நோயாகிப்போகிறேன்
பனி மிரட்டும் தேசத்திலும்
அனல் பறக்கிறது
அவன் ரகசிய
வார்த்தைகள்.
கருத்த நினைவுகள் முனக
மெல்ல மெல்ல
எலும்புடைத்து நொருக்கி
மாத்திரைத் துகளென
இறங்குகிறது
அவன் குரல்
நினைவு மீட்டலோடு.
தொன்மத்தின் படிமமென
உறையும் சுவாசம்கூட
தீயாக
நெஞ்சுக்குள் உருளும்
உருளையொன்று
சொல்லிவிடு
கேட்டுவிடேனென
உயிரிடித்து உடைக்கிறது.
வதைகள் வேண்டாமே...
முத்தங்களைக் கேட்டு வாங்க
நானென்ன சும்மாவா
அவனைவிடத் திமிரானவள்
அட.....போடா !
ஹேமா(சுவிஸ்)
அடேங்கப்பா...!
ReplyDeleteஉ௫க்கியது-
உலுக்கியது-
வார்த்தைகள்!
அ௫மை!
.வாங்கிகொண்டே காட்டனும் திமிரை ஹேமா
ReplyDeleteநலமா!
அவ்வளவு தானா? இன்னும் நாலு வரி எழுதினால் குறைந்தா போய்விடுவீர்கள்?
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDeleteதெளுவின் மணமாக... நன்று...!!
ReplyDelete