Thursday, July 31, 2014

ஜூலை 30...

ஓ...
வருடங்கள் எண்ணவில்லை
எண்ணத்தில் நீயிருப்பதால்.

கடக்கிறது இன்றைய
ஜூலை 30 ம்
நீ...விட்டு விட்டுப்போன
இடத்திலேயே
அப்படியே
இன்றும் நான் .

சாத்தான்களின் கனவுகளில்
வண்ண இறக்கைகளோடு
நான் வருவதாகவும்
தங்கள் இறகுகளைப்
பறிப்பதாகவும்
பறித்து
நிறம் மாற்றுவதாகவும்
குற்றம் சொல்கிறார்கள்.

எனக்கோ உறங்குகையில்
நீ விட்டுப்போன இறகும்
பறித்துப்போன இறகும்
வர வர
வண்ணமிழந்தபடி
பிறப்பின் கடனில்
இன்னொரு இறகும்
வளர்ந்தபடி.

ஒவ்வொரு விடியலிலும்
என் பல்கனி
கண்ணாடி தொட்டுப்போகும்
நீலநிறப் பொன்வண்டின்
எதார்த்தம்
சாத்தான்களைத்
துளைக்குமென்கிறேன்.

நீ.....
என்ன சொல்கிறாய் ?

அடுத்த 30 ஜூலையில்
சந்திக்கும்வரை
வண்ணத்தமிழ்
வணக்கங்கங்கள் கூறி....!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

  1. அடுத்த ஜீலை முப்பதிலிலாவது சந்திக்க எனது வாழ்த்துக்கள். வருடங்களை எண்ணாவிட்டாலும், உங்கள் எண்ணத்தில் இருக்கும் அவனை நினைத்து பொறாமைதான் படமுடிகிறது.

    ReplyDelete