காற்றில்.....
பலமான செய்திகள்
எத்தனையோ
ஊடகப் பாதுகாப்பின்றி
அலைகிறது நம் தேசத்தில்.
முள்வேலிட்ட
அரசியல் வானம் துளைத்து
உலகின்
காதுகளிலோ கைகளிலோ
கிடைக்காதவாறு.
விஞ்சும் பாரமிருக்க
இறங்கினாலோ
இறப்பு உறுதியென
எழுதி வைத்திருந்தார்கள்
முன்னம் செய்தி சொன்னவர்கள்.
முடியாப் பாரத்தோடு
இறங்கி
பின் இறந்த செய்திகள்
பல
என்றாலும்
வீறு கொண்டு கக்கும்
இன்னொரு பேனாவில்
இன்னொரு செய்தியாய்!!!
(எனக்கும் மிக மிகப்பிடித்த துறை ஊடகம்.
ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
ஹேமா(சுவிஸ்)
/// காதுகளிலோ கைகளிலோ
ReplyDeleteகிடைக்காதவாறு. ///
அருமை... வாழ்த்துக்கள்...
ஊடகத் தணிக்கையும் உயர் அதிகார தணிக்கையும் என சொல்லப்படாத செய்திகளை சொல்ல மறுப்பதும் ஊடகமே !கவிதை அருமை!
ReplyDeleteஎங்களது ஊடகத்தின் ஒடுக்கபட்ட உணர்வுகளை வெளிச்சொல்கிறது இந்தக் கவிதை. எனக்கும் ஊடகத்துறையில் இணையும் வேட்கை இருந்தது. வீட்டினது பலமான எதிர்பாலும் நாட்டு சூழ்நிலையாலும் எனது துறையை மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது.
ReplyDeleteநேரம் இருக்கும்போது எனது வலைப்பூவின் பக்கமும் வாருங்கள்.
www.moongilvanam.blogspot.com
இறப்பு உறுதியென
ReplyDeleteஎழுதி வைத்திருந்தார்கள்
முன்னம் செய்தி சொன்னவர்கள்.//வேதனையான செய்தி.
எங்கும் எங்கெங்கிலும்
ReplyDeleteபரவி ஊடுருவி
சல்லிவேர்களாய்
நிரவி இருக்கும் இந்த நிலைமை
பொதுவாக எல்லா நாடுகளிலும்
இருக்கிறது சகோதரி.
==
இருப்பவையை இல்லாததாகவும்
இல்லாததை இருப்பவையாகவும்...
ஊடகம் என்ற பெருஞ்சொல்லை
பூடகமாக பயன்படுத்தும்
புல்லுருவிகளும் இருக்கிறார்கள்..
==
அதிசக்தி வாய்ந்த ஊடகத்தை
நன்முறையில் பயன்படுத்தினால்
என்றும் நலமே..
முடியாப் பாரத்தோடு
ReplyDeleteஇறங்கி
பின் இறந்த செய்திகள்
பல
என்றாலும்
வீறு கொண்டு கக்கும்
இன்னொரு பேனாவில்
இன்னொரு செய்தியாய்!!!//அருமையான வரிகள் சகோதரி
போர்வாளிலும் வலியதாம் இந்தப்
பேனா எனும் வாள் பிடித்து
உறங்கிக்கொண்டிருக்கும் உண்மைகளை
உலகறியச் செய்வதற்காய் ஒரு
ஊடகத்துறை வேண்டும் –இவ்
உலகினிலே