Friday, May 16, 2014

நிகழ் பறவை...


சுழியச் செய்
மீதியுள்ளது சேடம்
சுரக்காத அன்பின்
சுவடிகளுக்குள் புத்தன்.

தொழு இல்லை
தொம்பைக்கூடு சேர்
தேடாத கடவுளின்
தொழும்பன் இவன்
இன்னும்பிற
வார்த்தைகள் வரா
தொல்வரவின்
சலிக்கும் தொணதொணப்பாய்.

படபடக்கும் போதி மரத்தின்
பாதிக்கிளைகள் போலும்
பௌத்திரனின் அரசன்.

போகுதலாகும்
இறப்பு
தட்டத்தனியிருப்பு.

வீடுபோதல்போல்
பக்கச் சிறகு முளைத்தல்
மாலோன் சித்திரங்களில்
மாரியுடைக்க
எச்சமிட்டுப் பறக்கும்
விரிசிறகில்
மாண்டு
திடுமென
மூதலிக்கும் உலகம்
வரகதி தரும்
வான்வெளி கிழித்து!!!


தொம்பைக்கூடு -(மூங்கிலால் செய்யப்பட்ட தானியக்குதிர்)
தொழும்பன் -(அடியவன்)
பௌத்திரன் -(மகனுடைய மகனாகிய பேரன்)
வரகதி தரும் -(மேலான கதி)


ஹேமா(சுவிஸ்)

2 comments:

  1. புத்தரை(னை)க் காட்டி...................ஹூம்........

    ReplyDelete
  2. புத்தன் பாவம் வரனகதி தேடியவன் இப்படி பேரனிடம் மாட்டிக்கொண்டு!ம்ம்

    ReplyDelete