Monday, August 20, 2012

அப்பாவின் அழகு பொம்மை...

அப்பா...
நிறைய அழகு பொம்மைகளைச்
சேர்த்து வைத்திருப்பதாக
சொன்னார்.

ஒரு பொம்மையை மட்டும்
கொஞ்சம் துப்புரவாக்கி
கொஞ்சம் அழகாக்கி
அடுக்களையில்
வைத்திருப்பதாகவும் சொன்னார்.

அம்மாவைத்தவிர
எதையும் எவரையும்
கண்டதில்லை நான்
அடுப்படியில்.

சும்மாதான் கேட்டுப் பார்த்தேன்
ஒரு பொம்மை
விளையாட வேண்டுமென
கை காட்டினார்
அம்மாவின் பக்கம்.

இப்போ...

அப்பாவும்
அவர் பொம்மைகளும்
இல்லாமல் போயிருந்தன.

அப்பாவின் அறையில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்
அம்மா புறுபுறுத்தபடி.
வேறும் சில பொம்மைகள்
இருக்குமோ
அப்பாவின் அறையில்!!!

ஹேமா(சுவிஸ்)

29 comments:

  1. அப்பாவின் அறையில்
    எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்
    அம்மா புறுபுறுத்தபடி.
    வேறும் சில பொம்மைகள்
    இருக்குமோ
    அப்பாவின் அறையில்!!!///

    Fantastic Hema...nice Congrats :-)))

    ReplyDelete
  2. Appakku amma pommai , amma madumala innum pala

    ReplyDelete
  3. அழகான கவிதை ஹேமா! நல்ல முடிவு! அம்மா புறுபுறுத்துக்கொண்டு தேடுகிறார் என்பது அழகான ஒரு இடமாகும்! உண்மையில் அம்மா புறுபுறுக்கவில்லை! அப்பா இல்லாமல் போன கவலையை அப்படி வெளிப்படுத்துகிறார்!

    அருமையான கவிதை!

    ReplyDelete
  4. தரமான படைப்பாக்கம் அக்கா ..
    கேட்ட கேள்வி நச் ...

    ReplyDelete
  5. நல்ல கவிதை.. நான் முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. அருமை... தொடருங்கள்...

    வாழ்த்துக்கள்... நன்றி... (5)

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை ஹேமா.

    ReplyDelete
  8. என் மாமா ஒருவர் தான் எழுபதுகளிலேயே வாஷிங் மெஷின் வாங்கி விடாதாகக் கூறி மனைவியைக் கை காட்டுவார். அது நினைவுக்கு வந்தது. அப்பா அறையில் வேறு பொம்மைகள் இல்லாதிருக்கட்டும்!

    ReplyDelete
  9. புரு புருக்கும் அம்மா /கள்ளமில்லா குழந்தை /ஆதிக்கதந்தை மூனுபேரையும் சேர்த்து அழகிய கவிதை தந்திருக்கீங்க .
    ஆனா பொம்மை வைத்திருக்கேன் என்றவரை பாலசந்தர் பட ஹீரோயின் மாதிரி கற்பனையில் மிதித்து விட்டேன் :))

    ReplyDelete
  10. ம்ம் புறுபுறுத்த படி!ம்ம் அழகான கவிதை.

    ReplyDelete
  11. அப்பாவின் அறையில்
    எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்

    படமும் கவிதையும் அழகிய பொம்மையாய் !

    ReplyDelete
  12. அழகான வரிகள். தொடருங்கள்.

    இன்று என்னுடைய தளத்தில் ஏணிப்படி

    ReplyDelete
  13. ஒரு பொம்மையை மட்டும்
    கொஞ்சம் துப்புரவாக்கி
    கொஞ்சம் அழகாக்கி
    அடுக்களையில்
    வைத்திருப்பதாகவும் சொன்னார்.

    கொலுவில்
    வைக்க வேண்டியதெல்லாம்
    அடுக்களையில்
    வைத்துவிட்டு
    அறைக்குள் தேடினாள்....

    பாவம் அழகு பொம்மை

    நன்றிங்க என் இனிய தோழி ஹேமா.

    ReplyDelete
  14. பின்னிட்டீங்க ஹேமா! பெரும்பாலான தாய்மார்களின் நிலையை இதைவ்ட அழகா சொல்ல முடியாது.
    இதோ பொம்மைக்காக என் ஒட்டு.

    ReplyDelete
  15. பொம்மைகள் அற்ற அறைகள் உள்ள வீடுகள் நிறைந்து கிடக்கிற தேசத்தில் அம்மாக்கள் இன்னும் அப்பாக்களையும் ,பொம்மைகளையும் தேடி ஓடிக்கொண்டே இருக்கத்தான் செய்கிறார்கள்,

    ReplyDelete
  16. ஆஹா... ரசனையான வரிகளில் புன்முறுவல் பூக்க வைத்த அழகுக் கவிதை, அம்மா புறுபுறுக்கிறார் என்ற வரிகளை மிக ரசித்தேன்.

    ReplyDelete
  17. பொம்மை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் சகோ. நீங்கள் குறிப்பிட்ட விதம் மிகவும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  18. நல்ல கவிதை சகோ! (TM 10)

    ReplyDelete
  19. மிகவும் ரசிக்கவும் நெகிழவும் வைத்த கவிதை! அம்மா ஒவ்வொரு வீட்டிலும் பொம்மையாக மட்டுமா வாழ்கிறார்? சிறப்பான படைப்பு!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    ReplyDelete
  20. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பொம்மைகளாகாக பெண்களை ஆண்கள் கொண்டுள்ளனரோ......
    ஆனாலும் தாய் தான் உண்மையான பொம்மை தன் சேய்க்கு

    அழகான வரிகளில் அழகான கவிதை

    ReplyDelete
  21. வானவில் ஜீவா22 August, 2012 05:37

    அப்பாவும்அவர் பொம்மைகளும் இல்லாமல் போயிருந்தன...........

    ReplyDelete
  22. ஹேமாக்கா எத்தனை அர்த்தம் சொல்கிறது உங்கள் வரிகள்.வாழ்த்துக்கள் அக்கா!!!அருமை!



    ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

    ReplyDelete
  23. இருந்தாலும் இருக்கும்

    ReplyDelete
  24. எனக்கு இன்னும் கறுப் பொருள் விளங்க மறுக்கிறது தோழி...

    ReplyDelete
  25. இல்லாமல் போனபின்
    எத்தனை பொம்மைகள்
    இருந்தென்ன பயன்

    அதென்ன
    சென்றபின் தேடுதல்

    ReplyDelete