Saturday, July 05, 2014

கரும்புலிகள் நாள்...

கருப்பொன்றும் இருட்டல்ல
கருப்புடையும்
வெள்ளை மனமுமாய்
நம்முள் வாழும்
வரலாற்றுத் தெய்வங்களின்
வண்ணமது.

கொள்ளையடிக்கும் மண்காக்க
வெந்து வெடித்தவர்
சிந்தும் சதையைக்கூட
சிநேகிதர்கூடக் காணாமல்
சொந்த மண்ணில்
சாம்பலோடு சங்கமித்தவர்.

ஈழம்தான் வாழ்வென்றார்
ஈழம்தான் கனவென்றார்
சாத்தான்களோ...
கனவுதான் ஈழமென்றார்
கனவுகளை ஒத்திவைத்தார்.

காலம் பதில் சொல்லும்
நமக்கும்
அவர்களுக்கும்.

கருப்புக் கடவுள்களை
நினைப்போம் தொழுவோம்
மறவோம் மூச்சுள்ளவரை!!!

ஹேமா(சுவிஸ்

4 comments:

  1. வணக்கம்
    உயிராயுங்களின் நினைவுபடுத்திய கவிதை மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உணர்வில் நிற்கும் பதிவு!
    நன்றி!

    ReplyDelete
  3. தலைவரை நினைவில் கொள்வோம்...
    நல்ல கவிதை...

    ReplyDelete