Monday, September 03, 2012

அழைப்...பூ !


தள்ளிக்கொண்டேயிருக்கிற
மனதையும்
நெருங்கிக்கொண்டேயிருக்கிற
என்னையும்
அதட்டிக்கொண்டே
இதை எழுதுகிறேன்.

நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ...
வார்த்தைப் பூக்களைப்
பரப்பிவிட்டு
பிடித்தவற்றைப்
பொறுக்கியெடுவெனச்
சாபமிடுகிறாய்.

குழந்தைகளாய்
அள்ளியெடுக்கிறேன்
நீ தந்தது
நான் தந்தது
இதில்...
எதை விட
எதை அணைக்க.

நம் எண்ணங்கள் கருவுற
பெற்ற குழந்தைகளை
வளர்க்க
என்னிடமே தந்திருக்கிறாய்.

நீ தந்த
வார்த்தை வாரிசுகளை
என்னோடு கட்டியணைக்க
ஒருமுறை...
ஒரே ஒருமுறை வா
வந்துவிடு
இன்னும்....
கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பும் உனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

40 comments:

  1. செயலில் காட்டச் சொல்லும் காதலுக்கு மதிப்பே தனி.

    ReplyDelete
  2. //நான் ஆறிய
    ஆடிய மகிழமரம் நீ..//

    அருமையான வரிகள் சகோ, நல்ல சிந்தனையும் கூட!

    கடைசிவரிகள் கவிதையில் முத்தாய்ப்பு!

    ReplyDelete
  3. இதில்...
    எதை விட
    எதை பாராட்ட?

    ReplyDelete
  4. காதலின் மன்றாட்டு, கழுமரத்தின் கீழ் முளைத்த புல்வெளி வண்ணத்துப் பூச்சிகளின் மொழியில்

    ReplyDelete
  5. நம் எண்ணங்கள் கருவுற
    பெற்ற குழந்தைகளை
    வளர்க்க
    என்னிடமே தந்திருக்கிறாய்.//

    அருமை அருமை
    கவிதை மனம் தடவிச் செல்லும்
    இனிய தென்றலாய்...
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நீ தந்த
    வார்த்தை வாரிசுகளை
    ///////////////////////////////////

    அழகான செதுக்கல்கள்....

    ReplyDelete
  7. வித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. //வா
    வந்துவிடு
    இன்னும்....
    கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
    அந்த வாய்ப்பும் உனக்கு!!!//

    :))

    ReplyDelete

  9. நீண்ட இடை வெளி!வெளிநாட்டுப் பயணம், பதிவர் திருவிழா!என பலவகைக் கரணங்கள்! யாருடைய வலைவழியும் வர இயலவில்லை
    வழக்கம் போல் கவிதை அருமை! ஆனால்

    // நான் ஆறிய
    ஆடிய மகிழமரம் நீ...
    வார்த்தைப் பூக்களைப்//

    இதில் ஆறிய என்ற சொல்லுக்கு வேறு ஏதேனும் பொருள் உண்டா..?
    விளக்கினால் நன்று! நன்றி!

    ReplyDelete
  10. வார்த்தைப் பூக்களைப்
    பரப்பிவிட்டு
    பிடித்தவற்றைப்
    பொறுக்கியெடுவெனச்
    சாபமிடுகிறாய்.

    ReplyDelete
  11. /நீ தந்த
    வார்த்தை வாரிசுகளை
    என்னோடு கட்டியணைக்க
    ஒருமுறை...
    ஒரே ஒருமுறை வா
    வந்துவிடு
    இன்னும்....//

    அழகு...

    ReplyDelete
  12. தள்ளிக்கொண்டே இருக்கிற மனதையும் நெருங்கிக்கொண்டே இருக்கிற என்னையும் ஏன் அதட்டவேண்டும்?

    ReplyDelete
  13. சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete
  14. ஹேமா!எனக்கு தெரிந்ததெல்லாம் மார்கழியில் வீட்டின் முன்னால் மலர் பறித்த பெண்களே:)

    ReplyDelete
  15. காதல் ரசம் பொங்கும் கவிதை! அருமை!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  16. எதை விட
    எதை அணைக்க.//// சூப்பர்

    ReplyDelete
  17. அழகிய வரிகள்..

    ReplyDelete
  18. உதிர்த்த வார்த்தைப்பூக்களைப் பொறுக்கச் சொல்லி சாபமிட்ட மகிழமரம் சாபத்துக்கு பதில் வரமளித்திருக்கக் கூடாதா? பார், அதனால்தானோ என்னவோ, வார்த்தைப் பிள்ளைகளைத் தாயோடு கட்டியணைக்கக் காலக்கெடு கொடுத்தாகிவிட்டது... இனி என்ன செய்ய? துரிதமாய் செயல்படு மனமே... அழகு கவிதை ஹேமா.. பாராட்டுகள்.

    ReplyDelete
  19. அழகு கவிதை ஹேமா...
    வழக்கம்போல்...
    ஆறிய என்பதை விளக்குங்களேன்...

    ReplyDelete
  20. அழகிய கவிதை ஹேமா.

    ReplyDelete
  21. தள்ளிக்கொண்டேயிருக்கிற
    மனதையும்
    நெருங்கிக்கொண்டேயிருக்கிற
    என்னையும்...
    அசத்திட்டீங்க ஹேமா.

    ReplyDelete
  22. என் இனிய தொழி ஹேமா
    “வார்த்தை வாரிசுகளைக் கட்டியணைக்க“ - முடியாது எனத்தெரிந்தும் அழகாக அழைப்பு விடுத்துள்ளீர்கள்.

    அருமையான கவிதை தோழி.

    ReplyDelete
  23. வணக்கம்

    தங்கள் மின்வலையை இன்றுதான் படித்தேன்
    திங்களைப் போன்று கருத்துக்கள் ஒளிர்ந்தன
    வாழ்த்துக்கள்

    அழைப்..பூப் கவிதை மிகஅருமை!
    கவிஞா் ஏமா சொல்இனிமை!
    மழை..பூ போன்ற தமிழ்ப்பொழிவில்
    மனப்பூ குளிரும்! மகிழ்ந்தாடும்!
    இழைப்..பூ வேலை! பலவண்ணம்!
    இணைப்பு கொடுக்கும் நெஞ்நத்துள்!
    பிழைப்..பூ இன்றிக் கவிபாடும்
    பிழைப்பு வளர வாழ்த்துகிறேன்!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kambane2007@yahoo.fr


    ReplyDelete
  24. ஆழமான அன்பின் வெளிப்பாடு ஓர் அழகிய கவிதையாக இங்கே அருமை !!!!!......வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  25. அழகிய உணர்வுகள்
    லலிதமான வார்த்தைக் கோர்வைகள்
    எப்போது வாசித்தல் லயித்து விடுகிறது மனது

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் தோழி அருமையான கவிதை
    வரிகளிற்கு !..இன்று என் தளத்தில் நான் வெளியிட்டுள்ள என் பாடலுக்கு உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன் சகோ .

    ReplyDelete
  27. அருமையான...
    அழகான...
    கவிதை
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  28. பூவின் அழகில் எதை தவிர்க்க எதைவிட எதை அணைக்க அருமை உவமை!

    ReplyDelete
  29. ஒரே ஒருமுறை வா
    வந்துவிடு
    இன்னும்....
    கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
    அந்த வாய்ப்பும் உனக்கு!!!//ம்ம் காதலுக்கும் பொருந்துமோ பூவின் அழைப்பு!ம்ம்

    ReplyDelete
  30. பல்வேறு சூழல்களை எடுத்துக்கொள்ளத் தோன்றுமாறு அமைந்திருக்கிறது கவிதை.வார்த்தைப் பிரயோகம் அருமை.

    ReplyDelete
  31. சூழல்கள் மாறினாலும் நாம் பரிச்சயப்பட்ட இடங்கள் மீதான அன்பும்,

    ஐம்புலன்களால் தீண்டப்பட்ட மண்ணின் வாசம் மாறிவிடுவதில்லை.

    பூவின் மீதான காதல் வரிகளில் தெறிக்கின்றன.

    கவிதை மிக அருமை சகோதரி !

    ReplyDelete
  32. நான் ஆறிய
    ஆடிய மகிழமரம் நீ......

    ஆறிய....இளைப்பாறிய....

    என்னை ஆற்றிய....

    ஆறு...அடங்குதல்,தணித்தல் என்றும் சேர்த்துக்கொள்ளமுடியும் !

    ReplyDelete
  33. ஹேமா, கவிதையின் சோகம் தாக்குது. வெறென்ன சொல்ல!

    ReplyDelete