Sunday, November 18, 2012

தூபம்...

நான் தெரியாதுபோல
நடிப்பதைக்
கண்டுபிடித்துவிடுவாயோ 
ம்ம்ம்...
உன் ஆலாபனையை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியில் நீ.

நீயோ...
விடுகதைகள்போல
பலவற்றைச்
சொல்லிச் சொல்லி 
விடுவிக்கிறாய்
அந்த நேரத்தின்
உன் முகபாவமே
அலாதிதான்
சொல்லத் தெரியவில்லை.

இல்லை இல்லை...
அதுவும் இதுவும் 
ஒன்றில்லையென்று 
சொல்ல நினைத்தும்
ஆகாதது பற்றிச்
சொல்லி ஆகாதென்று 
பேசாமலிருக்கிறேன்.

நீயோ...
உறுதியாக்கிக்கொள்ள
படாத பாடு படுகிறாய்
உன் அவஸ்தையும்
ரசனையாகவே இருக்கிறது.

இடைக்கிடை 
தவறு...தப்பு
எனச் சொல்ல 
விழைகிறேன்
விடுவதாயில்லை 
உன் அவசரம்.

நான்...
நீ...
இருள்...
சம்பந்தப்பட்டது என்றாலும்
இயல்புதான் என்கிறாய்
அலாதியான
உன் இயல்போடு.

சொல்லிக்...கொ...ண்...டே
கேட்டுக் கேள்வியில்லாமலே
அந்தி நட்சத்திர இருளில்
என் உணர்வுகளைத்
தின்னத் தொடங்குகிறாய்
சிவப்பு நிற மதுவின்
உதவியோடு
மிகமிகக் கவனமாக!!!

ஹேமா(சுவிஸ்)

25 comments:


  1. உன் அவஸ்தையும்
    ரசனையாகவே இருக்கிறது.

    ரசிக்கவே செய்கிறது அழகு சகோ.

    ReplyDelete
  2. unarvai!

    urukki vitteeka ....

    vaarthaiyil.....

    ReplyDelete
  3. காலையில் வாசலில் இங்கே பெண்கள் நீர் தெளிப்பார்கள், நம்மேல் பட்டுவிடுமே என்று சற்று தள்ளி நடந்தாலும் நம் மேல் படாமல் அவர்களின் தெரிப்பு இருக்கும் லாவகமாய்.. அப்படிதான் எழுதி செல்கிறீர்கள்... :)

    ஆழ்மனத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் புறவாழ்க்கையாக நமக்கு அமைகிறது... முடியும் என்றால் அதுவே, முடியாது என்றால் அதுவே... so always care on ur 'FEELINGS' ஏனெனில் அவை தான் உங்கள் வாழ்கையை தீர்மானிக்கன்றன :)

    ReplyDelete
  4. ஆஹா.. ரசனை நன்றாக இருக்கு.

    நீங்கள் எப்படிச் சொன்னாலும் விடுவதாயில்லைப்போல:).

    ReplyDelete
  5. நானும் ரசித்தேன்!

    ReplyDelete
  6. வித்தியாசமான அனுபவம். மனதை வருடி செல்கிறது.

    ReplyDelete
  7. தூபத்தின் வாசனை இன்னும் யாசிக்க வைக்கின்றது!

    ReplyDelete
  8. நானும் நிறையவே ரசித்தேன் கவிதை வரிகளுக்கேற்ற தூரிகை பெண் !!!!

    ReplyDelete
  9. நீயோ...
    விடுகதைகள்போல
    பலவற்றைச்
    சொல்லிச் சொல்லி 
    விடுவிக்கிறாய்
    அந்த நேரத்தின்
    உன் முகபாவமே
    அலாதிதான்
    சொல்லத் தெரியவில்லை.

    ReplyDelete
  10. அப்பப்பா...
    என்ன ஒரு வார்த்தைக் கோர்வை...

    சிக்குண்ட சிறகுகள்
    பறப்பதை மறந்து
    இருக்கும்போதே இறப்பு நிலையை
    இயல்பாய் கொடுத்ததோ
    உன் அன்பின் கனிவில்
    உயிரின் நிலை மறந்த நான்
    இறப்பு நிலை என்றழைத்தது
    தவறோ??
    இல்லையில்லை
    தவறில்லை...
    என்னுயிரின் நிலைப்பை
    கொஞ்சம் கொஞ்சமாய்
    களவாடி விட்டாயே
    இதுவும்
    இறப்பு நிலையே!!

    ReplyDelete
  11. //நான்..
    நீ..
    இருள்..
    சம்பந்தப்பட்டது//
    சான்ஸே இல்லை. எப்படி இவ்வளவு கிக்கா எழுதறீங்க? :)

    கவிதையை போலவே படத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  12. கற்பனையும் வார்த்தைப் பிரயோகமும் வித்தியாசமாய் உள்ளது.அருமை.

    ReplyDelete
  13. வலிகளைத் தாங்கிக் கொண்டு அல்லது
    வலிக்காதது போல் நடித்துக்கொண்டு தான்
    சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது....

    இனிய தோழி ஹேமா... நன்று.

    ReplyDelete
  14. "ஆலாபனையை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்"

    நாங்களும் கவிதையை ரசித்தோம் ஹேமா.

    ReplyDelete
  15. உன் அவஸ்தையும்
    ரசனையாகவே இருக்கிறது....

    எல்லாருமே இப்படிதானே, தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறீர்கள்... தெரிந்ததை காட்டிக் கொண்டால்தான் என்ன!!!

    எங்களின் அவஸ்தையை ரசிப்பதில் எப்போதுமே உங்களுக்கு அலாதி பிரியம்... நடக்கட்டும்...

    கவிச்சக்கரவர்த்தினி ஹேமாவின் கவிதை வழமை போல் சிறப்பு...

    ReplyDelete
  16. உயிரோசையில் தங்கள் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. வார்த்தைகள் உங்களிடம் வசப்பட்டு நிற்கின்றன.

    ReplyDelete
  18. //நீயோ...
    உறுதியாக்கிக்கொள்ள
    படாத பாடு படுகிறாய்
    உன் அவஸ்தையும்
    ரசனையாகவே இருக்கிறது....//
    என்ன ஒரு வில்லத்தனம்!!!! வில்லி ஹேமா...

    ReplyDelete
  19. பொய்களையும் பாசாங்குகளையும்
    பேசாமல் பொறுத்து முழுங்குவதில்
    வேஷமிடாத கவிதைகள் பிறக்கிறதே.
    அருமை.

    ReplyDelete
  20. Aahaa... Arumai.. Arumai... Idhaith thavira solla varththaigal edhum ilai ennidam...

    ReplyDelete
  21. ஹேமா! அழகான நடையில் ஓசிந்து செல்லும் கவிதை...

    ReplyDelete