பனிநிறைந்த நாளொன்றில்
கைபிடித்துக் கூட்டி போகிறாய் நீ
இருவர் கால்களும்
புதையப் புதைய
கனதூரம் நடக்கிறோம்
தெருமுடிவதாக எழுதிய பலகை
திரும்ப எத்தனிக்க.....
கட்டியிழுத்து
வாழ்வின் ஆனந்தங்களை
அள்ளித் தந்துக்கொண்டிருந்தாய்
அந்தப் பனியிரவும் வெட்கி இறுக.....
நான் மௌனதேசமென்றேன்
நீயோ மயக்கதேசமென்றாய்
கண்கள் செருக
உள்ளங்கையில்
அள்ளி வைத்த பனியில்
உயிரின் வெக்கையை
அளந்து சொல்லென
அமர்த்துகிறாய் ஒரு இருக்கையில்
அதுவொரு கல்லறை.....
கனத்து அணைக்கிறது ஒரு காற்று
சிலிர்த்து இதழில் குந்தியிருந்து
முத்தமிட்டுக் களைத்துக் கரைகிறது
ஒற்றைப் பனித்துளி
பனிப்பாரம் தாங்கா
கிளையொன்று ஒடியும் ஓசை
சாய்ந்துகொள்கிறேன்
கல்லறைமீது
ஆசீர்வதிக்கப்படுகிறது காதல்
அது கனவல்ல
உன் மீது நான் !
ஹேமா(சுவிஸ்)
என்னவொரு ஆழமான காதல் !
ReplyDeleteஎதிர்பாரா சோக முடிவு ஏனோ ?
நான் மௌனதேசமென்றேன்
ReplyDeleteநீயோ மயக்கதேசமென்றாய்
......
கல்லறைமீது
ஆசீர்வதிக்கப்படுகிறது காதல்
அது கனவல்ல ....நிஜம் ..!
ஆஹா காதல் மாதமா?அசத்துங்க!
ReplyDeleteஇந்த மாதம் மட்டும் தானா...?
ReplyDeleteமயக்கத்துடனே இருந்துவிட்டு போகட்டும் விடுங்கள்.
ReplyDeleteஹேமா! உங்கள் கவிதை எங்களையும் மயக்கிவிட்டது!
ReplyDeleteமயக்கும் / மயங்கும் கவிதை காதலர் தின ஸ்பெஷலா?!
ReplyDelete//சாய்ந்துகொள்கிறேன்
ReplyDeleteகல்லறைமீது
ஆசீர்வதிக்கப்படுகிறது காதல்//
நன்று