Tuesday, April 03, 2012

சுவர்களின் குறிப்புகளில்...

காடு நிரப்பும் நகரமென
சூரிய எச்சில்
படாத முகட்டோடு
நாகரீகக் குறிப்பெடுக்கும்
பென்னாம் பெரிய வீட்டுக்குள்...

தூண்கள் அளவு
கனத்த கதைகளோடு
வாய்வு நிறைத்த வயிறும்
பசிக்கும் மனதோடுமாய்
ஞாபகத் திணறலோடு
மூப்பின் உதிர்வொன்று.

ஜாடைகள் அப்பிய
முகங்களோடு
தலைமுறை காவும்
நீ...ண்ட நிழல்கள்
சிரித்த முறைத்த
ஞாபகச் சுவரோடு
வெப்ப மூச்சு
விட்டு விட்டு ஒடுங்க
ஓடி ஒளித்து விளையாடிய
கண்ணாடி மைதானத்து
பல்லிகளும் இல்லாமல்.

காட்டிச் சொல்லும் தடயங்களை
பைகளில் திணித்தவர்கள்
காணாமல் போனவர்கள்
காதுகளோ
நிமிட முட்களோடு மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)

35 comments:

  1. அம்மம்மாவின் ஞாபகம் வந்துட்டுது.....!!!

    ReplyDelete
  2. மிகவும் வித்தியாசமான ஒரு புகைப்படத்துடன் கவிதை....
    நல்லா இருக்கு

    ReplyDelete
  3. ஞாபகங்களை மீட்டு நெஞ்சை தொட்ட கனமான வரிகள்

    ReplyDelete
  4. ஒன்றுக்கு
    மூன்றுமுறை வாசித்தேன்
    கவிதையின் ஆழம் உணர்வதுக்காக மட்டுமல்ல
    எழுத்தின் நுணுக்கத்தை நுகர

    ம்ம்ம் ... அருமை

    ReplyDelete
  5. படமும் கவிதையும் முதியவர்களின் இன்னொரு உலகத்தினைக் காட்டுது. ஆழமான வரிகள். வரவர ஹேமாவின் படைப்பில் முதிர்ச்சியும் தேர்ச்சியும் தெரிகிறது.

    ReplyDelete
  6. முதுமையின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்தேன் கவிதையில்! மிகப் பொருத்தமான படமும் அருமை! சொல்லாடல் நன்று!

    ReplyDelete
  7. தூண்கள் அளவு
    கனத்த கதைகளோடு
    வாய்வு நிறைத்த வயிறும்
    பசிக்கும் மனதோடுமாய்
    ஞாபகத் திணறலோடு
    மூப்பின் உதிர்வொன்று. வரிகள் அருமை

    ReplyDelete
  8. கவிதை சுப்பரா இருக்கு அக்கா ..எப்புடி அக்கா இப்புடீல்லாம் ..சுப்பர்

    ReplyDelete
  9. அக்கா உங்கட மனதின் வெளிப்பட கவிதை வந்து இருக்கு ...புரியுது அக்கா உங்களோட முதுமையான காலங்களை அழகா வரியிட்டமைக்கு வாழ்த்துக்களும் பெரிய பாராட்டுக்களும்

    ReplyDelete
  10. இளமை கால நினைவுகள் வந்துட்டுதுங்களா?!

    ReplyDelete
  11. முதுமையின் இயலாமையை , தனிமை ஏக்கத்துடன் பார்க்கும் பார்வை .

    ReplyDelete
  12. ஒரு தடவைதான் படிச்சேன். புரியல. இன்னும ரெண்டு தடவை படிச்சுட்டு சொல்றேனுங்கோ. இருந்தாலும் இப்படி திரும்பத் திரும்ப படிக்க வைக்கிற உங்களை...என்ன செய்யலாம்?

    ReplyDelete
  13. முதுமையை இப்பவே கற்பனை பண்றிங்களோ? நல்லாருக்கு ஹேமா. வர்ண வரிகள்.

    ReplyDelete
  14. ஆழமும், நுண்மையும் , சூக்குமும் நிறைந்த கவிதை வரிகள் உணர்வை தொட்டது.

    ReplyDelete
  15. //காட்டிச் சொல்லும் தடயங்களை
    பைகளில் திணித்தவர்கள்
    காணாமல் போனவர்கள்
    காதுகளோ
    நிமிட முட்களோடு மட்டுமே!!!//

    வலுக்கட்டாயமா காலத்தைத் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முதுமையில் வந்தே தீரவேண்டுமென்பதுதான் விதியோ... பயமாயிருக்கு ஹேமா :-)

    ReplyDelete
  16. பொதுவாக நான் எந்த ஒருவிடயத்தையும் மீண்டும் மீண்டும் திரும்ப படிப்பது குறைவு. இந்த விடயத்தில் விதிவிலக்குகளில் உங்கள் கவிதகளும். ஒரு தடவை படித்து சென்றுவிட்டு சில மணிநேரங்களின் பின் மீண்டும் வந்து படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  17. கவி வரிகள் என்னை
    கற்பனா தேசத்துக்கு
    அழைத்துச் செல்கிறது சகோதரி...

    ஆழ்ந்து உணரவேண்டிய வரிகள்.
    உங்கள் கவியில் சொல்லாற்றல் என்னை
    மிகவும் பாதிக்கிறது.
    எத்தனை நுணுக்கமான சொல்லாற்றல்..
    பிரமிப்பாய் இருக்கிறது சகோதரி.

    இளமையாய் இருக்கையிலே
    முதுமையின் தாக்கங்களை
    உணரவைக்கும் அழகிய கவி..

    கவியை விட்டுச் செல்ல மனம் வரவில்லை..
    மனமின்றி செல்கிறேன்.

    ReplyDelete
  18. இரவு வணக்கம்,ஹேமா!எழுத எதுவும் இல்லை,அதுதான் நீங்களே எழுதி விட்டீர்களே????இரண்டு,மூன்று தடவைகள் இரைமீட்டிப் படித்தாலே புரிகிறது!

    ReplyDelete
  19. anaivarin arputhamaana
    vimarsananglai vida naan enna
    ezhuthida mudiyum!
    nantraaka ullathu!

    ReplyDelete
  20. மிகவும் நுணுக்கமான வரிகள் ...என்னோட மர மண்டைக்கு சரியா ஏறலைங்கோ...

    ReplyDelete
  21. சித்திரமே!
    உன் சுவர்சித்திரத்தின் வரைவு ஆழந்தான்!

    ReplyDelete
  22. எப்படி ஹேமா இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்? அருமை.

    ReplyDelete
  23. காட்டிச் சொல்லும் தடயங்களை
    பைகளில் திணித்தவர்கள்
    காணாமல் போனவர்கள்
    காதுகளோ
    நிமிட முட்களோடு மட்டுமே//

    கனமான கவிதை...நல்லாருக்கு ஹேமா

    ReplyDelete
  24. இப்படி வித்தியாசமாய் உங்களால் தான் எழுத முடியும் ஹேமா.

    ReplyDelete
  25. கவிதையை படிச்சுட்டு நான் கேக்க நெனச்சதையே ஸ்ரீராம் கேட்டுட்டாரு.
    கவிதை மிகவும் அருமை!

    ReplyDelete
  26. kastappaddu vaasichan. Thirumpi thirumpi vasikkanum appathan koncham vilankira marithi irukku. Vasichu mudicha piraku oru unarvu varuthe athu than kavithi , varikalellam thiramai

    ReplyDelete
  27. ஞாபகத் திணறலோடு
    மூப்பின் உதிர்வொன்று.

    மனம் கனத்தது..

    ReplyDelete
  28. படமும் வரிகளும் அபாரம் சகோ . மீண்டும் மீண்டும் படித்தேன் .

    ReplyDelete
  29. கவிதை....நல்லா இருக்கு.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள். வலியும், வேதனையும், அவமானமும், இழப்புக்களில் அல்ல ஏற்பில் வருத்துவன. எண்ண, சுமையாய் கழுத்தை இறுக்குவன வாழ்க்கை நுகத்தடி. வடிவாக காட்டப்பட்டிருக்கிறது. அதற்காக வலிக்காதா என்ன?

    ReplyDelete
  31. முழுக்கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  32. இடம்பெயர்த்தெடுக்கப்பட்ட ஒரு முதுமையின் தவிப்பை ஏக்கத்தை உணர்த்தும் வரிகளெனக் கொள்கிறேன் ஹேமா. பகிரவும் துணையற்றத் தனிமை மிகவும் கொடுமை. வார்த்தைகளில் வியாபித்திருக்கிறது ஒடுக்கப்பட்ட முதுமையின் இயலாமை. மனம் கனக்கிறது ஹேமா.

    ReplyDelete
  33. //காதுகளோ
    நிமிட முட்களோடு மட்டுமே//
    மனதைத் தொடும் வரிகள்..

    ReplyDelete
  34. என்னால் சொல் முடியாமல் அனுபவிக்கிற முதுமையின் உணர்வுகளை ஆழமாக, அழகாகச்
    சொல்லிவிட்டீர்!
    நன்றி சகோதரி!


    ர் சா இராமாநுசம்

    ReplyDelete