Sunday, January 11, 2015

பறக்கமுடியா நாளொன்றில்...

திண்மை அடைத்து
காற்றுவெளி மேவி
பொன்வண்டொத்த
சிறகையும் ஒட்டிவிட்டு
அடையாளத்திற்காய்
ஒற்றைக்கல் வைத்து
கால் மடித்து காத்திருக்கிறது
அந்த விநோதக் காற்று.

புதுப்பித்தல் பற்றிய
மரணித்த வாசகங்கள்
கொண்டு வந்த கானத்தில்
உப்பின் அடர்த்தி குறைத்து
பறக்க முயற்சிக்கிறது
ஒரு மோனரிதப் பூ.

என்றோ உதிர்த்துவிட்ட
சருகின் சப்தம்
விழிக்குள் நடுங்க
ஒடிந்த காம்பில்
அமைதியின் அடையாளம்.

பொன் வண்டொத்த அச்சிறகிற்கு
பூவுடன் பயிற்சியும் தரலாமென
அறிவிக்கிறது அவ்விநோதக் காற்று!!!

குழந்தைநிலாஹேமா(சுவிஸ்)

5 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஒடிந்த காம்பு வேதனைதான் என்றாலும் காற்று இனிய ராகங்களை உருவாக்குகின்றன. பூவிற்கு அப்படி என்னதான் பயிற்சி அளிக்கின்றன என எங்களுக்கும் சொல்லுங்க ஹேமா..

    ReplyDelete
  3. கவிதை அருமை.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_31.html


    ReplyDelete
  5. சுகமா ஹேமா?

    //என்றோ உதிர்த்துவிட்ட
    சருகின் சப்தம்
    விழிக்குள் நடுங்க
    ஒடிந்த காம்பில்
    அமைதியின் அடையாளம்.// சபாஷ்!

    ReplyDelete