Tuesday, February 19, 2013

கோரத்தாண்டவம்...



என் மண் மிதித்தபோது
வீரிட்ட கிபீரில்
"இது என் தேசமென"
வெளிவரவிருந்த
வார்த்தை
என் குரல்வளையை
நெரித்துப் போனது.

என் வீட்டு வாசலில்
கடத்தலும் கப்பமும் கேட்டு
மிரட்டிய
"சகோதரமொழிமுகங்கள்".

அந்நியப்பட்டவளாய்
முழி பிதுங்கி நிற்கையில்
மரணத்தின் வாசகத்தை
காதில் சொல்லிப் போனார்கள்
அவர்கள்.

இங்கேதானே விளையாடினேன்
கை தேயத் தேய
இந்த மண்ணில்தானே
"அ" எழுதினேன்.

சாத்தாத கதவுகளே பாதுகாப்பென
இரத்த மேட்டில்
தெருநாயாகிவிட்ட
எவரினதோ ஒரு நாயும்
வியர்த்துக் கொட்ட
என்னோடு குந்தியிருக்க.

காகக் கூட்டமொன்று
ஒப்பாரி வைக்கிறது
அநாதரவாய்
கொல்லப்பட்டுக் கிடக்கும்
தமிழனின் உடலொன்றுக்கு !!!

ஹேமா(சுவிஸ்)

14 comments:

  1. உள்ளம் பதற வைக்கிறது உங்கள் கவிதை.

    ReplyDelete
  2. படமும் கவிதையும் மனதைப் பிசைகின்றன.

    ReplyDelete
  3. vethanai koppalikkirathu.....

    ReplyDelete
  4. அன்பின் ஹேமா,

    ஐயோ..ஐயோ என்று அரற்றி மட்டும் என்னதான் ஆகப்போகிறது என்ற் வேதனையில் உள்ளம் வெம்பி, வேதனையில் இரத்தம் கசிய ஓலமிடுகிறது தோழி.. நெஞ்சு பொறுக்குதில்லையே இறைவா.....

    ReplyDelete
  5. மிக மிக கொடுமை. மனதை வதைக்கிறது.

    ReplyDelete
  6. இந்தப் படங்கள்.. இப்படியான வரிகள் இன்னும் தேவைதானோ....:(

    ReplyDelete
  7. அன்புத்தோழி....
    பேச வார்த்தைகளற்று.....:’(

    தேடித்திளைத்த நம்வாழ்வை
    ஆடித்துலைத்தனன் கொடுங்கோலன்
    கூடிக்கூவி குலமழிந்துபோனதென
    வாடிவருந்தி வளம்போனகதைதனை
    நாடிநவின்று நலமேதுன்றி வெளிநாட்டில்
    பேடிகளாக பேதலித்து நிற்கின்றோம்
    பேச்சிழந்து கிடக்கின்றோம்...:’(..

    ReplyDelete
  8. என்றைக்குமே நாம் மறக்க முடியாத / மறக்க இயலாத கொடூரங்களின் ரணத்தில் இருந்து பிறந்த உணர்வுள்ள கவிதை ஹேமா!

    இப்படியான படைப்புக்கள் ஆண்டாண்டுதோறும் படைக்கப்படல் வேண்டும்! இனிவரும் காலங்களிலாவது எம் இனம் இப்படிப் பாதிக்கப்படாமல் இருக்க, இது வாய்ப்பாகும்!!

    கவிதைக்கு நன்றி ஹேமா!

    ReplyDelete
  9. ஈழம் வெல்லும்
    ஈனன் வீழ்வான்

    இதைத்தவிர என்ன சொல்லுவதென்று தெரியவில்லை

    விஜய்

    ReplyDelete

  10. படமும் பாடலும் சோகமோ சோகம்! மனதில் வலி!

    ReplyDelete
  11. நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால் என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது! சிறப்பான உணர்ச்சிகரமான படைப்பு!

    ReplyDelete
  12. அநீதியின் பிடியில் இன்னும் லங்கா தேசம்.
    என்று விடியுமோ?

    ReplyDelete
  13. தகவல்களின் தாக்குதலால் தழும்பாகினோம் நாங்கள் . குரல்வளையை நெரித்து, மிரட்டி , அந்நியமாக்கப்பட்ட உங்களின் வலிகள் மிகுந்த வரிகள்களில் தழுதழுத்து நிற்கிறோம்

    ReplyDelete
  14. நெஞ்சு பொறுக்குதிலையே
    நஞ்சினை நெஞ்சில் வைத்து
    இன்னமும்
    நாடகம் ஆடும்..
    வாயினில் நலம் நாடும்
    காக்கைகளைக் காண்கையில்

    ReplyDelete