Tuesday, August 19, 2014

பறத்தலுக்குமுன்...

உச்சுக்கொட்டியபடி
என் உயிர் பிரிவதை
பார்க்கவென்று
காத்திருக்கிறாய்
எச்சிலைக்கூட
விட்டு வைக்காத
காட்டுக்குரங்குபோல
வீட்டு மூலையில்
புழுதியலம்பி.

சிலந்தி
தன்னைத்தானே சிக்கெடுக்க
போராடிக்கொண்டிருக்கிறது
பூனையும் நாயும்
கோழியும்
இரை தேடிக்கொண்டிருக்கும்.

பானையிலிருக்கும்
துக்கிணிப் பருக்கை
எனக்கேதான்
போதுமாயிருக்கிறது
போய்விடு.

துடக்குக்கழிக்க வாசலில்
துடைப்பமெடுத்து
வைத்துவிட்டேதான்
போயிருக்கிறார்கள்!!!

குழந்தைநிலா ஹேமா !

2 comments:

  1. துக்கிணிப்பருக்கை// எங்கள் ஊரில் இத்தணூண்டு என்றுதான் சொல்வார்கள். ஆமா.. எங்க பறந்து போயீட்டீங்க!!

    ReplyDelete
  2. "..துடக்குக்கழிக்க வாசலில்
    துடைப்பமெடுத்து.."
    அருமையான சொல்லடுக்கு
    நல்ல கவிதை

    ReplyDelete