Friday, September 14, 2012

நல்லூரில் நீதானா...

பாவமன்னிப்புக்களை
புறக்கணிக்கும்
சிலுவையில்லா
புதிய
சாமி ஒன்று வேண்டும்
எமக்கிப்போ
ஒரு.....
கொலை செய்ய
மன்னிப்போடு.

எம்மைக்
கூண்டோடு அழித்தவன்
நல்லூர்க் கந்தன்
வீதி மண்ணில்
கால் புதைய.

கண்ணிருந்தால்
எம்மையும் அகதியாய்
அலைக்கழித்து அநாதையாய்
அழித்திருக்கமாட்டான்
திலீபனையும்
தின்றிருக்கமாட்டான்
தெய்வமா...
அவன் கந்தனவன் ?

நல்லூர்க் கந்தனே
இன்று உன் வீதி சுற்ற
அவனுக்கும்
கால்
கொடுத்திருக்கமாட்டாய்
இன்னுமா நாம் நம்ப
நீ......
நம் நல்லூரில்
உண்மையென ?!

ஹேமா(சுவிஸ்)

36 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ:)

    ReplyDelete
  2. என்ன ஹேமா உங்களுக்கு ஒரு கொலை செய்யோணுமோ?:)) ஹா..ஹா..ஹா.. எல்லோரும் கொல வெறியோடதான் அலைகினம்:)).. என்னைத்தவிர:)) ஹையோ முறைக்காதீங்கோ:).

    ReplyDelete
  3. கந்தன் இல்லை எனச் சொல்லாதீங்கோ ஹேமா... அவருக்குத் தெரியும் எங்க, எப்ப, என்ன செய்யோணும் என..

    ReplyDelete
  4. வாங்கோ அதிரா....முகப்புத்தகத்தில பாத்தன் இந்தப்படத்தை.சரியான கோவமா இருக்கிறன்.பூஸாரிட்ட ஒரு பாட்டுப் பாடச்சொல்லுங்கோ.போதும் !

    ReplyDelete
  5. நல்ல கவிதை ஹேமா... படம் பார்த்ததும் கவிதை எழுத நினைத்தீங்களோ? இல்ல கவிதை எழுதிட்டுப் படம் போட்டீங்களோ?

    ReplyDelete
  6. படம் பாத்தபிறகுதான் எழுதினன் இப்பத்தான்.சரியான கோவம்.என்னாச்சும் செய்யவேணும்.இங்க முட்டியழ வெறும் சுவர்தான்.திட்டக்கூட யாருமில்ல.எழுதினா கொஞ்சம் ஆறிடுவன் !

    ReplyDelete
  7. கொலைசெய்ய உங்களைத் தவிரவோ......இதுதான் இண்டைக்கு நான் கேட்ட முதல் பொய் பகிடி...ஆளைப் பாருங்கோ...கொலைகாரி...ஹாஹா !

    ReplyDelete
  8. கொலைவெறி கவிதை! :)

    ReplyDelete
  9. இந்த முறை கவிதையும் படமும் பிகாசோவாக இல்லை.நாம் நாமாகவும் இல்லை.

    ReplyDelete
  10. அதர்மங்கள் தலைதூக்குகையில்
    யுகம் தோறும் யுகம் தோறும்
    அவதாரமெடுப்பேன் என்று கண்ணன் கீதையில் சொன்னதுபோல..
    நடக்கும் என்று நம்புவோம்..
    பாதகர்கள் அதிகள் விளைந்து போனதால்
    கடவுளின் அசைவுகளும் சற்று
    மந்தமாகிப் போயிற்று...
    சம்காரம் நடக்கும் விரைவில்....

    ReplyDelete
  11. இறுதி வரிக்ள் நிச்சயம் கந்தனின்
    மனச்சாட்சியை உலுக்கியிருக்கும்
    என்ன செய்கிறான் பார்ப்போம்
    இல்லையெனில் அவன் மீதுகொண்ட பக்தியை
    மறுபரிசீலனை செய்வோம்
    மனம் கீறிய பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கவிதையை விட உங்கள் பின்னூட்டப் பொருமலை ரசிக்கிறேன் ஹேமா..

    ReplyDelete
  13. வணக்கம் அக்கா,
    எம் மன உணர்வுகளையெல்லாம் ஒருங்கு சேர்த்து, தெய்வத்திற்கே கவிதை மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.
    ம்....என்று சொல்வதைத் தவிர வேறு என்ன எம்மிடம் இருக்கிறது

    ReplyDelete


  14. கந்தா ! உனையும் ஒருவன் ஒருத்தி
    நிந்தனை செய்கின்றாரோ என மனம்
    நொந்தேன்
    நான் கண்ணீரில்
    கலங்கி நின்றேன்.

    நற்கதி தரும் நீ
    நின் மக்களை
    நிற்கதியாய் விடுவாயோ ?

    சேவற்கொடியோனே ! உன்
    வேலை எடுத்து வா . அதற்கு
    வேளை வந்துவிட்டது.

    கந்தா ! குமரா என
    கதறும் உன் பக்தருக்கு
    கருணை காட்டு.


    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  15. கடவுள் மேலும் கோபமா...!

    ReplyDelete
  16. கவலை வேண்டாம்
    ஆட்டிப் படைத்த சூரனையும்
    ஆட வைத்து சம்கரித்தான் நம் கந்தன்
    அப்படியே இந்த கயவர்களையும்
    காலம் பார்த்து தண்டிப்பான்...

    அவனுக்கும் வலி இருந்தால் இன்னும் செய்வான்...

    ReplyDelete
  17. தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்லுவார்கள். அதிலேயே இப்போதெல்லாம் சந்தேகம் வரும் அளவில்தான் இருக்கிறது ஃப்ரெண்ட். உங்கள் கோபமும் கொலைவெறியும் ரொம்பவே நியாயம்தான்.

    ReplyDelete
  18. நீதி செத்துப் போய்விட்டது பாவம் கந்தன் என்ன செய்வார் தோழி :(அழுக்குப் படிந்த இந்தப் பூமியில் ஆண்டவனும் மாய மான்தான் .சொல்லப் போனால் கடவுளே தன் வாழ்வில் எல்லாம் என்று வாழும் யீவன்கள் கூட அதைத் தானாகவே தூக்கி எறியும் காலம் நெருங்கி விட்டது :(

    ReplyDelete
  19. காலை வணக்கம்,மகளே!ஏலவே சொல்லியிருக்கிறேன்.புகைப்படத்தைப் பார்த்த உங்களுக்கே இப்படியென்றால்..................................(புரிந்து கொள்வீர்கள்)

    ReplyDelete
  20. கண்ணிருந்தால்
    எம்மையும் அகதியாய்
    அலைக்கழித்து அநாதையாய்
    அழித்திருக்கமாட்டான்
    திலீபனையும்
    தின்றிருக்கமாட்டான்
    தெய்வமா...
    அவன் கந்தனவன் ?

    ReplyDelete
  21. கவிதை அருமையா இருக்கு சகோதரி.

    வரிகள் எல்லாம் அழகு.....

    ReplyDelete
  22. கடவுளையே நிந்திக்கும் அளவுக்கு இலங்கையில் கொடுமைகள் நிகழ்ந்துள்ளது வருத்தமடையச் செய்கிறது! தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்கிறார்கள்! பார்ப்போம்!

    ReplyDelete
  23. இயலாமையை
    இல்லாதவனிடம்
    சொல்வதா

    மனிதர்கள்
    மறப்பதில்லை - சிலநேரங்களில்
    மன்னிப்பதுமில்லை

    புலம் பெயர்ந்தது
    பிழைப்பதற்காக மட்டுமல்ல
    பிழையை சரிசெய்யவும்


    ReplyDelete
  24. வேதனையில் எழுந்த வரிகள்!

    ReplyDelete
  25. நல்லூர்ல எனக்கு தெரிஞ்சி பால்கார கந்தன்தான் இருக்கார்.எங்க ஊர் பொய்கை நல்லூர்.

    உங்களின் உள்ளில் இலங்கை எனும் நெருப்பு கனன்று கொண்டிருப்பது இந்த கவிதையின் மூலம் நன்றாகவே தெரிகிறது.

    இதற்கெல்லாம் காலம் மட்டுமே பதில் சொல்லும்.காலம் உங்கள் காயத்தை ஆற்றும்.

    உங்களைப்போன்ற கவிதை எழுதும் பதிவர்களுக்கு இந்த பதிவு ஒருவேளை பயணுள்ளதாக இருக்கலாம்.


    ReplyDelete
  26. பதைபதைப்பாய் பகிர்ந்துகொள்ளவாவது முடிகிறதே என்று அறுதல் கொள்ளவேணும் தற்போது.

    ReplyDelete
  27. அக்காச்சி கந்தனை நல்லாத்தான் நாக்கை புடுங்கும் படி கேள்விகேட்டு இருக்கீங்க :))

    அவர் பதில் சொல்ல மாட்டார் பாருங்கோ... அவர் நிஜமாய் இருந்தால் நாங்கள் ஏன் இப்படி அலையிறோம்....

    அவரவர் நபிக்கை அவரவருக்கு நமக்கு நம்பிக்கை இல்லயப்பா உவரில் :(

    ReplyDelete
  28. நல்லூரான் நம்பினோரை கைவிட்டதில்லை ஆனால் காலம் பிடிக்கும் முருகன் வேட்டையாட.ம்ம்ம் 

    ஏன் இந்தக் கொலவெறி     கடவுள் சன்னிதானத்தில்.

    ReplyDelete
  29. மனிதன் செய்ததற்கு கடவுள் என்ன செய்வான்?

    ReplyDelete
  30. வலி அறிந்தவளின் ஆற்றாமையும் வேதனையும் கவிதைவெளிப்பாடாய் அமைய, என்ன சொல்வதென்று அறியாமல் கையாலாகாதவளாய் மௌனத்தைப் பின்னூட்டமாக்கிப் போகிறேன் ஹேமா.

    ReplyDelete
  31. என்ன செய்வது அக்கா நாம் குமுறத்தானே முடியும்...................

    அவனது கா்ல் நல்லாத்தான் இருக்கு...........

    ReplyDelete
  32. நீண்ட நாட்களுக்குபிறகு ஒரு உணர்வுப்பூர்வமான கவிதை..... நெஞ்சடைத்தது போனேன்........ நன்றி சகோ ஹேமா அவர்களே......

    ReplyDelete
  33. நல்ல கவிதை.....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  34. நல்லூர் கந்தனுக்குக்கும்
    நல்லவர்கள் அருகில் தேவைப்படுது போலும்,
    அதான் எடுத்துக் கொண்டான்.

    ReplyDelete
  35. உப்புமடச் சந்தியில் ஏன் பதிவிடுவதில்லை?

    ReplyDelete
  36. பாவமன்னிப்புக்களை
    புறக்கணிக்கும்
    சிலுவையில்லா
    புதிய
    சாமி ஒன்று வேண்டும்“


    இன்னொரு சாமியா...?
    இருக்கிற சாமியே எதையும் செய்யக் காணோம்...

    என் இனிய தோழி ஹேமா... சாமியைத் திட்டி என்ன பயன்? ஏற்கனவே இதனால பயன் இல்லை என்ற பிறகு ஆசாமிகள் தான் அருள் வாக்கு கொடுக்க வேண்டும் தோழி.

    கவிதை மொழி கருத்து அருமை.

    ReplyDelete