Thursday, March 28, 2013

கடந்த ஞாயிறு...


விரலிடுக்குகளில்
இடுக்கி வைத்திருந்த
ஒற்றைச் சூரியன்
காணாமல் போயிருந்தது.

குழந்தைச் சூரியனாய்
இருந்தபோதே
வானிடம்
திருடியிருந்தேன்.

முகில் பிளந்து
பொத்திக் காத்திருக்க
வானுக்கு
முண்டு கொடுக்கவென
கால் வளர்ந்த சூரியன்
காலில்லாக் கதிரையையும்
காவிப் போயிருந்தது.

பதைத்துத் தேடுகையில்
முழுச்சூரியனாய்
வானோடு
நடந்துகொண்டிருந்தது
நான் வளர்த்த சூரியன்.

சூரியனைத் தேடும்
விரல்களை
சமாதானம் செய்தபடியே
பக்கவாட்டில்
துளாவித் தேட
என் தலையைக்
கடந்து கொண்டிருக்கிறது
காலை வெயில்!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

  1. நல்ல கவிதை ஹேமா , அருமையான வர்ணிப்பு வித்தியாசமான உருவகம்

    ReplyDelete
  2. சூரியனைத்தேடுவது விடுத்து குடை தேடுங்கள் க்விதாயினி காலையில் வெளியில் நடமாட நாம் நோய் இல்லாமல் இருக்க!ம்ம்

    ReplyDelete
  3. இருக்கவேண்டிய இடத்தில் இருப்பதுதான் சிறப்பு என்று அந்த குழந்தை சூரியனுக்கு காலம் உரைத்துவிட்டது போலும். வளர்ந்தபின் வானை நோக்கிப் பயணப்பட்டுவிட்டது. ஆனாலும் என்ன? தூரத்தே இருந்தாலும் காலை வெயிலால் தலை கோதும் அதன் ஸ்பரிசம் உணர்த்தவில்லையா அதன் அன்பையும் அருகாமையையும்.

    மனக்கிடக்கையை இலைமறை காய் மறையாய் வெளிப்படுத்தி மனம் தொட்ட கவிதை ஹேமா.

    ReplyDelete
  4. அருமை ஹேமா.

    விண்ணில் ஏறிய சூரியனை இப்போதும் விரலிடுக்கில் பார்க்கலாம்.. கண்கள் கூச!

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் தோழி...

    ReplyDelete
  6. ரசனை! குழந்தைச் சூரியன் விண்ணிலேறிய பின்னும் அதன் இதத்தை உணர முடிகிறதுதானே!

    ReplyDelete
  7. /// கால் வளர்ந்த சூரியன்
    காலில்லாக் கதிரையையும்
    காவிப் போயிருந்தது. ///

    ரசிக்க வைக்கும் வரிகள் பல... ரசித்தேன்...

    ReplyDelete
  8. அசத்தலான கவிதை ஹேம்ஸ்..

    ReplyDelete
  9. வித்தியாசமான சிந்தனை.. கவிதை அழகு...

    ReplyDelete