Wednesday, April 16, 2008

என்னதான் செய்ய நான்...

இப்போ எல்லாம்
மெளனமாய் இருக்கிறேன்
நான்.
நான்...
பேசியபோது
நீ...
மெளனமாய் இருந்ததால்.
நிறையவே பேசுகிறாய்
இப்போது-எல்லாம்
நீ...
தொலைத்துவிட்டுத்
தவிக்கிறேன்
உன்னை.
தவறுதான்....
என்...
தவிப்புக்களும்
ஏக்கங்களும்
என்...
வார்த்தைகளுக்குள்
குழம்பித் தவிப்பதை
கவனித்து இருக்கிறாயா.
நீ...எனக்குள்
பறந்து
கொண்டிருக்கிறாய்
உயிரோடு உரசியபடி.
பூட்டவும்
முடியவில்லை.
விட்டு விடவும்
முடியவில்லை.
என்ன
செய்ய நான்.
யாராவது
நினைத்தல் என்பது
தும்மல் என்றால்
நொடிக்கொருதரம்
தும்மிக்கொண்டேயிருப்பாய்.
எனக்கும்
தும்மல் வரும்
எப்போதாவது
நினைக்கிறாயா
என்னை
நீ...
குளிர்ந்து இறுகிக்
கிடக்கிறாய்
பனிக்கட்டியாய்
மனதுக்குள்.
வலிக்கிறது.
தடுக்கி விழுந்து
எழும்புகிறேன்.
வெளியில் தெரியாத
உள்
காயங்களோடு !!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

  1. உள்காயம் விரைவில் ஆறாது. உடம்பில் பட்ட காயம் ஆறிவிடும். மனதில் பட்ட காயம் ஆறாது.

    ReplyDelete