நிலவு பார்த்து நித்தம்
குரைத்துக்கொண்டிருக்கிறது
எப்போதும்
நான் பார்க்கும் அந்த நாய்.
கடிக்காவிட்டாலும்
குரைப்பதென்பதே
அடையாளமாய்
ஆக்கப்பட்டிருக்கிறது
அதற்கு.
கடிக்காவிட்டாலும்
குரைக்காத நாயை
நாயென்று சொல்வீர்களா
நீங்கள் ?
கடித்தும் குரைத்தும்
நாயின் சாகசங்களோடுதான்
மனிதன் இப்போ
என்றாலும்....
வாலில்லாமலோவென்று
நினைத்துச் சிரித்ததுண்டு
நிமிர்த்தமுடியாததாலோ !
கடித்தால் பாசிசமாம்
குரைத்தால் ஜனநாயகமாம்
இரண்டுமாய்
இருப்பான் மனிதன்
அவன் அடையாளம் அது.
கடிக்காவிட்டாலும்
குரைக்கும் நாயொன்று
இருத்தல் நல்லது
என்னால்
குரைக்கவோ கடிக்கவோ
முடியவில்லை.
யார் வந்தாலும்
வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்
என் இயல்போடு
இன்றளவும் நான்!!!
http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6122
ஹேமா(சுவிஸ்)
மிக மிக அற்புதம்
ReplyDeleteபாசிச ஜனநாயக விளக்கம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமை....
ReplyDeleteஎன்றோ ஒரு நாள் இந்நிலையும் கடந்து போகும் தோழி .
ReplyDeleteகாத்திருபுக்களின் எல்லைவரைக் கற்றுக் கொள்ளும்
பாடமானது பெறுதற்கரிய செல்வமாகி விடுகிறது !
வாழ்த்துக்கள் தோழி சிறப்பான படைப்பிற்கும் தொடரவும் .
அருமை...
ReplyDeleteநன்றியையும் கற்றுக் கொள்ள வேண்டும் அதனிடம்...!
உவமை அழகு...
ReplyDeleteவாலில்லாமலோ... :)))
நாய் ஒன்றினை வைத்து கம்பேர் பண்ணிச் சொன்ன விஷயங்கள் பிரமாதம்.
ReplyDeleteகடிக்காவிட்டாலும்
ReplyDeleteகுரைக்கும் நாயொன்று
இருத்தல் நல்லது
உதாரணமாய் கம்யூனிஸ்டுகளை சொல்லலாம் என எஇனைக்கிறேன். அவர்கள் இருக்கப்போய்தான் இந்தியா இன்னும் முயுமையாய் விற்க்கப்படாமல் இருக்கிறது. மேலும் நாய் ஒன்று இருப்பதைவிடவும் நாய்கள் ஜாக்கிரதை பலகையே பல கொள்ளைகளை தடுத்துக்கொண்டிருக்கிறது. கவிதை அருமை.
அருமை, ஹேமா.
ReplyDeleteஇறுதிக் கணத்தில் கடிக்கும்/கடிக்க வேண்டும்.அப்போது தான் அது.......நாய்(யார்)!
ReplyDeleteயார் வந்தாலும்
ReplyDeleteவாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்
என் இயல்போடு
இன்றளவும் நான்!!!
paravayillaiye ennai mathiriye irukka hamu.
வார்த்தைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடாய்...
ReplyDeleteதொடரட்டும்