Thursday, July 24, 2014

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து...

சாபங்களைச் சுமந்துகொண்டே
சுகமாயிருப்பதாய்
சோடனைகள்.

வேர்களை அழிக்க
விஞ்ஞானத் தேடல்
நிழலில் நின்றுகொண்டே.

பலவீனமே பலமாகவும்
பலமே பலவீனமாகவும்
தைரியமில்லா
நாகரிகக் கோமாளிகள்.

எதுவானபோனதும்
தாத்தாவின்
வீபூதிக் குடுவைக்குள்
மஞ்சள் பூசிய துணியில்
ஒற்றை ரூபா
நேர்த்திக் கடனாய்.

வியர்வை துடைக்கும் மரங்கள்
விட்டெறிந்த பெருமூச்சில்
பட்டைகள் வெடித்து
தெறித்த குருதியில்
குழந்தைகள்
மூன்றாம் கையாய்
நான்காம் காலாய்.

"பூவரச மரங்களை
பூக்கவிடு
என் கல்லறை சுற்றி"

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து!!!

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6400

ஹேமா(சுவிஸ்)

5 comments:

  1. பூவரம் மரம் போல ஒரு நிழல்ச்சுகம் தனிச்சுகம் ஹேமா அருமை வரிகள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் சிறப்பு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கவி நன்று........பூவரசு.............இப்போது,புராதனப் பொருளாக!ஏன்,கருக்கு மட்டை வேலியும் தான்!

    ReplyDelete