ப்ரியத்தை....
மயூரமிசைத்து
தூளியாட்டுகிறது
மௌனக் காற்றுவெளி.
புள்ளியாய் அசையும்
தீபத்தில்
நானென்ற திரியும்
நாமென்ற வெளிச்சமும்.
இரவுகளை நீட்டிச்செல்லும்
தூங்கா வானத்தில்
வெளித்த
வெளிச்ச நிலவில்
அவனோடு நான்..
முகமுரசி
கருந்தாடி எழுதும்
மோகத்தீயில்
சிலிர்த்தெழுந்து
சுயம் தொலைக்கவைத்து
அடையாளமிடுகிறாய்
சாதாரண சகமனுஷிதான்
நானுமென.
ஒரு கோப்பை
தேநீர் மயக்கத்தில்
சிறுதூரல் மழையணைப்பென
சரிந்துகிடக்கும்
என் விழிக்கா விழியில்
மேகம் கடக்கும் கருமுகில்
அழகு காட்டிப்போகிறது
என் மீசைக்குழந்தையை.
தன் எச்ச விதையில்
முளைத்த மரத்தில்தான்
சில விதிப்பறவைகளின்
கூடுகள்
விதியென இணையும்
என்னையும் அவனையும்போல!!!
ஹேமா(சுவிஸ்)
மயூரமிசைத்து
தூளியாட்டுகிறது
மௌனக் காற்றுவெளி.
புள்ளியாய் அசையும்
தீபத்தில்
நானென்ற திரியும்
நாமென்ற வெளிச்சமும்.
இரவுகளை நீட்டிச்செல்லும்
தூங்கா வானத்தில்
வெளித்த
வெளிச்ச நிலவில்
அவனோடு நான்..
முகமுரசி
கருந்தாடி எழுதும்
மோகத்தீயில்
சிலிர்த்தெழுந்து
சுயம் தொலைக்கவைத்து
அடையாளமிடுகிறாய்
சாதாரண சகமனுஷிதான்
நானுமென.
ஒரு கோப்பை
தேநீர் மயக்கத்தில்
சிறுதூரல் மழையணைப்பென
சரிந்துகிடக்கும்
என் விழிக்கா விழியில்
மேகம் கடக்கும் கருமுகில்
அழகு காட்டிப்போகிறது
என் மீசைக்குழந்தையை.
தன் எச்ச விதையில்
முளைத்த மரத்தில்தான்
சில விதிப்பறவைகளின்
கூடுகள்
விதியென இணையும்
என்னையும் அவனையும்போல!!!
ஹேமா(சுவிஸ்)
அருமை...
ReplyDeleteஇணைவது நம் மனதில் இல்லையோ...?
வாழ்த்துக்கள்...
//நானென்ற திரியும்
ReplyDeleteநாமென்ற வெளிச்சமும்//
மோகத்தீயில் எரிவதால் வெளிச்சம்? அருமை ஹேமா.
வர்ணனைகள் சிறப்பு! ரசித்தேன்! நன்றி!
ReplyDeleteதங்களின் மயூரத்துவம் பிடித்துள்ளது.........
ReplyDelete