Tuesday, April 02, 2013

கொடுக்க'வா' குட்டிக் குருவி...


வந்து வந்து குந்திக்கொண்டிருக்கிறது
ஒரு குருவி
உண்டு கழித்த
நினைவுகளை மறக்காதோ.

பல்கனியில் தானியத்தை
பரப்பிவிட்டுக் காத்திருப்பேன்
அடிபட்டு
கொஞ்சிக் குலவி
சாப்பிடும் அழகை ரசிக்க
பசி போக்கிப் புசிக்க.

எச்சம் கழுவுவது
ரசனையை விட மோசமது
தமிழில் செல்லத்திட்டு வேறு
 'கக்கா இருந்தால்
சாப்பாடு போடமாட்டேன்
.......போ'.

மெல்ல மெல்ல
குவளைத் தேனீர்
என்னைச் சூடாக்க
இன்னும் பனி மழை
பூமியை வெள்ளைப்பூக்களால்
அலங்கரிக்க
குருவியோ குந்தியிருக்கிறது
பாவமென 

சற்றுத் தள்ளி
பரிதாபமாய்!!!


"கட்டித்தொங்கவிட உருட்டிய உணவு விற்பனையில்.பனிக்காலத்தில் பறவைகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு."

ஹேமா(சுவிஸ்)

15 comments:

  1. நல்லதொரு படைப்பு..

    ReplyDelete
  2. நல்ல அழகான ரசனை கவியாய் மிளிர்ந்திருக்கிறது

    ReplyDelete
  3. அருமையான கவிதை.

    ReplyDelete
  4. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இன்னும் பனி மழை
    பூமியை வெள்ளைப்பூக்களால்
    அலங்கரிக்க

    அழகிய கற்பனை!

    ReplyDelete
  6. அருமையோ அருமை! வாழ்த்துக்கள் ஹேமா...:)

    குட்டிக்குருவிக்கு தானியத்தை
    உருட்டிக் கொடுத்து
    ஊட்டும் அழகினை
    மெட்டுப்போட்டுப்
    பாட்டிசைத்த கவிதனை
    கைதட்டி ரசிக்கின்றேன்
    கவியே நீர் வாழ்கவே...

    ReplyDelete
  7. உங்களின் ரசனை என்னையும் கை தட்டி ரசிக்க வைக்கிறது ஃப்ரெண்ட்! சூப்பர்ப்!

    ReplyDelete
  8. நல்ல ரசனையான கவிதை ஹேமா
    உங்கள் மனித நேயம் அதைவிட அழகு.

    ReplyDelete
  9. ம்ம் காத்து இருக்கும் அந்த நேரங்களும் நல்ல உறவு கிடைக்கும் குருவி போல அருமை கவிதை கவிதாயினி!

    ReplyDelete
  10. இன்னும் பனி மழை
    பூமியை வெள்ளைப்பூக்களால்
    அலங்கரிக்க
    குருவியோ குந்தியிருக்கிற
    அழகு மிகவும் ரசிக்கத்தான் வைக்கிறீர்கள் தோழி .!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. எச்சம் கழுவுவது
    ரசனையை விட மோசமது
    தமிழில் செல்லத்திட்டு வேறு
    'கக்கா இருந்தால்
    சாப்பாடு போடமாட்டேன்
    .......போ'.

    மிச்சத்தைப் போட்டால்
    எச்சத்தை “இருக்கும்“ தானே...?

    அழகிய கவிதை என் இனிய தோழி ஹேமா.

    ReplyDelete
  12. குட்டிக் குருவியுடனான பாசப் பிணைப்பு அருமையான கவிதையாக.

    ReplyDelete