Tuesday, January 14, 2014

பொங்குகிறோம்...


குருதிச் சரித்திரமெழுதிய
புழுதி மண்ணில்
இப்போதும் நரம்பறுத்து
செம்மண் மெழுகி
மாவிலை தொங்கும்
மனப்பானையில்
நாசித்துவாரமிட்டு
பால் மணத்தோடு
கண்வழி பொங்குகிறது
பொங்கல்.

மறைத்து விளையாடுகின்றன
துளசிமாடச் சிற்றெறும்புகள்
பொங்கலுக்கான சூரியக்கதிர்களின்
திரியறுத்து.

நகம் இறங்கிய ஊசி
கசிந்திறங்கும் இரத்தம்
ஒவ்வொரு சிவப்பரிசியிலும்
எத்தனை எத்தனை முகங்கள்.

அவரவர் பருக்கையில்
எழுதப்படும் விதி
இதுதானோ ?!

ஆக்கி அழித்த
ஆச்சாரியக் கூட்டமதை
மரநாய்கள் துரோகித்ததை
சகிக்கமுடியா
பொங்கல் விநியோகம்
இப்போதும் ஈழத்தில்
இல்லாச் சூரியனுக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

13 comments:

  1. வரிகள் மனதை கலங்க வைத்தது...

    ReplyDelete
  2. கூட்டாஞ்சோறு இனிக்குமா? பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இல்லாச் சூரியனுக்கு சூரிய பொங்கல்.

    ReplyDelete
  4. வலிகளும் வேதனைகளும் நிறைந்த இவ் வாழ்க்கைச் சூழல் விரைவில் மறைந்திட வேண்டும் உதிக்கும் சூரியன் ஈழத் தமிழர்களின் முகத்தையும் பார்க்க வேண்டும் !
    இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......

    ReplyDelete
  5. இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி.
    கலங்க வைக்கும் வரிகள். மனதை நெருடுகிறது.
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    ReplyDelete
  9. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. அம்பாளடியாள் வலைத்தளம் said...
    வலிகளும் வேதனைகளும் நிறைந்த இவ் வாழ்க்கைச் சூழல் விரைவில் மறைந்திட வேண்டும் உதிக்கும் சூரியன் ஈழத் தமிழர்களின் முகத்தையும் பார்க்க வேண்டும் !
    இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ....//

    என்னுடைய கமெண்டும் இதுதான், இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  12. மறைவதும் உதிப்பதும் வாடிக்கை தானே சூரியனுக்கு!

    மறைந்ததால் சூழ்ந்த இருளின் பாற்பட்ட துயரமும் விடியும் ஒருபொழுது.

    ReplyDelete
  13. சூரியன் ஒருநாள் உதிப்பான்..

    ReplyDelete