Friday, January 18, 2013

முத்தத் துளிகள் (1)

முத்தங்களை
அள்ளித் தெளித்துவிட்ட
நிம்மதியில்
நீ....
நித்திரையில்
எடுத்தும்
கோர்த்தும்
கலைத்துமாய்
நான் !
எப்போதும்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
முத்தக் களத்தில்
வெட்கம்கூட
கண்மூடி வெட்கபட
"நெப்போலிய முத்த"த்தில்
மயங்கி
தலை கீழாய்த் தொங்குகிறேன்
வௌவாலென
ஆனால்....
அவன் மட்டும் நேராய் !
நீ....
பேச்சினிடையே
அள்ளியிறைத்த
'ச்' ல்
ஒன்றையெடுத்து
ஒட்டிக்கொண்டதோ
ஒளியற்ற
அந்த விண்மீன்
பொறுக்கிச் சேர்க்க
என்....
கணக்கில் குறைகிறதே
நிறைய !
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்துவிடுகிறது.
மூச்சிழந்து
தேவதை தவிக்கையில்
காமமும் காதலும் வேறென
தத்துவம் சொல்லி
கண்ணைக் கட்டி
மறைந்தும் போகிறது
மீண்டும் வருவேனென!!!

அன்பு கேட்ட இடமெல்லாம்
வெறிச்சோடி வெளித்துவிட
உதிர்ந்துகொண்டிருந்த கனவை
இழுத்து
வெற்றிடம் நிரப்புகிறாள்
என்....தமிழ்.
ராட்சஷி
காற்றலையில்
தலைகோதி
முத்தம் தர
நடக்கத் தொடங்குகிறேன்
நீள் மௌன வீதியில்!
கஞ்சனாயில்லாமல்
காற்றுமுத்தமென
நாளொன்றிற்கு
ஆயிரம் அனுப்பினாலும்
கிடைப்பதென்னவோ
கனவில் அவன் தரும்
அந்த ஒற்றை முத்தம்
மட்டுமே
அதையும் கடன்
முத்தத்தோடு
கணக்கு வைக்கிறான்
கடன்காரன் !

அன்பு முத்தங்கள் தொடரும்.... ஹேமா(சுவிஸ்)

18 comments:

  1. ம் ம் அசத்துங்க..

    ReplyDelete
  2. பொல்லாத கடன் காரன் தான்.

    ReplyDelete
  3. அருமையாக உள்ளது முத்தத்துளிகள்.. ஒன்னுதான் கொடுத்திருக்கீங்க.. இன்னும் தொடர்ச்சி உள்ளதா!

    ReplyDelete
  4. ஆறு முத்தத் துளிகளும் அருமை.

    ReplyDelete
  5. முத்தக்களத்தில் சத்தமில்லாமல் ஒரு யுத்தம்...
    நித்தம் நித்தம் நடந்தாலும் தோற்காது
    ரத்தம் சுண்டிப்போகிறவரையிலும் தொடரும்...:)

    ReplyDelete
  6. நெப்போலிய முத்தம், தமிழ் ராட்சஸி... வார்த்தைப் பிரயோகங்களே அசத்துது ஃப்ரெண்ட்! முத்தத் துளிகள் அருமையா, ரசனையா இருக்குது. தொடருங்கோ...

    ReplyDelete
  7. ஆகா! அருமையான துளிகள்.

    ReplyDelete
  8. முத்த ஆராய்ச்சி அருமை! வாழ்த்துக்கள்! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete
  9. எடுத்தும் கோர்த்தும் கலை(ளை)த்தும் ... தீராத் தேன் துளிகளாய்....

    ReplyDelete
  10. முத்த சப்தங்கள் ரொம்ப நல்லாயிருக்கு...

    ReplyDelete
  11. முடிவில்லா முத்தப் புராணம் நெடும் தொடரா ?

    ReplyDelete
  12. அன்பு கேட்ட இடமெல்லாம்
    வெறிச்சோடி வெளித்துவிட
    உதிர்ந்துகொண்டிருந்த கனவை
    இழுத்து
    வெற்றிடம் நிரப்புகிறாள்
    எங்கள் கவிதாயினி.

    ஆமா அக்கா நெப்போலிய முத்தம் என்றால் என்ன?

    ReplyDelete
  13. ஆஹா.. ஹேமாவின் அன்பு முத்தங்கள் என்றென்றும் தொடரட்டும்..

    ReplyDelete
  14. சித்தாரா.....நெப்போலிய முத்தம்....போதையில் தரும் முத்தம்.....சும்மா ஒரு கற்பனைதான்.கிண்டல் இல்லையே !

    நேரப்பிரச்சனையால் உப்புமடச்சந்தியை மறந்தே விட்டேன்.இங்கு அப்பப்போ சும்மா எதையோ கிறுக்கி வைக்கிறேன்.என்றாலும் என்னை வந்து அணைக்கும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றியும் அன்பும் !

    ReplyDelete
  15. Dear
    realy GRET
    asirvatham
    tamilnadu

    ReplyDelete