மூச்சிளைக்க
எதையோ உளறியபடி
போராடிக்கொண்டிருக்கிறது
அந்த நாய்
எதிர்வாதம் செய்யாத
அந்தத் தவளையுடன்.
ஆற்றுப்படுத்த
ஒரு மல்லுக்கட்டல் போதும்
அதற்கிப்போ.
இல்லை...
களேவர மனதை அடக்க
மெத்தெனெ
சிறு குறிப்பிசை.
மன்னிப்பின்
மன்றாட்ட
பிரதட்சணத் தாவல்.
அல்லது
பின்னடைவின் ஒடுக்கம்.
இல்லை
பெருங்கோபமடக்க...
ஒரு அடைமழைக்கான
கரகரப்பிரியாவும்
அமிர்தவர்ஷினியும்.
வாயால் கெடுவதே
அதன் விதியென்றால்
விடிவதற்கு
இன்னும் நேரமிருக்கிறது!!!
குழந்தைநிலா ஹேமா !
எதையோ உளறியபடி
போராடிக்கொண்டிருக்கிறது
அந்த நாய்
எதிர்வாதம் செய்யாத
அந்தத் தவளையுடன்.
ஆற்றுப்படுத்த
ஒரு மல்லுக்கட்டல் போதும்
அதற்கிப்போ.
இல்லை...
களேவர மனதை அடக்க
மெத்தெனெ
சிறு குறிப்பிசை.
மன்னிப்பின்
மன்றாட்ட
பிரதட்சணத் தாவல்.
அல்லது
பின்னடைவின் ஒடுக்கம்.
இல்லை
பெருங்கோபமடக்க...
ஒரு அடைமழைக்கான
கரகரப்பிரியாவும்
அமிர்தவர்ஷினியும்.
வாயால் கெடுவதே
அதன் விதியென்றால்
விடிவதற்கு
இன்னும் நேரமிருக்கிறது!!!
குழந்தைநிலா ஹேமா !
வணக்கம்
ReplyDeleteஅழகிய கற்பனையில் அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாயால் கெடுவதே அதன் விதியென்றால் விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது - சிந்திக்க வைக்கும் சொற்றொடர். அருமை...அருமை,
ReplyDeleteகவிதை அருமை சகோதரி....
ReplyDelete