பிரியம் என்பது
கைகளுக்குள் குவிந்த
உறையா
இப்பனியென
உனக்குள் உறைவது....
பிரியம் என்பது
பசிக்கும்
பதுங்கு குழிக்
குழந்தைக்கு
நிலாக்காட்டி
தூங்கவைப்பது....
பிரியம் என்பது
மழைக் குமிழியென
உடைந்தும்
ஓடியும்
மனதடங்காமல்
மிதந்துழல்வது....
பிரியம் என்பது
பசித்தாலும்
ஊட்டவியலா
தூரமுத்தம் போன்றது....
பிரியம் என்பது
ஊடலென
ஆயுதங்களை
நீட்டிக்கொண்டே
கட்டியும் கொள்வது....
பிரியம் என்பது
விடிகாலை
நாசி நுழையும்
தேநீர் போன்றது....
பிரியம் என்பது
அதிகபட்ச
விமர்சனங்களையும் தாண்டி
’சுகம்தானே நீ’என்பது....
குழந்தைநிலா ஹேமா !
கைகளுக்குள் குவிந்த
உறையா
இப்பனியென
உனக்குள் உறைவது....
பிரியம் என்பது
பசிக்கும்
பதுங்கு குழிக்
குழந்தைக்கு
நிலாக்காட்டி
தூங்கவைப்பது....
பிரியம் என்பது
மழைக் குமிழியென
உடைந்தும்
ஓடியும்
மனதடங்காமல்
மிதந்துழல்வது....
பிரியம் என்பது
பசித்தாலும்
ஊட்டவியலா
தூரமுத்தம் போன்றது....
பிரியம் என்பது
ஊடலென
ஆயுதங்களை
நீட்டிக்கொண்டே
கட்டியும் கொள்வது....
பிரியம் என்பது
விடிகாலை
நாசி நுழையும்
தேநீர் போன்றது....
பிரியம் என்பது
அதிகபட்ச
விமர்சனங்களையும் தாண்டி
’சுகம்தானே நீ’என்பது....
குழந்தைநிலா ஹேமா !
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரசிக்க வைத்த கவிதை...
ReplyDeleteஅருமை அக்கா...
ப்ரியம் ... பிரிய மறுக்கிறது கவிதையிநின்று...
ReplyDeleteப்ரியமான கவிதை..!
ReplyDelete