குழம்பிக் கிடக்கிறேன்.
என்னைச் சேர்த்துச்
சரியாக்கு.
கை கொடு கொஞ்சம்...
இப்போதைக்கு.
உன் கதகதப்பு
தேவையாய்
இருக்கிறது
கொஞ்சம்.
குளிர்ந்து கிடக்கிறேன்
உயிர்ச் சூடேற்று
நிலம்...உன் மனம்
நீர்....உன் அன்பு
காற்று...உன் மூச்சு
ஆகாயம்...உன் உடம்பு
நெருப்பு...உன் அணைப்பு
உயிர்கள் இயங்க
இவைகள் என்றால்
என்னை இயக்க
இனி...
நீ மட்டும்
எல்லாமுமாய்.
வார்த்தைகள்
வர மறுக்கிற
மெளனத்தின்
மெளனத்துக்குள்
உன்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
அமைதி...பேரமைதி
முற்றிலும் ...சூன்யம்
ஆனால் இன்பம்.
கருப்பாய்...கடலாய்
முகிலாய்...மரமாய்
உன் உருவம்தான்
எப்படி?
அதையெல்லாம்
தாண்டிய
உன் மனதை
மட்டும்
தேடியபடி நான்.
இப்போ...
தேடிக் கிடைத்திருக்கிறது
உன் மனம்.
என்னைக் காணாமலேயே
உனக்குள்
சிறைப் பிடித்து
வைத்திருக்கிறாய்.
கள்வனடா...நீ
புரியாத வார்த்தைகள்
தேடி...
திட்டித் தீர்த்துப்
போன நீயா
பூவின் இதழை விட
மென்மையாய் மாறி
என் மனம் தொட்டு...
என் பெண்மை தொட்டு...
கதை பேசுகிறாய்.
ஆண்மைக்குள்ளும்
தாய்மை
இதுதானோ!
கண்ணா...
காதலின்
இன்பம் நீயா
இல்லை...
நீயே காதலா...
கட்டி விட்டாய்
கட்டுண்டு கிடக்கிறேன்.
விட்டுப் போனால்
உயிர் விட்டுப்
போகுமோ...அன்பே
எதை நான்
எப்படிச் சொன்னாலும்
நீ வேணும்
என்பது மட்டுமே
உண்மை!!!
ஹேமா(சுவிஸ்) 19.05.2005
நன்று... சமூகக்கவிதைகளின் ஆழம் இதில் எனக்கு தென்படவில்லை(என்னைப் பொறுத்தவரை மட்டுமே..)
ReplyDeleteவாங்க தமிழ்ப்பறவை அண்ணா.எப்போதும் சமூகம்....அரசியல்.இடையிடை கொஞ்சம் மாற்றலுக்காய் காதலும் அப்பப்போ.
ReplyDeleteகறுப்பு ஆடி பற்றிய முக்கிய சில விடயங்கள்"கறுப்பு ஆடி" கவிதையின் பின்னூட்டத்தில் பார்த்தீர்களா?
கண்டேன்.கவலை கொண்டேன்...வலியை உணர்ந்தேன்...கையறுநிலையில் எம்மக்கள்..
ReplyDelete///
ReplyDeleteஎதை நான்
எப்படிச் சொன்னாலும்
நீ வேணும்
என்பது மட்டுமே
உண்மை.
///
காதல் அது சொற்களுக்குள் சிக்காத சுகம்தானே ஹேமா...
பாடுவோம் காதலையும்...
கொண்டாடுவோம்...!
படம் நல்லாருக்கு...!
ReplyDelete