Thursday, January 09, 2014

என் ஊரும் ஒரு நாளும்...

பெருமழைதான்
என்றாலும்
வியர்வை பிசுபிசுக்க
நான் பிறந்த மண்ணில்
பரிச்சயமற்றவளாய்
பெண் தெய்வம்
ஒன்றைத் தேடி
மிக நிதானமாக
நடந்துகொண்டிருந்தேன்.

வாகனங்கள் நிறைந்த
ஒரு கூட்ட நெரிசலில்
பெண் தெய்வம் நிற்பதாக
அறிவித்துக்கொண்டிருந்தார்கள்
நானோ....
பாதை மாறியதை உணர்ந்து
மார்க்கங்களற்ற
பெண் தெய்வத்தை
தேடிக்கொண்டிருந்தேன்
பிறகும்.

மன்னிப்பும் தவறும்
மனித இயல்பென
மறுதலிக்கும் மனதில்
புத்தனின் பிறப்புக்கு
முன் பிறந்து 
கடவுளாக
மதிக்கப்படாத மனிதனின்
மென்சாந்தம் கண்டேன்
ஒரு சிலரிடம்.

சிரிப்பு என்னவென்றால்
பெண்கடவுளர்களோடு 
வீரக் கடவுளர்களையும்
பூட்டி வைத்திருந்தார்கள்
கள்ளர்களுக்குப் பயந்து.

ஊர்க்காற்றை மட்டும்
சேமித்துக்கொண்டு
மீண்டும்.....
வாடகை தேசம் 
வந்துவிட்டேன்
வெள்ளைக்
கடவுளர்களைக் கும்பிட!!!

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6058

ஹேமா(சுவிஸ்)

9 comments:

  1. மென்சாந்த மனிதர்கள் பெருகட்டும்...

    ReplyDelete
  2. வெள்ளைக்கடவுள்தான் நம்மைக்காக்கனும் என்ற நிலையில் ஊர் இருப்பது கொடுமைதான்!

    ReplyDelete
  3. கடவுளுக்கும் காவல் தேவைப்படும் நாட்கள் இவை. அழகிய கவிதை.

    ReplyDelete
  4. நல்ல கவிதை.புத்தனின் பிறப்புக்கு முன் பிறந்து..................மென் சாந்தம் சிலரிடம்,இப்போதும் இருக்கிறதே?ஹூம்!

    ReplyDelete
  5. வணக்கம்
    பெண்கடவுளர்களோடு 
    வீரக் கடவுளர்களையும்
    பூட்டி வைத்திருந்தார்கள்
    கள்ளர்களுக்குப் பயந்து.
    காலம் அறிந்து செய்துள்ளார்கள் நன்றாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  7. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  8. வீரக்கடவுள்களுக்கும் இன்னும் பயம் போகவில்லையா!

    ReplyDelete
  9. //நான் பிறந்த மண்ணில்
    பரிச்சயமற்றவளாய்//
    sudum nijam

    ReplyDelete