Sunday, November 02, 2014

வேறு வேறாய்...

எனக்கு அசதியாய் இருக்கிறது
ஊற்ற ஊற்ற நிரப்பமுடியா
உன் காலிக் குவளை.

நடுங்கும் என் விரல் ரேகை
போதுமெனச் சொல்லா
நிறைவுறா
உன் நிழல்களில் பதிகிறது
பதற்றமாய்.

உதிர்ந்து விழும் விநாடிகளை
பெண்டூலம் உதற
விழுகிறோம் தனித் தனியாக.

அரவமற்ற பொழுதொன்றில்
காத்திருப்போடு
நுரையீரல் சுவர்களை
தட்டித் திறந்தவன்
நீயா இப்படி நிரம்பாமல்.

என்னை நிரப்பி
உன் கையிலேந்த விடுகிறேன்
ஒவ்வொரு துளியிலும்
கனத்தோடு.

கையூட்டில்
உதிரம் வடிந்தாலும்
சிதறாமல்
களவாடிய
முத்தங்கள் ஒளித்த
உதட்டு மடிப்போடு
பொருத்திக்கொள்.

நிரம்பிய துளி நான்
திரும்பிடப் போவதில்லை
இனி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. என்னை நிரப்பி
    உன் கையிலேந்த விடுகிறேன்
    ஒவ்வொரு துளியிலும்
    கனத்தோடு. // துளித்துளியாய் கசிகிறது மனசு

    ReplyDelete
  2. என்னை நிரப்பி
    உன் கையிலேந்த விடுகிறேன்
    ஒவ்வொரு துளியிலும்
    கனத்தோடு. // ரசிக்க வைத்த வரிகள்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  3. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  4. அருமையான கவிதை...
    வரிகள் ரசிக்க வைத்தன...

    ReplyDelete
  5. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. //என்னை நிரப்பி
    உன் கையிலேந்த விடுகிறேன்// மனசுகொஞ்ச நேரமாய் இந்த வரியை உச்சாடனம் செய்த படி.......... நல்ல கவிதை ஹேமா! வானவில் மனிதன் வரக் கூடாதென்று ஏதும் சபதமா?

    ReplyDelete