Thursday, September 13, 2012

பார்வைப் போர்...

குளம் தொடும்
மழைக் குமிழ்க் கண்களுக்குள்
விடுதலைக் கனவுகளை
சேகரித்த வன்னியன் அவன்
போதாதோ அது
அவனோடு
நான் போர் தொடுக்க.

வார்த்தைப் போர் தொடுத்தால்
மடித்திழுக்கிறான்
கண்களால் மடிமீது
வாள் எடுத்து வாவென்று
ஆணையிட்டேன்
இமைக்க மறந்தவனாய்
என்....
இடைவாளை எடுக்கின்றான்.

இரங்குவேனோ என்றவளை
ஓர்மம் கலைத்து
காதல்....
கன்னத்து
பருக்களை நிரப்ப
விரல்வழிக் கவிதை கேட்டு
கொஞ்சம்
ஒத்தி வைக்க
கெஞ்சுகிறான் வீரனவன்
போரையும் போரையும் !

ஹேமா(சுவிஸ்)

27 comments:

  1. ஓர்மம் "கலைத்தது" காதல்...?
    போரையும் போரையும்?
    பார்வை ஒன்றே போதுமே..பல்லாயிரம் சொல் வேண்டுமோ என்று பார்வைப் போரா?!!

    ReplyDelete
  2. குளம் தொடும்
    மழைக் குமிழ்க்கண்களுள்
    விடுதலை கனவுகளை ....................

    ReplyDelete
  3. வார்த்தைப் போர் தொடுத்தால்
    மடித்திழுக்கிறான்
    கண்களால் மடிமீது
    வாள் எடுத்து வாவென்று
    ஆணையிட்டேன்
    இமைக்க மறந்தவனாய்
    என்....
    இடைவாளை எடுக்கின்றான்.... இடைவாளா!! அது எப்படி இருக்கும்?

    ReplyDelete
  4. ம்ம்ம்
    செம போர் தாங்க போங்க ம்(;

    ReplyDelete
  5. காதல் போர் படிக்க போர் அடிக்கவில்லை. அத்தனை வரிகளிலும் இனிமை. சூப்ப்ர் ஃப்ரெண்ட்.

    ReplyDelete
  6. வார்த்தைகள் உபயோகம் வியக்க வைக்கிறது!

    ReplyDelete
  7. பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு.

    ReplyDelete
  8. கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  9. காதல் போர்! ரசிக்கவைத்த கவிதை!நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    ReplyDelete
  10. போரையும் போரையும் !//!ம்ம் காதல் போர் என்றால் ரசிக்களாம் .கவிதையை!

    ReplyDelete
  11. விடுதலைக் கனவுகளை சேகரித்த வன்னியன்..............ஹும்...........!

    ReplyDelete
  12. நல்ல வரிகள்...
    அழகு

    ReplyDelete
  13. இப்படியும் காதல் செய்யலாமா?

    முயற்சிக்கணும்...

    ReplyDelete
  14. இமைகளை கணையாகவும்
    பார்வையை வில்லாகவும் ஆக்கிய
    அழகிய காதல் முழக்க கவிதை...

    ReplyDelete

  15. கன்னத்து
    பருக்களை நிரப்ப
    விரல்வழிக் கவிதை கேட்டு//ஹேமா ஹேமா... சொக்க‌ வைக்கிறீர்க‌ள். எந்த‌ப் போரை ஒத்தி வைப்பான‌வ‌ன்?!

    ReplyDelete
  16. இப்படி வாிகள் தந்தால் போர் நடக்குமா ??

    ReplyDelete
  17. நல்ல கற்பனை...

    //வார்த்தைப் போர் தொடுத்தால்
    மடித்திழுக்கிறான்
    கண்களால் மடிமீது
    வாள் எடுத்து வாவென்று
    ஆணையிட்டேன்
    இமைக்க மறந்தவனாய்
    என்....
    இடைவாளை எடுக்கின்றான்.//

    அழகாகச் சொல்லிட்டீங்க... வார்த்தைகளில் போர் தொடுத்து வெல்ல முடியாது... வேறு வழிதான் இதுக்குக் கையாளோணும்:)).

    ReplyDelete
  18. நயம் என்றால் இது தான்.

    ReplyDelete
  19. வணக்கம் சகோதரி..,
    உங்களது கவிதைகள் அருமை. நானும் சுவிஸில்தான் வசிக்கிறேன். எனினும் இங்கு வந்து சிறிது காலமே என்பதால் இலக்கிய தொடர்புகள், நட்பு என்பவற்றை ஏற்படுத்திக்கொள்ள ஆவலாகவிருக்கிறேன். நீங்கள் விரும்பின் உங்களது ஈமெயில் முகவரியைத் தரவும். உங்களது நட்பையிட்டு மகிழ்ச்சிகொள்வேன்..!

    Kanchana,Swiss

    ReplyDelete
  20. என் இனிய தோழ ஹேமா...
    கூரிய கவிதை வாளால் தான் பார்வை போர் தொடுத்து இருக்கிறீர்கள். சூப்பர் கவிதை தோழி.

    ReplyDelete
  21. மிக அருமை ஹேமா

    ReplyDelete