Wednesday, December 25, 2013

ஜீவஒளி...


சூரியக் கடவுளை நம்பிய
அகங்காரத்தில்
நம்மருகில்
விளக்கேற்றும் கடவுளை
ஒளித்து வைத்திருந்தான்
மனிதன்.

விளக்கேற்றிய
பத்தினிப் பெண்கள்
வீட்டு விலக்கென்றார்கள்
ஆனாலும்
வீட்டு விளக்குகள் ஒளிர்ந்தன.

கடவுள்...
களவு போன நாளிலிருந்து
கோயில்களில்
தஞ்சமடைந்திருந்தன இருள்.

விளக்குகளோ திரிகளோடு
ஒரு துளி நெய்யுக்காய்
தவமிருந்தன.

பின்னொருநாளில்
கடவுள் வந்தார்
கையில் ஒரு
செத்த மின்மினியோடும்
திரியில்லா
வெறும் விளக்கோடும்.

விளக்கில்லா ஈசல்கள்
சூரியனைச் சுற்றிச்
செத்துக்கிடந்தன!!!

ஹேமா (சுவிஸ்)

4 comments:

  1. வணக்கம்
    அற்புதமான கவிவரிகள் அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. விளக்குகளோ திரிகளோடு
    ஒரு துளி நெய்யுக்காய்
    தவமிருந்தன.///இப்போதும் அப்படியே ?

    ReplyDelete
  3. கடவுள்..............பாவம்!///அனைவருக்கும் நத்தார்த் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete