Sunday, October 13, 2013

காதல் துளிகள் (10)

தனிமை
இரவின் பாடல்கள்
ஏதோவாய்
வானொலியில்
ஒற்றை மெழுகுதிரி
எரிய
முகமற்ற ஒருவனின்
அன்பின்
சுவாசம் மட்டும்
என்
அறை நிரப்பியபடி !

கேள்விகளால்
நிரம்பியிருந்தான் அவன்
எனக்கான
குவளைகள்
போதாமலிருக்கிறது
நிரம்பியும் வழிந்துமாய்
தளம்பிக்கொண்டிருக்கிறேன்
நான் !

அலட்சியமாய்
சாகடிக்க
நஞ்சு வேண்டாம்
தஞ்சம் கேட்கும்
மெல்லிய அன்பு போதும் !

சிலசமயங்களில்
சிறு தூரலாய்
தூவி
என் ஈரலிப்பை
காக்கிறானே தவிர
பெய்வதென்னவோ
மிதமிஞ்சிய
சதுப்பு நிலத்தில்தான் !

அன்பால்தான்
கொண்டான்
என்னை.....
அதே அன்பால்
கொல்கிறான்
என்னைத் தவிர்த்து !

சிலுவை வலிகளுக்கு
மருந்தாய்
இயேசு சொன்ன
ஏழு வாசகம்போல்
என் வலிக்கு
அவன் பெயர் !

ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. வணக்கம்
    கேள்விகளால்
    நிரம்பியிருந்தான் அவன்
    எனக்கான
    குவளைகள்
    போதாமலிருக்கிறது
    நிரம்பியும் வழிந்துமாய்
    தளம்பிக்கொண்டிருக்கிறேன்
    நான் !

    கவிதையில் காதல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அற்புதமான கவிதை
    ஒரு கவிதையியேனும் இப்படி
    மனதைக் கொள்ளைக் கொள்ளும்படியாக
    எழுத ஆசையாக இருக்கிறது
    முயற்சிக்கனும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் காதல் வரிகள்... பாராட்டுக்கள்...

    /// தஞ்சம் கேட்கும் மெல்லிய அன்பு போதும் ! ///

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. படமே ஆயிரம் கவிதை சொல்கிறது...
    நல்ல படத்தேர்வு....
    கவிதை ரசிக்க வைத்தது...
    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  5. காதல் இன்பம் சொட்டும்
    இன்னிசை துளிப்பாக்கள்...

    ReplyDelete
  6. ரசிக்க ரசிக்க காதல் வரிகள்...

    ReplyDelete
  7. அன்பில் விளைந்த கண்ணீர் மனமே தேற்றும் மருந்து

    ReplyDelete