அப்பா மன்னித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் டயரி வாசித்தேன்.
இளமைப் பதிவுகள் எத்தனையோ.
இருந்தும் கேள்வியாய் ஒன்று.
நீங்களும்...
ஆணாதிக்கச் சர்வாதிகாரியா அப்பா!
எங்களுக்கோ...
அம்மாவுக்கோ...
அறிவான ஒரு நண்பனாய்த்தானே நீங்கள்.
அதிகாரியாய்
எந்தச் சந்தர்ப்பத்திலேயும்
கண்டதேயில்லையே உங்களை நான்.
அன்புக்குக் கட்டுப் படாதவரா
என் அப்பா!
45 வருட உங்கள் தாம்பத்திய வாழ்வில்
ஒவ்வொரு வருடப் பதிவிலும்
"இன்றோடு தொலந்தது சனியன்...
இனித் தொடமாட்டேன் சத்தியமாய்...
ராசுக்குட்டிக்கு மேல்
சத்தியமாய் இனி இல்லை"
இப்படி...இப்படி.
சத்தியம் என்ன
சக்கரைப் பொங்கலா அப்பா!
அம்மாதான் பாவம்.
சிகரெட் நாத்தத்தோடு
எப்படித்தான்...குடும்பம்
நடத்தினாவோ உங்களோடு.
கண்டதுண்டு நானும்
வீடு தொடக்கம் கழிவறை வரை
சிகரெட் கட்டைகளும்
நெருப்புக்குச்சிகளும் குப்பையாய்.
தோள் தாண்டி
நாங்களும் ஆளாகி விட்டோம்.
விட்டதாயில்லை சிகரெட்டை.
எங்களின் கட்டுக்குள்தானே எதுவும்.
எப்படி சிகரெட்டின் கட்டுக்குள் நீங்கள்?
நீங்கள் புகைக்கும் போதெல்லாம்
அம்மாவின் கண்களும் புகையும்
அறிவீர்களா நீங்கள்.
ஆயுளைத்தானே உள்ளுக்கும்
வெளிக்குமாக இழுத்து ஊதியபடி.
அப்பா...
இன்னும் கொஞ்சக் காலம்
வேணும் எங்களுக்கு நீங்கள்.
அம்மாவுக்கு அடுத்ததாய்
வேண்டுகிறேன்.
இனிமேலாவது தொலையட்டும் சனியன்.
இமைகள் கண்களுக்கு
அழகு மட்டும் அல்ல அப்பா.
காப்பதற்காகவும் கூட!!!
ஹேமா(சுவிஸ்)
எத்தனை அப்பாக்களின் காதுகளில் இது விழும்.அப்பாக்களே கொஞ்சம் தயவு காட்டுங்கள்.அம்மாக்கள்தான் பாவம்.அவர்கள் தலை விதியை யார்தான் மாற்ற?
ReplyDeleteசுமதி
வணக்கம் சுமதி,வருகைக்கு நன்றி.ஓ...என் அப்பாவின் சிகரெட் கதை பெரிய கதை.அவரிடமுள்ள கெட்ட பழக்கம் இது ஒனறு மட்டும் தான்.எங்கள் அன்பான சிநேகிதன் அவர்.என்றாலும் சிகரெட் குடிக்கிறதுக்கு மட்டும் 1-2 தடவைகள் யாராவது சொன்னால் பக்கத்தில என்ன இருக்கோ அதைத் தூக்கிப் போட்டு உடைத்துவிட்டு நல்ல பிள்ளை போலப் பாட்டும் முணுமுணுத்துகொண்டு போய்விடுவார்.(கோவம் வந்துவிட்டதாம்.இனி யாராவது சிகரெட் பற்றிக் கதைக்கக் கூடாதாம்.வெருட்டு)அம்மாதான் பாவம்.அவவுக்குத்தான் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்பாவின் மீதும் அம்மாவின் மீதும் பாசமும், சிகரெட்மேல் உள்ள வெறுப்பும் புரிகிறது ஹேமா.
ReplyDelete