Thursday, December 04, 2014

காற்றின் கால் தடம்...

நினைவோடு ஒட்டிக்கொள்கிறது
சவரம் செய்யாத
உன் முகம்
தலைதடவி
விரல் கோர்க்க
பேசிக்கொண்டே தூங்கிவிடுகிறாய்
பரஸ்பர பார்வையை
என் பக்கம் துளைத்தபடி.

நிராகரிப்பில்லாத
உன் புன்னகை வளைப்பில்
இழுபடும் என் இதயம்
வியர்வை வாசத்தில்
அமர்ந்துகொள்கிறது.

பேசும்போது
அடிக்கடி நீ
சொல்லிக்கொள்ளும்
'குட்டிம்மா'
ஆழ்மன நெரிசலில்
அமுங்கினாலும்
அழியாமல்
பதிகிறது
உன் விம்பத்தோடு.

கணங்களை
இன்றாக்கி
இனியாக்கி
இரவாக்கி
பின்
நாளையாக்கிச் சுருக்க
எதிலும் நீயென
உருகி உடைகிறேன்
நொடிக் கம்பிகளுக்கிடையில்.

கொத்து ரோஜாக்கொடியில்
சிறுகணம் தங்கும் தேனியென
இல்லாமல்
இறுக்கி அணைத்துக்கொள்ளேன்
உன் எழுத்துக்களைப்போல்
ஒரு சிறு கணத்தில்
அதுவாகிக்கொள்ள!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. பேசும்போது
    அடிக்கடி நீ
    சொல்லிக்கொள்ளும்
    'குட்டிம்மா'
    ஆழ்மன நெரிசலில்
    அமுங்கினாலும்
    அழியாமல்
    பதிகிறது
    உன் விம்பத்தோடு// காதலின் ஒர் உயிர் நிலை இதுதான் போலும்.

    ReplyDelete
  2. வணக்கம்
    அழகிய வரிகள் கற்பனை சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஆழமான வரிகள் ...அன்பின் அடையாளமாய் இந்த கவிதை ...

    ReplyDelete