Monday, June 03, 2013

இதற்குப் பின்னும்...


நீயில்லா வாழ்க்கையிது....

காதலோ
கர்ப்பமோ இல்லை.

எனக்கான குறிப்புக்களை
கொண்டுபோயிருந்தாய்
அடையாளத்துக்கான
உணர்வுகளை
புறக்கணிக்கப் பழகியுமிருக்கிறாய்
இனி ஏதுமில்லை
நூதனமாய் நான் சொல்ல.

காடுகளில் பறவைகள்
கூடு தொலைத்த கதைகள்
சொல்லிக்கொண்டிருந்தபோதே
சருகுகளோடு சருகாய்
சேர்ந்து கிடந்த
ஒற்றைச் சிறகொன்றை
உயிரூட்டி
பரிசாய் தருவதாக
சொல்லியே
கதவடைத்தாய்.

அதன்பின்.......

பிரபஞ்சம் தாண்டியபோது
நீ சாட்சியாய்
அனுப்பிய
செய்திகள் ஏதும்
எனக்குச் சரிவர
எவரும் கொண்டுவரவில்லை.

பொய்யாகிப்போனது நீயா
இல்லை என் வாழ்வா
உயிர் கொண்டு வருமா
அந்த ஒற்றை இறகு!!!

ஹேமா(சுவிஸ்)

9 comments:

  1. கவிதையின் உணர்வை
    முழுமையாக உணர முடிந்தது
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இதற்குப் பிறகு.... 'சந்தேகம் தான்' என நினைக்க வைக்கிறது...

    ReplyDelete
  3. பொய்யாகிப்போனது நீயா? இருக்கலாம்

    ReplyDelete
  4. மன உணர்வுகளை அழுத்தமாக சொல்கிறது உங்கள் கவிதை. ஆழ்ந்து படிக்கும்போது பல பரிமாணங்களை பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  5. பொய்யாகிப்போனது நீயா இல்லை என் வாழ்வா

    ஒற்றை இறகிலும்
    ஓங்கிய கவிதை ...!

    ReplyDelete
  6. நினைப்பு வெறும் கனவுதானோ!ம்ம்

    ReplyDelete
  7. காத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான் தோழி.
    த.ம. 4

    ReplyDelete
  8. தொலைந்ததெல்லாம் என்றேனும் கைவருமென்ற நம்பிக்கை முனையில் நகர்த்துவோம்....

    ReplyDelete