் கூட உணவு சிலசமயம் தேவைப்படாது.மன அமைதிக்கு ஒரு மருந்து.இசைக்கு இல்லை வேறு எதுவும் இணை.நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.
ReplyDeleteHi,மது ரசனைக்கு நன்றி.எங்கேயோ இருந்து கொண்டு அடிக்கடி காணமல்தான் போய்விடுகிறீர்கள்.
ReplyDeleteஅதுதான் கவலை.
இசை ஒரு மருந்து என்று சொல்வார்கள்...
ReplyDeleteஇசை எம் வாழ்வோடு பிணைந்திருக்கிற ஒன்று என்பது உண்மைதானே...!
\\\
ReplyDeleteவா என் கூட நீயும்
ஓர் இசையாய்!!!
///
அவன் அல்லது அவள் இல்லாமல் இசையா அதுதானே...:)
நல்ல வரிகள் ஹேமா...!
ReplyDelete