Tuesday, February 24, 2015

காலத்தின் நீட்சி...

நெறி கட்டிக்கொண்ட
தொண்டைக் குழிக்குள்
மண் வாசனை
விக்கி அடைத்துக்கிடக்க
எழுத்துக்களும் எண்ணங்களும்
வற்றிப்போன
நேற்றைய பின்னேரத்தில்
விசாரித்துக்கொண்டிருந்தான்
ஒருவன் என்னை.

நானோ...
உலகின் கடைசி மனுசியாய்
குந்தியிருந்த இடத்தையும்
கழுவித் துடைத்துவிட்டு
இறப்பில் செருகிய
காம்புச்சத்தகத்துத் தலைமுறைகளின்
வாசனையை மாத்திரம்
கலைத்துவிட முடியாமல்.

குற்றங்களை
குரூரங்களை
முனை முறியாப் பேனையால்
தீர்ப்புக்கள் எழுதியதை மறந்ததாய்
ஒரு தீர்ப்பை
ஒரே நொடியில்
தனக்கெனச் சாதாரணமாய்
எழுதி மடிக்கிறான்
அதே முனை முறிந்த பேனாவால்.

நொண்டியடித்த பயணங்களில்
மீண்டும் பயணிப்பது
மூட்டுவலியென உணராதவன்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

  1. வணக்கம்

    வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நொண்டியடித்த பயணங்களில்
    மீண்டும் பயணிப்பது
    மூட்டுவலியென உணராதவன்!!!

    அருமை அக்கா...

    ReplyDelete
  3. மனிதத் தீர்ப்பும்
    பேனா முனையும்
    நன்றே சுட்டும் வரிகள்
    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete