திவலைகளைக் கலைத்து
திரவமாக்கி
ஓட்டைக் கலயத்திலிடும்
முயற்சியில்
உன் ஆராய்ச்சி.
ஆணவம்...அது....நீ...
உரிமையில்
தெருட்சியற்ற தவறொன்றில்
சாத்தான்கள் ஆரத்தியுடன்
ஆரம்பமாகிறது
நமக்கான சண்டை.
உடைத்து
நொருக்கி
பின் இணைக்கையில்
தொலைந்துவிடுகிறது
பிணைச்சல்களின்
சிறு துண்டுகள்
இறுதிச் சொல்வரை
ஆட்டம் கண்டு
இனி இல்லையென்றானபின்
என்னதான்
மிஞ்சிக்கிடக்கிறது
இயலாமையோடு
முனகித் திரும்பும்
என் இயல்பு தவிர.
நீ....நீயாய்த்தான்...
மீள மீள
உயிர்த்தெழும்
ஆசைகளை
நிராயுதபாணியாக்கி
கொன்றொழிப்பதுதான்
சரி இனி!!!
ஹேமா(சுவிஸ்
மீள மீள
ReplyDeleteஉயிர்த்தெழும்
ஆசைகளை //ரசித்த வரிகள்.
நிராயுதபாணியாக்கி, பின் கொல்வது..............ஹூம்...........!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
உள்ள உணா்வை உரைக்கும் கவியுணா்ந்து
மெல்ல ஒழுகும் விழி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு